Chillzee KiMo Books - காதல் தெய்வீக ராணி - சசிரேகா : Kadhal deiveega rani - Sasirekha

(Reading time: 9 - 18 hours)
காதல் தெய்வீக ராணி - சசிரேகா : Kadhal deiveega rani - Sasirekha
 

காதல் தெய்வீக ராணி - சசிரேகா

முன்னுரை
பார்த்த உடனே தோன்றும் காதல், பார்க்காமலே தோன்றும் காதல், பார்த்து பழகி உருவாகும் காதல், நட்பில் இருந்து தோன்றும் காதல், புரிதலால் உருவான காதல், உறவின் அடிப்படையில் உருவான காதல், திருமணத்திற்கு பின்பு வரும் காதல் இவை எல்லாம் கடந்து மானசீகமாக ஒரு பெண் ஒரு ஆணை காதலித்தால் அது எப்படியிருக்கும் அந்த மானசீக காதல் ஜெயிக்க அந்த பெண் போராடும் போராட்டமே இக்கதையின் கருவாகும்.

 

 

பாகம் 1

திருச்சி

தென்னந்தோப்பில் கதிரவன் தான் பறித்து வைத்திருந்த முழுதேங்காய்களில் இருந்து நார்களை உறித்து தேங்காய்களை தனியாக அடுக்கிக் கொண்டிருந்தான், தனி ஒருவனாக அவனே அந்த வேலைகளை செய்தான், அந்த தோப்பில் வேறு யாருமே இல்லை அது அவனது தோப்புதான் தனியாக இருக்கிறான், மற்றவர்களை வேலை வாங்க விரும்பாமல் யாரையும் வேலைக்கு சேர்க்காமல் அவனே அனைத்தையும் செய்தான்.

அந்நேரம் அந்த தோப்பிற்கு அவசரமாக ஓட்டமும் நடையுமாக ராகவன் வந்தான். கதிரவனோ ஏதோ சத்தம் கேட்கிறதே என்னவென பார்த்தான் அரக்க பரக்க வந்துக் கொண்டிருந்த ராகவனைக் கண்டும் அமைதியாக தன் வேலையை செய்யலானான். ராகவனோ எதையோ நினைத்து முணுமுணுத்துக் கொண்டே வந்து கதிரவனின் முன் நின்றான்.

”நண்பா கதிரவா” என மூச்சிரைக்க அழைக்க கதிரவனோ வந்தவனை என்னவென்று கூட பாராமல் தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டிவிட்டு தேங்காய் நாரை உறித்துக் கொண்டிருக்க

”யப்பா என்னைப்பாரு முக்கியமான விசயமா வந்திருக்கேன், என்ன ஏதுன்னு கேளுப்பா” என கத்த கதிரவன் ஒரு முறை ராகவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை செய்யலானான்

”இவன் ஒருத்தன், பேசவே மாட்டானே ஆனா, இவனால எனக்கு வேலையாகனுமே எப்படி, இல்லை இன்னிக்கு இவனை விடறதாயில்லை” என மனதுள் நினைத்தபடியே அவனிடம் சென்று அவனது செயலை நிப்பாட்ட அதில் குழப்பமாக முகத்தை வைத்துக் கொண்டு ராகவனைப் பார்த்தான் கதிரவன்

”பேசுடா ஏதாவது பேசு, அப்பதான் என்னால என் பிரச்சனையை சொல்ல முடியும்” என கவலையாக சொல்ல அதில் சற்று சந்தேகப்பட்ட கதிரவனும் மெல்ல வாய்திறந்து

”என்ன” என கேட்டு வைத்தான். அதுவே பெரிது

”அப்பாடா பேசிட்டியா சந்தோஷம் கடைசியா நீ எப்ப பேசின ஒரு 3 மாசம் இருக்குமா”

”என்ன விசயம்” என்றான்

”உனக்கே தெரியும் எனக்கு ஒரு சித்தி இருக்காங்க அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு” என சொல்ல கதிரவனும் ஆமாம் என்பது போல் தலையாட்டினான்

”அந்த சித்தி பொண்ணு அதான் என் தங்கச்சிக்கு கல்யாணம் பேசப் போறாங்களாம்” என சொல்ல கதிரவனும் சரியென்பது போல் தலையாட்டி வைக்க

”முதல்ல வேற ஊர்லதான் வரன் பார்த்தாங்க, அப்பாதான் இந்த ஊர்லயே நல்லவங்க இருக்கறப்ப எதுக்கு வேற ஊர்ல பொண்ணை தரனும் இதே ஊர்ல மாப்பிள்ளையை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க” என சொல்ல கதிரவன் சற்று அச்சத்துடன் பார்க்க அதைக்கண்ட ராகவனோ

”உன்னையில்லை நீ பயப்படாத, வேற ஆளை மாப்பிள்ளையா பார்த்தாச்சி” என சொல்ல கதிரவன் பெருமூச்சுவிட்டு நிம்மதியானான்

”நண்பா நம்ம ஊர்லயே நிறைய பேர் நம்ம அந்தஸ்துல இருக்கானுங்க, நான் ஒரு மாப்பிள்ளையை பார்த்து வைச்சேன், எல்லாம் உனக்கு தெரிஞ்சவன்தான் உன் பக்கத்து நிலத்துக்காரன்”

”சண்முகமா”

”அவனே தான் என் தங்கச்சிக்கு பொருத்தமா இருப்பான்னு அவனை நான் தேர்ந்தெடுத்தேன்”

”சரி”

”எப்பவும் பொண்ணை பார்க்க மாப்பிள்ளைதான் பொண்ணு பார்க்க போவாங்க ஆனா, இந்த முறை என் சித்தப்பா ரிட்டயர் ஆயிட்டாரு அதனால திருவாரூர்ல எதுக்கு இருக்கனும் பொண்ணை கட்டிக்கொடுக்கற ஊர்லயே ஒரு வீடு எடுத்து தங்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு”

”ம்” என்றான் கதிரவன்

”நானும் வீடு தேடறேன் இன்னும் கிடைக்கலை அதுக்குள்ள பொண்ணை பார்க்கனும்னு சண்முகம் அவசரப்படறான் அதனால சித்தப்பா குடும்பத்தையே இந்த ஊருக்கு வர சொல்லிட்டோம்”

”ம்”

”அவங்களும் வராங்க ஆனா அவங்களுக்கான வீடு கிடைக்கலை, வீடு கிடைக்க 1 மாசம் ஆகும், என் வீட்லயே தங்கிக்க சொன்னாலும் சித்தப்பா ஒத்துக்கலை அவர் ஒரு ரோஷக்காரரு, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பௌர்ணமி வேற அந்த