பல்லவி இல்லாமல் பாடுகிறேன் - பிந்து வினோத்
அன்புக்கரசன் ஒரு பாப் பாடகன். அவன் பல்லவியை மனதுக்குள் விரும்புகிறான்.
ஆனால் பல்லவி ஜேம்ஸை விரும்புகிறாள். ஜேம்ஸ் பல்லவிக்கு ஏற்றவன் இல்லை என்பது தெரிந்து பல்லவியின் மனதை மாற்ற முயற்சி செய்கிறான் அன்பு.
அவனின் முயற்சி வெற்றிப் பெற்றதா? பல்லவி அன்பின் காதலை உணர்வாளா? கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
ஐந்து வருடங்களுக்கு முன்:
பல்லவிக்கு அப்போது 22 வயது.
பல்லவியை விட இரண்டு வயது சிறியவன் அவள் தம்பி நரேன். நரேனின் நண்பன் அன்புக்கரசன் பல்லவி, நரேனை விட வயதில் பெரியவன்.
நரேனும், அன்பும் ஒன்றாக பாய்ஸ் ம்யூசிக் பான்ட் என்ற பெயரில் இன்றைய தலைமுறைக்கு பிடிக்கும் பாப் பாடல் இசைக்குழு ஒன்று தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் முதல் ஆல்பம் ரிலீஸ் செய்யும் முயற்சியில் மும்முரமாக இறங்கி இருந்தார்கள்.
அன்று, பல்லவி எதனாலோ சோகமாக இருந்தாள்.
தங்களுடைய பாடலை பாடி பயிற்சி செய்துக் கொண்டிருந்த அன்பு, நரேன் இருவருமே அவளை கவனித்தார்கள்.
அன்புக்கு பல்லவி மீது தனி ஈடுப்பாடு உண்டு. அவளை மனதுக்குள் பல வருடங்களாகவே காதலித்துக் கொண்டிருக்கிறான்.
பல்லவி அதை உணர்ந்ததாகவே தெரியவில்லை.
அவள் அவளுடன் காலேஜில் படித்த ஜேம்ஸை விரும்புவது அன்பிற்கும் தெரியும்.
ஜேம்ஸ் மீது அன்புக்கு மட்டுமில்லை, நரேனுக்கும் நல்ல எண்ணம் கிடையாது.
ஜேம்ஸ் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவன். ஆனால் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுபவன். பெண் என்றாலே பல் இளிப்பவன்.
பல்லவி ஜேம்ஸை நம்பினாள். அவனைப் பற்றி நரேன் எடுத்துச் சொன்னது எதுவும் அவள் காதில் விழவே இல்லை.
எப்படி பல்லவிக்கு ஜேம்ஸின் உண்மை முகத்தை காட்டுவது என்ற வழி புரியாமல் இருந்தான் அன்பு!
“அன்பு, இந்த ஒரு பாட்டை திரும்ப ப்ராக்டீஸ் செய்யலாமா?” நரேன் அன்பிடம் கேட்டான்.
அன்பு பல்லவியை கண்களால் நண்பனுக்கு சுட்டிக் காட்டினான்.
“அவளுக்கு என்ன?” அக்கறை இல்லாமல் கேட்டான் நரேன்.
“உன் அக்கா சோகமா இருக்க மாதிரி இருக்கு நரேன்.”
“இருந்தா இருந்துட்டு போகட்டும். சொன்னா எதையும் கேட்க மாட்டா. நாம நம்ம வேலையை பார்ப்போம் அன்பு.”
“அப்படி சொல்லாதே நரேன். என்னன்னு கேளு.”
அன்புக்காக விருப்பமே இல்லாமல் பல்லவியிடம் விசாரித்தான் நரேன்.
“எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க பல்லவி?”
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Bindu Vinod
- Bindu
- Vinod
- Family
- Romance
- Tamil
- Drama
- Books
- KDR
- KiMo_Only_Specials
- shortRead