Chillzee KiMo Books - பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா கைலாஷ் : Pachai kiligal tholodu - Chitra Kailash

(Reading time: 2.75 - 5.5 hours)
பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா கைலாஷ் : Pachai kiligal tholodu - Chitra Kailash
 

பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா கைலாஷ்

கிராமத்து மண் வாசனை வீசும் இனிய காதல் கதை

 

1

பச்சை பசிய  வயல்கள் கண்  எட்டின தூரம் வரை தெரிந்தது ,கண்ணுக்கு வெகு குளிர்ச்சியாக இருந்தது ,கான்கிரீட்  கட்டடங்கள் ,வாகன நெரிசல் மற்றும் புகை மட்டுமே பார்த்தவளுக்கு இது   வெகு இதமாக   இருந்தது .கார்  கண்ணாடியை இறக்கி  வீசும் காற்றை முகத்தில் வாங்க ஆசையாக இருந்தது .

   தொட்டால்  ஓட்டிக்கொள்ளும்  கருங் கருப்பில் ,விழித்திரையும் ,  பற்களும் வெண்மையாக  தெரிய கார் ஓட்டிக்கொண்டிருக்கும் வீரா ,

அவனை அரை கண்ணால் பார்த்தபடி தன் அருகில்  சுவாதீனமாய்  சாய்ந்திருக்கும்  அவள் கணவனை  கேட்போமா என்று பார்த்தாள்  மதுவந்தி ...

 ஏனோ  அதில் ஒரு தயக்கம் இருந்தது ,ஒருவேளை  கல்யாணம் ஆன  இந்த சில மணி நேரங்களில் அவனுடன் பேசியதே சில வார்த்தைகள் தான் என்பதாலா ...

இல்லை அவனையே சில மணி நேரங்களாக தான் அவளுக்கு தெரியும் என்பதாலா ...

இங்கே பெருசா ஒரு கொசு வத்தி அதாங்க கடந்த கால நினைவுகளுக்கு போவோமா .....

   மதுவந்தி  சோபியா வோட பேத்தி ,சோபியா என்று பேர பசங்களால் செல்லமாக அழைக்கப்படும் அன்னபூரணி  பாட்டி ,கல்யாணம்  தாத்தாவோட  மனைவி 

 மிக  நேர்த்தியாக  உடை , மற்றும் ஒரு முடி கலையாமல் போடும் அந்த அழகிய கொண்டை , ஒரு நாளைக்கு  மூன்று முறை உடை மாற்றும் சுபாவம் ,ஆகிய  சிறப்பான குணங்களுக்காக ,தாத்தாவிற்கு  பிடித்த  சோபியா  லோரன்ஸ்  பேரை பாட்டிக்கு  சூட்டி ,பின்னே  பேர் சொல்ல தானே பிள்ளைகள் ,அதை  கொஞ்சம்  மாத்தி செல்ல பேர் சொல்ல பேர பிள்ளைகள்  அல்லவா , அழைக்கும்  பேர பிள்ளைகள்  வரிசையாக  ஐந்து பேர்கள் ......

முதலில் சம்மந்தம் (தாத்தாவோட  அப்பா  பேரை வைக்க வேண்டிய கட்டாயம் ) சுருக்கமாக சாம் ,இரண்டாவது  தியாகராஜன் (அம்மா வழி தாத்தாவின் பேர் வைக்க வேண்டிய கட்டாயம் ) சுருக்கமாக தேக் , மூன்றாவதாக  நம் கதாநாயகி  மதுவந்தி  ,சுருக்கமாக  மது ,அண்ணன்கள்  ரகசியமாக  கூப்பிட்டு வெறுப்பேற்றும் பேர் ,அதே நீங்க சொல்வதே தான் ....யோசிச்சத  ஞாபகம் வச்சுக்கோங்க ,பின்னாளில்  ஹீரோ கூப்பிடும் போது  சரி பார்த்துக்கலாம் ...

நான்காவது  பிரியா ,சுருக்கமாக பிரி ,ஐந்தாவது  தீபா சுருக்கமாக டிஃப்ஸ் ....

இதில்  முதல்  ரெண்டு பசங்களும் ' பெரியப்பா  சண்முகத்துடைய'  பசங்கள் 

மது' கண்ணன்' என்னும்  நடு மகனுடைய  ஒரே  செல்ல பெண் 

பிரி ,டிஃப்ஸ் ' கடைக்குட்டி பட்டாபி  சித்தப்பாவுடைய'  மகள்கள் ...

இந்த  பெரிய குடும்பம் மொத்தமும்  மைலாப்பூரில்  ஒரு பெரிய  வீட்டில்  கூட்டு குடும்பமாக  வசிக்கிறார்கள் , வீடு  தாத்தா காலத்தில்  கட்ட பட்ட , அவ்வப்போது  சிறு சிறு மாற்றங்கள் செய்த  ஒரு பழமையும் புதுமையும் கலந்த கலவை , சோபியா பாட்டியை போல 

பாட்டிக்கு  பக்கத்தில் இருக்கும் அனுமார் கோவிலுக்கு போக பிடிக்கும் ,அதே சமயம் ஒலிம்பிக்ஸில்  வெண்கலம் வாங்கிய தங்க மங்கையை  பாராட்டவும்  பிடிக்கும் 

அருமையாக  சமைப்பது ,மிக பெரிய கோலங்களை அனாயசமாக போடுவது ,தாத்தாவிற்கு  மடிப்பு கலையாத அங்கவஸ்த்திரம் , சலவை வேஷ்ட்டி  தயாராக வைத்திருந்து  கொடுப்பது ,அதே சமயத்தில்  பேத்தியுடைய  ஜீன்ஸ் டீ ஷிர்ட்டை  பாராட்டுவது  என்று  சகலகலாவள்ளி  பாட்டி ...

பாட்டியை தவிர மிச்சம் இருக்கும் மூன்று பெண்மணிகள், முதலில் பெரியம்மா பாரு எனும் 

 பர்வதவர்தினி  ,மது  பாரு பெரியம்மா இந்த அண்ணனை எனும் போதெல்லாம் , பெரியம்மா பேரை சொல்லாதே என்று கர்மா சிரத்தையை திட்டுவது மதுவின் ஐயோ பாவம் சாது அம்மா  கல்யாணி ,மூன்றாவது  தன்  இரண்டாவது  மகனுக்கு அப்புறம் பத்து வருடம் இடைவெளி விட்டு தாத்தா பாட்டி பெற்ற  சின்ன சித்தப்பா , அண்ணன்  சாமை விட  பதினைந்து வயதே பெரிய சித்தப்பாவிற்கு  ஏத்த சின்னம்மா வதந்தி சாரி  வசந்தி...

அப்பாடா   இன்ட்ரோ  முடிந்தது .

அத்தனை  வயது  மற்றும் குண  வித்யாசங்கள் இருப்பினும்  தாத்தா பாட்டி தலைமையில்  வெகு ஒற்றுமையாய் வாழும் குடும்பம் .

நண்டு சிண்டுவில்  இருந்து  சோபியா வரை எல்லோருக்கும் பிடித்தது  கிரிக்கெட் ,சென்னையில் மேட்ச் நடந்தால்  கட்டு சாத  கூடையுடன் பெவிலியன் அருகே  பேட்மேன்  வரும் போதும் போகும் போதும்  கை காட்டும் ஒரு பெரிய குடும்பத்தை  டிவி யில்  பார்த்து இருப்பீர்கள்  , அது நம் பாரத விலாஸ் தான் ....

அதனால் தானோ  சச்சின் என்ற பெயர் தாங்கிய  சாப்ட் வேர்  என்ஜினீயர் வரன் என்று பாரு பெரியம்மா   தன் மூன்று விட்ட , நான்கு விட்ட  சொந்தத்தில் இருந்து , சமீபத்தில்  கலந்து கொண்ட கல்யாணத்தில்  கண்டு பிடித்த  கொண்டு வந்த வரன் எல்லோருக்கும்  பிடித்து போய்  மதுவுக்கு  பேசி முடிக்க பட்டது .

பிக்கல் பிடுங்கல் இல்லாத அம்மா அப்பா மட்டுமே உள்ள ஒரு  உதாரண புருஷனாக தான் அவன் தெரிந்தான் , 

ஓரளவு  சொந்தம் , நல்ல வசதியுடன் சென்னைக்கு அருகில்  பெங்களூரில்  அவர்கள்