மழையின்றி நான் நனைகின்றேன் - மீனு ஜீவா
நான்கு மனங்களுக்கு இடையே மலர்ந்து மணம் பரப்பும் அன்பு, நட்பு, பாசம், காதல் போன்ற இனிய மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்டத்தில் வீசும் சாரல்தான் இந்த மழையின்றி நான் நனைகின்றேன் என்னும் அழகான காதல் கதை.
Episode 1
சூரியன் மெல்ல கிழக்கிலிருந்து சோம்பலுடன் எழுந்து கொண்டிருந்தான். மலைகளின் இராணி என்றழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் பனி விலகாத அந்த காலை வேலையில் ஜாகிங் சென்று கொண்டிருந்தான் பிரணவ்.
பிரணவ் ஆரடி உயரத்தில் அதற்கேற்ற உடல் அமைப்புடன் கம்பிரமாக இருந்தான். மானிறம். ஊடுருவும் கண்கள். அவன் ஓடுவாற்கு ஏற்ப அசையும் அவன் முடிக்கற்றை அவன் முகத்திற்கு தனி கவா்ச்சியைத் தந்துகொண்டிருந்தது.
பிரணவ்விற்கு என்றுமே ஊட்டியின் அழகுமேல் தனி காதல் உண்டு. அவன் ஊட்டியை விட்டுப்போக என்றும் விரும்பமாட்டான். பள்ளிப்படிப்பை ஊட்டி காண்வென்டில் முடித்துவிட்டு தனது BBA & MBA வை கோயம்பத்தூரில் உள்ள பிரபலமான கல்லூரியில் முடித்தான்.
தனது தந்தை நிர்வாகித்துவந்த பரம்பரைத் தொழிலான எஸ்டேட் நிர்வாகத்தை தன் பொருப்பில் எடுத்துக் கொண்டு அதனை வெற்றிகரமாக நடத்தி இன்று பல எஸ்டேட்டிற்கு சொந்தக்காரன்.
அவன் அந்த பார்க்கின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த பொது, "hey doggy.....ஆன்ட்டி உனக்கு நாளைக்கு இன்னோரு பிஸ்கட் பாக்கெட் சேத்து கொண்டுவரேன் இப்போ ஆன்ட்டிக்கு dutyக்கு time ஆச்சு ....விடு டியா்" என்ற குரலால் ஈா்க்கப்பட்டு திரும்பிப் பார்த்தான்.
அங்கே ஒரு பெண் ஐந்தரை அடி உயரத்தில் கொடி போன்ற உடல் அமைப்புடனும் குழந்தை போன்ற முகத்துடன் அழகாக இருந்தாள். அவள் அருகில் ஒரு குட்டி நாய்க்குட்டி உட்கார்ந்து இருந்தது. அதைக் கொஞ்சும் போது அவள் முகம் இன்னும் அழகாகத் தெரிந்தது.
ஏனோ அங்கு நடப்பதை நின்று பார்க்க வேண்டும் போல இருந்தது பிரணவ்விற்கு. அவள் பார்க்காத வண்ணம் நின்று கொண்டான்.
இடுப்புக்கு சற்று மேல்வரை வெட்டப்பட்ட கூந்தல் அதை ஏற்றிப் போனிடெய்ல் போட்டிருந்தாள். அவள் அந்த குட்டி நாயிடம் பேசும் போது அவள் முடி தோலிற்கு இருபுரமும் விழுந்து ஏனோ அழகிற்கே அழகு சோ்த்தது போல தோன்றியது பிரணவ்விற்கு.
"Hmm.... நா இருக்குர லேடீஸ் hostelல pets அலவ்டு இல்ல டியா் இல்லாட்டி நான் உன்ன அங்க கூட்டிட்டுப் போயிருப்பேன். அதனால நீ என்ன பண்ற உன்னோட இடத்துக்குப் போய் சமத்தா இரு. நான் நாளைக்கு உனக்கு 2 பிஸ்கட் பாக்கெட் கொண்டுவரேன் பாய்" என்று அந்த நாய் குட்டியிடம் விடைபெற்றாள்.
ஏனோ அவள் போவதைப் பார்க்கும்போது போகாதே போகாதேனு பாடனும் போல இருந்தது பிரணவ்விற்கு. அவன் தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான்.
திரும்பி வரும்போது அவன் எண்ணம் முழுவதும் அவளே ஆக்ரமித்து இருந்தாள். அவள் யார் என்ன என்று எதுவும் தெரியாது இருந்தாலும் மனம் அவளையே சுற்றி வந்தது. dutyக்குப் போகனும்னு சொன்னாளே......hostelல இருக்கன்னு சொன்னாளே......எங்கேயோ work பண்ற போல. அவளைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது.
பங்களாவிற்குள் நுழையும் போதே அம்மா கார்த்திகாவின் குரல் high pitchஇல் கேட்டது. அதைக் கேட்டதும் பிரணவ்விற்கு சிரிப்பு வந்தது.
கார்த்திகா பெண்ணியம் பேசுபவா் பெண்களுக்கு ஒரு அநீதி என்றால் பொங்கி எழுந்து விடுவார் அதற்காக எப்போழுதும் கண்டிப்பாக இருப்பார் என்றில்லை. இப்போது குட அவா் கணவாரிடம் high pitchஇல் கத்திக் கொண்டிருக்கவில்லை யாரையோ high pitchஇல் பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
பிரணவ் சிரிப்புடன் அவா்கள் அருகில் சென்று சோபாவில் அமா்ந்து கொண்டான்.
"வா பிரணவ் ஜாகிங் எல்லாம் முடிஞ்சாச்சா.." என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அப்பா ஜீவாநந்தம்.
"ம்ம்... முடிஞ்சது அப்பா. அப்புரம் அம்மா இன்னைக்கு யாரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்காங்க"
"டேய் குட்டிப் பையா இன்னைக்கு உனக்கு உப்பு போட்ட காப்பிதான்" என்று மிரட்டிவிட்டு சமயலறைக்குள் சென்றார் கார்த்திகா.
அதைக் கேட்டதும் சத்தமாக சிரித்தான் பிரணவ். கார்த்திகா இப்படிப் பேசுவது பிரணவ்விற்கும் ஜீவாநந்த்திற்கும் ரொம்ப பிடிக்கும். திருமணமான இத்தனை வருடத்தில் ஒரு முறைகூட ஜீவாநந்தம் கார்த்திகா வை கடிந்து பேசியதில்லை. கார்த்திகாவிற்கு அவா் நினைத்ததை செய்ய முழுசுதந்திரம் கொடுத்திருந்தார். அதை எந்த கூழ்நிலையிலும் தவராக பயன்படுத்தியதில்லை கார்த்திகா.
என்ன ஒன்று சில நேரங்களில் வழியச்சென்று ஏதாவது பிரச்சணையை இழுத்துக்கொண்டு வருவார். அதை சமாளிக்கத்தான் பிரணவ்விற்கும் ஜீவாநந்த்திற்கும் போதும் போதும் என்றாகிவிடும். அதற்காக அவா்கள் கார்த்திகா வை சில நேரங்களில் செல்லமாக கடிந்து கொள்வா்.
பிரணவ் எஸ்டேட் போவதற்கு தாயாராக கிளம்பி கீழே வந்தான். டையினிங் டேபிளில் சென்றமா்ந்தான். கார்த்திகா பரிமாரினார். நல்லவேளையாக உப்புக் காப்பி இல்லை நன்றாகக்தான் இருந்தது.
"பிரணவ் அந்த எக்ஸ்போர்ட் சம்பந்தமா mail அனுப்பனும்னு சொன்னியே அனுப்பிட்டியா"
- மழையின்றி
- நான்
- நனைகின்றேன்
- மீனு ஜீவா
- mazhaiyindri
- naan
- nanaigindren
- meenu jeeva
- Family
- Romance
- SoftRomance
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee