Chillzee KiMo Books - காற்றுக்கென்ன வேலி - பிந்து வினோத் : Kaatrukkenna veli - Bindu Vinod

(Reading time: 15 - 30 minutes)
காற்றுக்கென்ன வேலி - பிந்து வினோத் : Kaatrukkenna veli - Bindu Vinod
 

காற்றுக்கென்ன வேலி - பிந்து வினோத்

வாட்ஸ்அப்பில் வந்த ஒரு மெசேஜ் படித்து எழுதிய கதை இது!!! கதைக்கான ஸ்பார்க் எங்கே இருந்து எல்லாம் உருவாகிறது என்று யோசிக்கும் போது ஆச்ர்ய்மாக தான் இருக்கிறது :-)

 

வீட்டை விட்டு கிளம்பும் முன் எப்போதும் பார்ப்பதுப் போல் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்ட இந்துமதியின் கண்ணில் தலை உச்சியின் வலது பக்கம் தெரிந்த நரை முடி பட்டது.

  

நரையா??? அவளுக்கா???

  

வருடங்கள் செல்ல செல்ல வயது ஏற தான் செய்யும் ஆனாலும் நரைக்கும் அளவிற்கா அவளுக்கு வயதாகி விட்டது?

  

சிந்தனையுடனே காரில் ஏறி அமர்ந்தாள். டிரைவர் காரை கிளப்ப, முகத்தில் அடித்த காற்றை ரசித்தப் படி கண்களை மூடிக் கொண்டாள்.

  

தானாக ‘அவனின்’ நினைவு வந்தது...

  

எத்தனை வருடங்கள் ஆனால் என்ன, அவளை வருத்தும் அந்த நினைவு அவளை விட்டு அகலப் போவதில்லை.

  

பதினேழு வருடங்கள் ஆகி விட்டன அவனை பார்த்து!

  

அவன் அவளிடம் தன் காதலை சொன்ன அந்த நொடி...!

  

அவள் வாழ்விலேயே மிக மகிழ்ச்சியாக உணர்ந்த நொடி அது...!

  

அவள் உடனே தன் சம்மதத்தை சொல்ல வாயை திறக்க,

  

வேண்டாம் வேண்டாம்... அவசரப் படாதே... ஒரு இரண்டு மாசம் பொறுமையா யோசி... நம்ம க்ளாஸ்மேட் சுமதிக்கு இரண்டு மாசத்துல மதுரையில கல்யாணம். அப்போ சொல்லு உன் பதிலை...!” என்று கண்கள் மின்ன சொன்னான் அவன்...

  

அவன் அதை சொன்னப்போது, அந்த இடைப்பட்ட காலம் அவர்கள் இருவரின் வாழ்வையும் தலைகீழாக மாற்ற போகிறது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை!!!

  

அதை விதி என்று தான் சொல்ல வேண்டும்???!!! வேறு என்ன...!!!

  

எதிர்காலம் பற்றி தெரியாமல், அவன் காதலை சொன்னதால் மனதில் சந்தோஷம் மின்ன ஊருக்கு சென்றவள் ஒரே வாரத்தில் மொத்த சந்தோஷத்தையும் மறந்துப் போனாள்.

  

ஒரு விபத்தில் அவளுடைய பெற்றோர் இறந்துப் போனார்கள்.

  

அதுவரை கல்லூரி முடித்திருந்தாலும் சிறு குழந்தையாக துள்ளி திரிந்துக் கொண்டிருந்தவள், திடீரென வீட்டின் மூத்தவள் என்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது.

  

அவளே விழித்து நின்ற போது, அவளின் சின்ன தம்பியும் தங்கையும் ஒன்றும் புரியாமல் அவளின் பின்னே ஒளிந்துக் கொண்டதில் அதிசயம் எதுவுமில்லை...

  

அப்போதே தன்னுடைய காதலை குழி தோண்டி புதைக்க முடிவு செய்தாள்...!

  

அதன் பின் அவனை சந்திக்க மீதி இருந்த ஏழு வாரங்கள் மிக மிக மிக மெதுவாக சென்றன...!

  

சுமதியின் கல்யாணத்தில் அவனை சந்தித்தப் போது, யோசித்து முடிவு செய்திருந்த ‘எனக்கு உங்களைப் பிடிக்கலை, சாரி’ ஐ அமைதியான