Chillzee KiMo Books - யார் குற்றவாளி? - Chillzee Originals : Yaar kutravali? - Chillzee Originals

(Reading time: 30 - 45 minutes)
யார் குற்றவாளி? - Chillzee Originals : Yaar kutravali? - Chillzee Originals
 

யார் குற்றவாளி? - Chillzee Originals

 

உங்கள் மூளைக்கு சவால் விடும் சிறு, சிறு மர்ம புதிர்கள்.

 

1. மாட்டிக் கொண்ட திருடன்

  

ன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் எனும் தேன் எதிரில் இருந்தவரை கூர்மையாக பார்த்தான்.

  

“பணத்தை எல்லாம் திருடிட்டு போயிட்டான் சார்.... அஞ்சு லட்சம் ரூபாய்...” என புலம்பினார் கண்ணன்.

  

“என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க மிஸ்டர் கண்ணன்...”

  

“இது கோபால், இங்கே எனக்கு டிரைவரா மட்டுமில்லாமல் வலது கை மாதிரி எல்லாம் செய்றவன். இவனுக்கு தான் முழுசா எல்லாம் தெரியும்...” என்ற கண்ணன், அருகே நின்றிருந்த உயரமான மனிதனை பார்த்து,

  

“சார் கிட்ட நடந்ததை அப்படியே சொல்லு கோபால்...” என்றார்.