நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - சசிரேகா
முன்னுரை
அநாதைகளாக விடப்பட்ட நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் நடக்கும் இன்னல்களும் துன்பங்களும் மகிழ்ச்சியும் காதலும் அடங்கிய கதையிது. உணர்வுகள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் இது ஒரு கற்பனை கதை
பாகம் 1
25 வருடங்களுக்கு முன்பு…
ஊட்டி
ஒரு இளம் காதல் ஜோடி பூங்காவில் அமர்ந்து எதிரே இருந்த மலர் செடிகளை பார்த்த வண்ணம் குளிருக்கு இதமாக ஒருவரை ஒருவர் நெருக்கமுடன் அணைத்தபடியே தங்கள் காதலை அழகாக வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.
”நீயில்லாம நான் இல்லை என்னிக்குமே நான் உன்கூடவே இருக்கனும்” என கார்த்திக் சொல்ல அதற்கு அவனது காதலி ரேவதியோ
”நானும்தான், இந்த நாள் போலவே எல்லா நாளும் நாம சந்தோஷமா இருக்கனும் கார்த்திக்”
”நம்ம காதல் ஜெயிக்கனும் ரேவதி”
”கண்டிப்பா ஜெயிக்கும்”
“நம்ம வீட்ல சம்மதிப்பாங்களா”
”அவங்களோட சம்மதத்தோடவே நமக்கு கல்யாணமும் ஆகும்”
”அப்படி நடந்தா இந்த உலகத்திலேயே நான்தான் பெரிய அதிர்ஷ்டசாலி”
”நீங்க எனக்கு கிடைச்சா நான் பாக்கியசாலியாயிடுவேன்“
”கண்டிப்பா நம்மளோட இந்த 3 வருஷ காதலுக்கு நாளைக்கு ஒரு முடிவு கிடைச்சிடும்”
”நாளைக்கா”
”ஆமாம் எத்தனை நாளுக்குதான் இப்படியே யாருக்கும் தெரியாம நாம காதல் செய்றது, நம்ம காதல் புனிதமானது நம்ம காதலை மத்தவங்க தப்பா நினைக்கறதுக்குள்ள அதுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்கனும், உனக்கும் என் மனைவிங்கற அடையாளத்தை கொடுக்கனும்னு ஆசைப்படறேன் ரேவதி, இதுல உனக்கு சம்மதமா”
”கண்டிப்பா எனக்கு சம்மதம் கார்த்திக் நானும் நாளைக்கே என் வீட்ல நம்ம காதலை பத்தி சொல்லத்தான் போறேன் ஆனா அவங்க ஏத்துக்குவாங்களான்னு தெரியலை”
”ஏத்துக்குவாங்க ஏத்துக்கலை, நாம நம்ம கடமையை செய்யலாம்”
”கார்த்திக் உங்க மேல நான் கண்மூடித்தனமா காதல் வயப்பட்டிருக்கேன் என்னால உங்களை நினைச்சிக்கிட்டு இன்னொருத்தரோட வாழ முடியாது அப்படி நம்ம காதலை யாரும் ஏத்துக்கலைன்னா தற்கொலை செய்துக்கிறதுதான் இறுதி முடிவா இருக்கும்”
”அப்படி சொல்லாத ரேவதி நாம காதலிச்ச முதல் நாள் மறந்துட்டியா”
”அந்த நாளை மறக்க முடியுமா அது ஒரு பொண்ணான நாள்”
”நாம ரெண்டு பேரும் உறுதியா இருக்கோம் எதுக்காக தற்கொலை பத்தி பேசனும் வேணாமே”
”ஒருவேளை யாரும் ஒத்துக்கலைன்னா இந்த தற்கொலையை காரணமா சொல்லியே வீட்ல சம்மதம் வாங்கிடலாம்னு தோணுது”
”இதை சொன்னா எல்லாருக்கும் கோபம் வரும் ரேவதி, அவங்க நம்மளை வளர்த்த வளர்ப்புக்கு களங்கம் தந்துட்டோம்னு நினைப்பாங்க வேணாம் முதல்ல நாம நம்ம காதலை மட்டும் சொல்வோம் அதுக்கே அவங்க ஏத்துக்குவாங்க, அப்படி ஏத்துக்காம போனா போராடலாம் அதை விட்டுட்டு தற்கொலை எல்லாம் தப்பு, நாம வாழனும் தற்கொலையெல்லாம் கோழைங்க எடுக்கற முடிவு, நீ கோழையா இல்லைல்ல அப்புறம் என்ன கஷ்டப்பட்டாவது பெத்தவங்களை நாம சம்மதிக்க வைக்கலாம் அவங்களால நம்மளை ஏத்துக்காம இருக்க முடியாது சரியா”
”சரி எப்படியோ நாம ரெண்டு பேரும் 100 வருஷம் சந்தோஷமா காதலோட வாழனும் கார்த்திக் அந்த வாழ்க்கைக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன்”
”கண்டிப்பா நீ கேட்கறதை விட அதிகளவு அன்பை நான் கொட்டறேன், நம்ம வாழ்க்கையை பார்த்து மத்தவங்களே பொறாமைப்படற அளவுக்கு நாம வாழ்ந்து காட்டனும், வாழ்க்கையில ஜெயிச்சி காட்டனும் ரேவதி நம்ம காதலோட ஆழம் அன்பு சொல்லப்போனா நம்மளைப் போல காதலிக்க யாராலயும் முடியாது”
”ஆமாம்”
”உன்னை போல பெண்ணொருத்தியை நான் எங்கயும் பார்க்கலை”
”அப்படியா”
”உண்மைதான் ரேவதி எனக்காக எல்லாத்தையும் செய்ய துணிஞ்சவ நீ, வேற யாராவது இப்படியெல்லாம் இருப்பாங்களா மாட்டாங்க, நீ ரொம்ப ஸ்பெஷல் எனக்கு, என் மேல உனக்கிருந்த நம்பிக்கையளவு கூட நான் உன் மேல வைச்சதில்லை, காரணம் நம்ம குடும்ப அந்தஸ்து.
நீ என்னை விட பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவ ஆனாலும் என் தகுதியை நினைச்சிப் பார்க்காம என்னையும் ஒரு ஆளா மதிச்சி காதலிச்சி உன்னை எனக்கு தந்த, அதனாலயே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீ எனக்காக எதையும் செய்வன்னு தெரிஞ்சிதானே நான் உன்னை காதலிச்சேன், அதேசமயம் நம்ம காதலை காரணம் காட்டி உன்னை யாரும் களங்கப் படுத்திடக்கூடாது அதான் முக்கியமே” என இயல்பாக சொல்ல ரேவதிக்கு சுருக்கென்றது. ஏனோ அந்த நொடி அவள் உடல் கூனிக்குறுகி போனது. சட்டென அவனை விட்டு விலகியவள் குழப்பத்துடன் கார்த்திக்கை பார்க்க அவனோ
”என்னம்மா அப்படி பார்க்கற”