Chillzee KiMo Books - தெய்வம் - நந்தினி.S : Deivam - Nanthini.S

(Reading time: 15 - 30 minutes)
தெய்வம் - நந்தினி.S : Deivam - Nanthini.S
 

தெய்வம் - நந்தினி.S

 

 

களுடைய பள்ளிக்கு செல்ல அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்த நான், தொலைபேசி ஒலிக்கும் ஒலிக் கேட்டு எடுத்து பேசினேன்.

  

"ஹல....................."

  

"அம்மா, அம்மா, நான் செவ்வந்தி பேசுறேன். என் பொண்ணுக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சும்மா. நீங்க தான் காப்பாத்தனும்."

  

செவ்வந்தி அந்த பக்கம் அழுக்குரலில் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

  

"என்ன ஆச்சு செவ்வந்தி? சிட்டு எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொல்றாங்க?"

  

"என் தம்பி கூட சைக்கிள்ல போனாம்மா. ஒரு கடன்காரன் லாரியை எடுத்துட்டு வந்து இடிச்சிட்டான். தம்பிக்கு பெரிய அடி இல்லை. ஆனால் சிட்டுக்கு தலையில அடிப் பட்டிருக்கு. உடனே ஆபரேஷன் செய்யனும் லட்ச ரூபாய் வேணும்னு சொல்றாங்க. எனக்கு உங்களை தவிர வேற யாரை தெரியும்? என் உடம்பை செருப்பா போட்டு உழைச்சு காசை தந்திடுறேன் கொஞ்சம் உதவுங்கம்மா!"

  

நான் திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்து ஏழு ஆண்டுகளாக வீட்டில் அனைத்து வேலையும் செய்பவள் செவ்வந்தி. அவளை என்றும் வேலைக்காரியாக நான் நினைத்ததில்லை.

  

அவசரமாக மனதினுள் யோசித்தேன்.