(Reading time: 3.75 - 7.25 hours)
ரிங்கா ரிங்கா ரோசஸ் - சுபஸ்ரீ முரளி : Ringa ringa roses - Subhashree Murali
 

ரிங்கா ரிங்கா ரோசஸ் - சுபஸ்ரீ முரளி

 இரண்டு சிறுமிகள் தங்கள் உயிரை குடித்த  மனித அரக்கனை ஆவியாக உருவெடுத்து பழிவாங்கும் கதை.

 

ரிங்கா ரிங்கா ரோசஸ் 1

  

இரவு எட்டு மணி  திலக் சப்பாத்தியை பிட்டு குருமாவில் குளிப்பாட்டி வாயில் போட்டான். “உப்பு கொஞ்சம் ஜாஸ்தி” என முறையிட்டவனுக்கு “அப்படியாவது கொஞ்சம் ரோஷம் வரட்டுமே” காட்டமாக அம்மாவிடமிருந்து பதில் வந்தது.

  

திலக் பி.ஈ முடித்து இரண்டு வருடங்களாயிற்று. இன்னமும் வேலை தேடுவதையே தன் முழு நேர வேலையாக கொண்டவன். அப்பா சுவாமிநாதன் சுய பிஸ்னஸ். அம்மா மங்களம் வீடே உலகம்.. இவனின் ஒரே தங்கை அபர்ணா பி.ஈ கடைசி வருடம் படிக்கிறாள். நல்ல படிப்பாளி. அவளிடம் கர்வமும் திமிரும் கொட்டிக் கிடந்தது. 

  

இவர்களோடு திலக்கின் அப்பாவின் மூத்த சகோதரர் சிவராமன் இங்கு வசிக்கிறார்.   

  

அவன் அப்பாவும் தங்கையும் வந்து டேபிளில் அமர “ராகுவும் கேதுவும் இன்னிக்கு கூட்டணியா . . செத்தடா நீ” என மனதில் நினைத்தபடி சப்பாத்தியை சாப்பிட்டபடி தன் செல்போனில் கவனம் செலுத்தினான்.

  

“திலக் உன் தங்கை உன்னவிட வயசுல சின்னவா . .” என அப்பா ஆரம்பித்தார்

  

கோபத்தை அடக்கியவன் “வயசுல சின்னவளா இருக்கறதுனால தான் தங்கை . . இல்லனா அக்காப்பா” என்றான் போனிலிருந்து கண்ணை எடுக்காமல்.

  

“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல . . படிச்சி முடிச்சி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் வேலைக்கு போகாம தண்டச்சோறு திங்கற   . .   . . உன் தங்க கேம்பஸ் இன்டெர்வியூல செலக்ட் ஆயிட்டா . . இங்கிலீஷ்ல வெளுத்து வாங்குறா . . உனக்கு ரெண்டு வரி ஒழுங்கா இங்கிலீஷ் பேச தெரியுதா? ” என பேசிக் கொண்டிருந்தவரை இடைமறித்த திலக் மனம் கொந்தளித்தது. 

  

வேலைக்குப் போக அவன் தயார்தான் ஆனால் கிடைத்தால்தானே. “இதபடி அபர்ணா” என தமிழ் நாளிதழை தன் தங்கை முன் திலக் நீட்டினான்.

  

“எனக்கு தமிழ் தெரியாது”  பெருமையாக தோளை குலுக்கியபடி சொன்னாள்.

  

சமையல் செய்துக் கொண்டிருந்த அங்கம்மாவை அழைத்தான் திலக் “இத படிங்கம்மா” அதே நாளிதழை தந்தான்.

  

“என்ன தம்பி எழுத படிக்க தெரியாத என்கிட்ட போய் காட்டுறீங்க” என சொல்லி நகர்ந்தாள் சமையல் செய்பவள்.

  

“ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?” என அப்பாவையும் தங்கையையும் பார்த்து ஏளன சிரிப்பை சிந்தினான்.

  

“அப்பபபா” கத்தினாள் அபர்ணா.

  

“டென்ஷன் ஆகாத தங்கச்சி . . ” என அழுத்தம்திருத்தமாக கடைசி வார்த்தையை உச்சரித்தான்.

  

“டேய் வேண்டா” என கடுப்பானாள் அபர்ணா

  

“நான் ஒரு கதை சொல்லட்டா” என ஆரம்பித்தான்

  

“மனசுல என்ன விஜய்சேதுபதினு நினைப்பா?”  திமிராக கேள்வியை கக்கினாள்.

  

“கதய கேளு முதல்ல . . . இங்கிலாந்துல பதினெட்டாம் செஞ்சுரி வாக்குல” ஆரம்பித்தவனுக்கு ”யேய்ய்யவ்” என  பெரிதாக ஏப்பம் நடுவில் குறுக்கிட இரு