Chillzee KiMo Books - நேத்துப் பறிச்ச ரோஜா - முகில் தினகரன் : Nethu paricha roja - Mukil Dinakaran

(Reading time: 2.75 - 5.25 hours)
நேத்துப் பறிச்ச ரோஜா - முகில் தினகரன் : Nethu paricha roja - Mukil Dinakaran
 

நேத்துப் பறிச்ச ரோஜா - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

 

அத்தியாயம் 1

 

       “மிஸ்டர் நிர்மல்!”  ரிசப்ஷனில் அமர்ந்திருந்த அந்த அழகுப் பதுமை, தன் லிப்ஸ்டிக் உதடுகளை அழகாகச் சுழித்து அழைக்க,

 

விஸிட்டர்ஸ் சோபாவில் அமர்ந்திருந்த நிர்மல், அவசரமாய் எழுந்து, “யெஸ் மேடம்!” என்றான்.

 

“உங்களை ஜி.எம்.கூப்பிடறார்!” என்று சொல்லி ஜென்ரல் மேனேஜரின் அறையைத் தன் சந்தனக்கட்டை கைகளால் காட்ட,

 

“தேங்க் யூ மேடம்!” என்றபடி அவள் கை காட்டிய அறையை நோக்கி நடந்தான் நிர்மல்.  “இவள் ஏன் சினி ஃபீல்டுக்குப் போகாமல் இங்க உட்கார்ந்து ரிசப்ஷனிஸ்ட் வேலை பார்த்திட்டிருக்கா?...ஹூம்...இவ மட்டும் சென்னையில் இருந்து...ஏதாவதொரு டைரக்டரின் கண்களில் பட்டிருந்தால்...இன்னேரம் பெரிய ஹீரோயினாகி, ஃபீல்டையே கலக்கிட்டிருப்பா!...ப்ச்...” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு, சத்தமில்லாத பெருமூச்சொன்றை பிரசவித்து விட்டு, ஜி.எம்.மின் அறைக்கதவை நாசூக்காக ஒரு விரலில் தட்டினான். 

 

     “யெஸ்...கம் இன்!”  உள்ளிருந்து ஒரு கரகரக் குரல் அவனை வரவேற்க,

 

நிதானமாய்க் கதவைத் திறந்து கொண்டு, பவ்யமாய் உள்ளே நுழைந்து, உள்ளே அந்த அறையின் மத்தியில் போடப்பட்டிருந்த பெரிய மேஜைக்குப் பின் அமர்ந்திருந்த வழுக்கை மண்டை ஜி.எம்.மைப் பார்த்து, “குட் மார்னிங் சார்”என்றான்.

 

அவர் தன் இருக்கைக்கு எதிரிலிருந்த குஷன் சேரைக் காட்ட, “தேங்க் யூ சார்!” சொல்லியபடி அமர்ந்தான்.

 

“நீங்க...“ரகோத்தமன் எண்டர்பிரைசஸ்” தானே?..” கம்ப்யூட்டர் மானிட்டரில் விழிகளைப் பதித்துக் கொண்டே ஜி.எம்.கேட்டார்.

 

“ஆமாம் சார்!” என்றான்.

 

“உங்களோட பர்ச்சேஸ் ஆர்டரை நேத்திக்கே கையெழுத்துப் போட்டு அனுப்பிட்டேனே?...ம்ம்ம்....நீங்க பர்ச்சேஸ் செக்‌ஷன்ல சுமதின்னு ஒரு ஸ்டாப் இருப்பாங்க...அவங்க கிட்டக் கேட்டு வாங்கிக்கங்க!”

 

“ஓ...தேங்க் யூ சார்!” என்றபடி நிர்மல் எழ,

 

“டெலிவரி டைம்...ஒன் வீக் போட்டிருக்கேன்!...பட் நீங்க அதுக்கு முன்னாடியே குடுக்க முயற்சி பண்ணுங்க...என்ன?” ஜி.எம்.தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி துடைத்துக் கொண்டே சொன்னார்.

 

“கண்டிப்பா சார்!” சொல்லி விட்டு ஜி.எம்.அறையிலிருந்து வெளியே வந்த நிர்மல், மீண்டும் அந்த ரிசப்ஷனிஸ்டிடம் சென்றான்.

 

“மேடம்...பர்ச்சேஸ் செக்‌ஷன்?”

 

“இப்படியே லெப்ட்ல போனீங்கன்னா....மாடிப்படி வரும் அதுக்கு ரைட் சைடுல...போர்டே போட்டிருக்கும்!” என்றாள். 

 

அவளுக்கு ஒரு “தேங்க் யூ” வை கொடுத்து விட்டு லெப்ட் சைடில் நடந்தான்.  “இவளெல்லாம் ரெகுலரா பியூட்டி பார்லர் போவாள் போலிருக்கு! இல்லேன்னா இவ்வளவு அழகா இருக்க சான்ஸே இல்லை!” தனக்குள் பேசிக் கொண்டே சென்றான்.

 

பர்ச்சேஸ் செக்‌ஷனுக்குள் நுழைந்ததும், அங்கு முதல் மேஜையில்