Chillzee KiMo Books - அப்பா - பிந்து வினோத் : Appa - Bindu Vinod

(Reading time: 45 - 90 minutes)
அப்பா - பிந்து வினோத் : Appa - Bindu Vinod
 

அப்பா - பிந்து வினோத்

 

 

 

வாழ்க்கை

"து  என்னோட  அம்மா...  எழுந்திரு..."  என்று  அடம்  பிடித்து  தன்  தோழி  என்றும்  பாராமல்  மூன்று  வயது  கோமதியை  கிள்ளிய  என்  மகளை  கண்டு  எனக்கு  கோபம்  வரவில்லை  மாறாக  மனதில்  சிறு  சந்தோசம்  தான்  உண்டானது.  என்  மேல்  அவளுக்கு  எவ்வளவு  அன்பு!  நான்கு  வயதான  போதும்  நான்  இருக்கும்  போது  என்னை  விட்டு  ஒரு  வினாடி  கூட  நகர  மாட்டாள்.  அவளை  பொறுத்த  வரை  நான்  அவளுக்கு  மட்டும்  சொந்தம்...

  

வலியில்  அழுத  கோமதியின்  அழுகையில்  என்  சிந்தனை  கலைந்தது.  அவளை  தூக்கி,

  

"போட்டுடா  செல்லம்...  அக்காக்கு  நான்  அடி  கொடுக்குறேன்..."  என்று  ஒரு  பேச்சுக்கு  சொல்லி  அவள்  அழுகையை  நிறுத்த  முயன்றேன்.  அதற்குள்  அவளுடைய  அழுகை  சத்தம்  கேட்டு  கோமதியின்  அம்மா  கவிதா  வரவும்,  நடந்ததை  சொல்லி,

  

"சாரி.."  என்றேன்.

  

"நீங்க  என்ன  செய்வீங்க  குழந்தை  தானே.."  என  சொல்லிவிட்டு  கோமதியை  கூட்டி  சென்றாள்  கவிதா.

  

நடந்ததை  எல்லாம்  பார்த்துக்  கொண்டிருந்த  என்  கணவர்,  "நீ  நித்திக்கு  ரொம்ப  செல்லம்  கொடுக்குறே  அமுதா.."  என்றார்.

  

நான்  என்ன  என்பது  போல்  பார்க்கவும்.  "அவள்  செஞ்சது  தப்பு  தானே...  நீ  உடனே  அவளை  கண்டிக்க  வேண்டாம்?"

  

"ப்ச்...  விடுங்க  அரவிந்த்..  அவள்  குழந்தை  தானே...  வளர்ந்தால்  எல்லாம்  சரியா  போகும்..  எனக்கு  இருக்கிறது  ஒரே  ஒரு  செல்லம்  தானே..."  என்று  நித்திலாவை  தூக்கி  முத்தமிட்டேன்.

  

என்னிடம்  இதை  பற்றி  பேசி  பிரோயஜனம்  இல்லை  என்பதை  உணர்ந்திருந்ததால்,  அந்த  பேச்சை  அத்தோடு  விட்டு  விட்டு,  "இன்னைக்கு  அம்மா  கிட்ட  பேசினேன்  அமுதா..."  என்றார்.

  

அரவிந்த்  என்ன  எதிர்பார்க்கிறார்  என்பது  எனக்கு  தெரியும்.  எனக்கும்  என்  மாமியாருக்கும்  இரண்டு  மாதமாக  பேச்சு  வார்த்தை  இல்லை.  உப்பு  சப்பு  பெறாத  விஷயத்தினால்  வந்த  சச்சரவு  தான்...  எப்போதும்  போல்  நான்  தான்  விட்டுக்  கொடுக்க  வேண்டுமா  என்று  என்  மனம்  சண்டி  தனம்  செய்யவும்,  வேண்டுமானால்  அவரே  பேசட்டும்  என்று  நான்  பேச  முயற்சி  எதுவும்  செய்யவில்லை.  இப்போதும்  என்  கோபம்  தீர்ந்தபாடில்லை,  எனவே,

  

"ம்ம்ம்ம்ம்..."  என்றேன்.

  

என்  முகத்தை  பார்த்து  விட்டு  என்ன  நினைத்தாரோ,  அரவிந்த்  மேலே  எதுவும்  சொல்லவில்லை,  நானும்  எதுவும்  கேட்கவில்லை.

  

நித்திலாவை  பள்ளியில்  விட்டு  திரும்பும்  போது  வீட்டு  வாசலில்  யாரோ  நிற்பது  தெரிந்தது.  அருகில்  வந்ததும்  அது  சஞ்சய்  என  புரியவும்  என்  மனம்  தானாய்  மலர்ந்தது.  சஞ்சய்  என்னுடைய  பள்ளி  தோழி  தாமரையின்  இளைய  சகோதரன்.  என்  பெற்றோர்  வீட்டின்  அருகில்  தான்  அவர்கள்  வீடும்  இருந்தது.  சிறு  வயது  முதலே  அம்மு  அக்கா  என்று  என்  பின்னேயே  சுற்றி  கொண்டு  இருப்பான்.  ரோட்டில்  கண்ணாமூச்சி  முதல்  க்ரிக்கெட்  வரை  என்னுடன்  தான்  விளையாடுவான்.  வளர்ந்த  பின்னும்  பொறியியலில்  எந்த  துறை  எடுப்பது  என்பது  வரை  என்னிடம்