Chillzee KiMo Books - இதயத்திலே ஒரு கனவு - Chillzee Originals - Idhayathile oru kanavu - Chillzee Originals

(Reading time: 2.75 - 5.5 hours)
இதயத்திலே ஒரு கனவு - Chillzee Originals - Idhayathile oru kanavu - Chillzee Originals
 

இதயத்திலே ஒரு கனவு - Chillzee Originals

பத்து வருடங்களுக்கு முன் ஜெய் மீதான தன் காதலை வேண்டாம் என்று மறுத்து விட்டாள் புவனேஸ்வரி.

இருவரும் மீண்டும் சந்திக்கும் போது அவர்கள் இருவரின் நிலையும் தலைக் கீழாக மாறி இருக்கிறது. புவனேஸ்வரி இப்போதும் தன் மனதில் கனவாக ஜெய் மீதான காதலை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறாள். ஆனால் ஜெய் அவள் பக்கமே வராமல் தவிர்க்கிறான்.

தடுமாறும் மனநிலைக் கொண்டு, தன்னையும் தன் காதலையும் வேண்டாம் என்ற புவனேஸ்வரி தனக்கும் வேண்டாமென்று என்று ஜெய் இப்போது நினைக்கிறான்.

புவனேஸ்வரியின் மனதில் இருக்கும் காதலும், ஜெய்யின் மனதில் இருக்கும் கோபமும் நேருக்கு நேர் மோதும் போது, எது ஜெயிக்கும்? காதலா, கோபமா?

 

 

இதயத்திலே ஒரு கனவு

  

அத்தியாயம் 01

  

ஜெய் தனது மொபைலில் ஐந்தாவது முறையாக நேரம் பார்த்தான். புவனேஸ்வரி இன்று லேட். இதுவரைக்கும் அவள் ஒருத் தடவை கூட லேட்டாக வந்தது கிடையாது.

  

பொறுமை இல்லாதவனாக பெஞ்சில் அமர்ந்திருந்தப் படி அவனையும் அறியாமல் கால்களை ஆட்டினான். நேரம் ஏன் இப்படி நத்தை வேகத்தில் செல்கிறது என்பதை தாண்டி வேறு எதையாவது யோசிக்க முயன்றான்.

  

அவனும் அவளும் எப்போதும் சந்திக்கும் இடம் அது! அவன் அமர்ந்திருந்த பெஞ்ச் மென்மையான இளஞ்சிவப்பு பூக்கள் மலர்ந்து மணம் வீசும் புதர்களின் பின்னால் மறைக்கப்பட்டிருந்தது.

  

வெட்கப்படும் போது புவனேஸ்வரியின் முகமும் இதே பூக்களின் நிறமாக தான் மாறும்.

  

தலையை ஆட்டிக் கொண்டு வேறு பக்கம் பார்க்க முயன்றான். இந்த பூக்கள் புவனேஸ்வரியை பற்றியே யோசிக்க வைக்கிறது! எதைப் பார்த்தாலும் அவனுக்கு அவள் நினைவு தான் வருகிறது! அவள் வந்தால் மட்டுமே அவனால் இயல்பாக இருக்க முடியும்.

  

அவனது விரல்கள் மீண்டும் மொபைல் பக்கம் தானாக சென்றன. ஆனால் பக்கத்தில் கேட்ட இலைகள் மிதிப்படும் காலடிச் சத்தம் ஆறாவது முறையாக டைம் பார்க்கும் வேலையில் இருந்து அவனை காப்பாற்றியது!

  

காலடி ஓசைக் கேட்டப் பக்கம் திரும்பியப் போது காற்றில் சிலுசிலுத்துக் கொண்டிருந்த அவனது தலைமுடி அவனின் கண்களில் வந்து விழுந்தது. அவன் அதை பற்றிக் கவலைப் படவில்லை. இந்த உலகில் அவனுக்கு பிடித்த காட்சி அவனின் எதிரே தெரிந்தது.

  

வெள்ளை நிற சுரிதாரில் தேவதையாக அவள் வந்துக் கொண்டிருந்தாள்.

  

“ஈஷ்.”

  

அவள் அவனை வந்து சேரும் வரைக்கும் காத்திருக்காமல் ஓடாத குறையாக அவள் வரும் திசை நோக்கி வேகமாகச் சென்றான்.

  

அவள் இன்னும் அவனைப் பார்க்கவில்லை. அந்த பெஞ்ச் நோக்கி வரும் பாதையில் முட்கள் இருக்கும் என்பதால் தலையை குனிந்து கவனமாக பார்த்து நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.

  

இன்னும் வேகத்தை அதிகமாக்கி அவளை நோக்கி சென்றான்.

  

அவள் பக்கம் சென்ற பிறகும் வேகத்தை குறைக்காமல் அதே வேகத்துடன் அவளை கட்டி அணைத்துக் கொண்டான். பேசவோ, விலகவோ அவளுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவளின் இதழ்களை தன் இதழ்களால் மூடினான்.

  

அவளின் உதட்டை ஸ்பரிசித்தப் பிறகு தான் அவனால் இயல்பாக மூச்சு விடக் கூட முடிந்தது. அவளை விட்டு பிரிந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு நரகம் தான்!

  

அவனின் உதட்டினால் மூடப் பட்டிருந்த அவளின் உதடுகள் மெல்ல அசைந்தன. அவன் அவளை விடுவிக்காமல் தன் முத்தத்தை