தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - சசிரேகா
முன்னுரை
தப்பான ஒருவனின் பேராசையால் கதாநாயகி தன் கொள்கையின்படி வாழ முடியாமல் தவிக்கிறாள். அவளை அந்த தப்பானவனிடம் இருந்து எப்படி காப்பாற்றுகிறான் கதாநாயகன் என்பதை சொல்லும் கதை இது.
பாகம் 1
ஊட்டி
மலைகளின் ராணி ஊட்டி எங்கு பார்த்தாலும் பனி மேகங்களின் வரவேற்புகள் பார்ப்பவர்களின் கண்ணை மட்டும் இல்லை உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பேரழகி. ஊட்டி பெயரை கேட்டாலே மனதும் உடலும் குளிரும். பனிமேகங்களை தன் ஆடையாக உடுத்திக்கொண்டு மக்களை போக்குகாட்டும் குறும்பு பெண் அவள். குழந்தைகள் காதலர்கள் வயதானவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஊட்டி என்றால் உற்சாகம்தான்.
பள்ளி விடுமுறையோ ஹனிமூனோ உடனே அனைவர் மனதிலும் தோன்றுவது இந்த பனிகளின் அழகு நிறைந்த ஊட்டிதான். பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து சென்றாலும் அவர்களின் பார்வைகளுக்கு இன்னும் அதே அழகுடன் காட்சி தருவாள். பூமிதாயின் எழில் கொஞ்சும் அழகுகளில் இவளும் ஒருத்தி ஊட்டி.
”அம்மா அங்க பாருங்க சூப்பராயிருக்குல்ல” என தீப்தி தன் தாய் வாணியிடம் கேட்டாள்.
தீப்தி பெயருக்கேற்ப ஒளியை போன்ற அழகானவள். மாடர்ன் உலகத்தில் என்றோ அடியெடுத்து வைத்தவள் நவநாகரிக யுவதிகளின் வரிசையில் இவளது இடமும் உண்டு. அவள் செய்யும் எந்த செயலிலும் புதுமை மிளிரும். பேஷன் டிசைனிங் படிப்பில் நல்ல முறையில் தேர்வு பெற்று பல பேரின் பாராட்டுக்களைப் பெற்றவள். பேஷன் உலகத்தில் புகழ் பெற்ற ஜாம்பாவான்களின் பெயர் பட்டியிலில் தன் பெயரையும் இணைக்க போராடும் அழகி. இன்று தன்னை ரசிக்காமல் இந்த பனி மேகங்களை ரசிக்கிறாள்.
”ஆமா சூப்பராதான்யிருக்கு” என்றாள் வாணி.
தீப்தி போன்ற ஒளிரும் அழகை பெற்றெடுத்தவள் அவளின் அடக்கமான அழகான அம்மா வாணி. அவள் அழகில் முக்கால்வாசி வாடகைக்கு எடுத்து பிறந்தாள் தீப்தி. இன்றளவும் தாயின் அழகில் போட்டியிட முடியாமல் அடிக்கடி பொறாமைபடுவாள்.
”நான் இந்த இடத்தில செல்பி எடுக்கப்போறேன்மா” என தீப்தி தனது புது மாடல் போனுடன் வியூ பார்த்தாள்.
”செல்பியா இது சூசைட் பாயின்ட் செல்பி எடுக்கறேன்னு பள்ளத்துல விழுந்துடப்போற ஒரு எலும்பு கூட தேறாது” என பதறினாள் வாணி.
”சே சே நான் கவனமா இருப்பேன்மா” என பிடிவாதமாக இருந்தவளிடம்
”முதல்ல அந்த இடத்தைவிட்டு இங்க வா எனக்கு பயமாயிருக்கு வா உன் பாட்டி வேற குளிர்ல எப்படியிருக்காங்களோ அவங்களை வேற பார்க்கனும் வாம்மா கீழே” என கெஞ்சினாள்.
”அம்மா நான் செல்பி எடுத்துட்டுதான் வருவேன் அதை மட்டும் என் பேஸ்புக் புரொபல் பிக்சர்ல போட்டேன்னா லைக்ஸ் சும்மா அள்ளும்” என அவள் சிரித்தவாறே சொல்ல
”நீ பள்ளத்தில விழுந்தா கூட உன் எலும்புகளை அள்ள முடியாதும்மா கீழ இறங்கி வா” என வாணி அவளது கையை பிடித்து இழுக்கவும் அவளும் இறங்கினாள். அதற்குள் வாணியின் கணவரும் தீப்தியின் அன்பான தந்தையுமான டாக்டர் கேசவன் அங்கு வந்தார்
”என்னம்மா ஆச்சா, வாங்க போலாம் டைம் ஆகுது இன்னும் கொஞ்ச நேரத்தில இங்க பனி மேகம் அதிகமாகுமாம் வாட்ச்மேன் சொல்றான் வாங்க நேரத்தோட ஓட்டலுக்கு திரும்பிடலாம்” என கூப்பிட தீப்தி அவரிடம்
”அப்பா ஒரே ஒரு போட்டோப்பா ப்ளீஸ்பா” என கெஞ்சினாள்
”எப்ப பாரு செல்பி, இதுவே உனக்கு வேலையா போச்சி நாளைக்கு நாம மாப்பிள்ளை வீட்டுக்கு போறோம், இப்ப உனக்கு ஏதாவது அடிப்பட்டா அபசகுணம்னு சொல்வாங்க வேணாம்மா”
”அப்பா ப்ளீஸ்பா இன்னும் நான் ஆளையே பார்க்கலை அதுக்குள்ள மாப்பிள்ளைன்னு சொல்லாதீங்க நீங்க பார்த்தா போதுமா கல்யாணம் செஞ்சிக்கப்போறவ நான், என் முடிவு தான் இங்க முக்கியம் அவனை எனக்கு பிடிக்கலைன்னா யோசிக்கவே மாட்டேன் நான் போயிட்டே இருப்பேன் எனக்கெது பிடிக்குமோ அதுதான் நான் செய்வேன்பா”
”சரிம்மா நான் பார்த்த மாப்பிள்ளை ரொம்ப நல்லவன் நிறைய சொத்துக்கள் இருக்கு நீ ராணி மாதிரி அந்த வீட்ல இருக்கலாம்”
”முடியாதுப்பா நான் பார்த்து எனக்கு பிடிச்சாதான் மேற்கொண்டு பேசனும், அவன் பணக்காரனா இருந்தாலும் சரி பிச்சைக்காரனா இருந்தாலும் சரி எனக்கு பிடிச்சாதான் கல்யாணம் நான் முடிவு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்கப்பா” என சொல்லவும் அதற்கு மேல் பேச எதுவும் தோணாது போக கேசவன் அவளிடம்
”சரிம்மா நாங்க போறோம் சீக்கிரமா வந்து சேரு”
”இருங்கப்பா ஆச்சி ஒரே ஒரு செல்பி எடுக்க எவ்ளோ நேரம் ஆகும் ஒண்ணா போகலாம்” என சொல்லி அவசரமாக ஒரு பெரிய கல்லின் மேல் ஏறினாள்.
பாட்டியின் வற்புறுத்தலின் படி புடவை கட்டியிருந்தாள். அவள் படித்தது பேஷன் டெக்னாலஜி பாட்டி அஞ்சனாதேவிக்கு தன் மகன் போல பேத்தியும் ஒரு டாக்டராக வேண்டும் என்பது கனவு ஆனால் தீப்தி ஆப்ரேஷன் ரத்தம் இவையெல்லாம் தன்னால் பார்க்க முடியாது என வேறு படிப்பு படித்தாள்.
பேஷன் படிப்பு படிப்பதால் அவளது நடை உடை பாவணை அனைத்தும் அதற்கு ஏற்றார்