கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - சசிரேகா
முன்னுரை
20 வருடங்களாக மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிவந்ததும் இரு நாயகர்கள் தங்கள் நாயகிகளை கைபிடிக்க முயலுகிறார்கள் அவர்களின் முயற்சிகள் என்னவானது என்பதே இக்கதையாகும்.
பாகம் 1.
கோவையில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரன் ஸ்பின்னிங்மில் ஓனர் அறிவுடைநம்பியின் வீட்டில்.
”தப்பு ரெண்டு பக்கமும்தான் இருக்கு எதுக்கு நாங்களே எல்லா பொறுப்புகளை ஏத்துக்கனும். என்னவோ நல்லா பார்த்துக்கறேன்னு தானே எங்க வீட்டு பொண்ணை காதலிச்சி ஏமாத்தி கூட்டிட்டு போனான். எங்க மானம் மரியாதை பேனாக்கூட பரவாயில்லைன்னு அவளும்தானே போனா இப்ப வந்து கண்ணீர் விட்டா என்ன அர்த்தம்” என ஈஸ்வரியின் தந்தை அறிவுடை நம்பி உக்கிரமாக பேசினார். அதைக்கேட்ட அவரது மகன் ஈஸ்வரியின் அண்ணனான துரைசிங்கமோ.
”அவளுக்காக எவ்ளோ செஞ்சிருப்போம், உள்ளங் கையில வைச்சித்தாங்கினோம் கண்ணுல தூசி விழாத மாதிரி பொத்தி பொத்தி வளர்த்தோம் அன்பு கொட்டி வளர்த்தோம் பாசத்துக்கு பதிலாக அவள் எங்களுக்கு செஞ்சது என்ன, பெரிய துரோகம்” என கத்தினான்.
அதைக்கேட்ட ஈஸ்வரியோ கையில் ஒன்றரை வயது மகளான மானஸாவையும் வயிற்றில் 8 மாத குழந்தையுமாக காதல் கணவர் பரமசிவன் இறந்து 15 நாள் காரியம் முடிந்து கண்கள் கலங்க தன் குடும்பத்திடம் வந்து நின்றாள்.
”அண்ணா அப்படி சொல்லாதண்ணா காதல் பண்றது துரோகமாண்ணா பாசம் இல்லைன்னு மட்டும் சொல்லாதண்ணா என்னதான் அவர்கூட இருந்தாலும் உங்க நினைப்பு தினமும் இருக்கும்” என ஈஸ்வரி சொல்லியும் அவனின் கோபம் குறையவில்லை.
“நீ செஞ்சது துரோகம்தான் அப்பா அம்மாவை ஏமாத்திட்டு அவன் கூட ஓடிப்போனப்ப எங்க போச்சி இந்த நினைப்பு எத்தனை முறை சொல்லியிருப்போம் கெஞ்சிருப்போம் ஒண்ணாவது உன் காதுல விழுந்திச்சா நம்ம ஸ்பின்னிங் மில்லுல வேலையில இருந்தவனை காதலிச்ச நாங்க ஒத்துக்கலைன்னதும் அவன்கூட போயிட்ட இப்ப எந்த முகத்தை வைச்சிக்கிட்டு திரும்பி வந்திருக்க” என துரை சிங்கம் குறை கூற அதைக் கேட்டு தாங்க முடியாமல் கண்கள் கலங்கிய மகள் ஈஸ்வரியைக்கண்ட பாட்டி உமையாளோ.
”போதும் நிறுத்துங்க என்னவோ அவள் செஞ்சதுதான் பெரிய துரோகம்னு நினைச்சி ஆளாளுக்கு திட்டறீங்களே, பாவம் வயித்துபிள்ளைதாச்சி கையில கைக்குழந்தையோட நம்மளை தேடி வந்திருக்கா, ஏன் வந்தா இங்க வந்து சொத்துல சொந்தம் கொண்டாடவா இல்லையே, ஒரு முறை உங்களை பார்க்கதானே அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க, யார் யாரோ எப்படி எப்படியோ உங்க பிசினஸ்ல ஏமாத்திக்கிட்டு இருக்காங்க, அவங்களை எல்லாம் விட்டுட்டு பாவம் என் பொண்ணைதான் திட்டி விரட்டனுமா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா” என திட்டியபடியே வாசலில் நின்றிருந்த மகளிடம் சென்றவர் அவள் கையில் இருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்ய அதைக்கண்ட அறிவுடை நம்பி தடுத்தார்.
”அங்கயே நில்லு உமையாள், ஒரு அடி எடுத்து வைச்சாலும் நான் செத்ததுக்கு சமம்” என கத்த ஈஸ்வரியால் அதற்கு மேல் நடக்க முடியாமல் வாசலுக்கு வெளியேவே நின்று விட்டாள். உமையாளோ கோபமாக அறிவுடை நம்பியிடம் வந்தார்.
”உங்களுக்கு மனசாட்சி இருக்கா இல்லையா பாவம் அவளே புருஷன் செத்து கைக்குழந்தையோட வந்திருக்கா அவளுக்கு நம்மளை விட்டா யார் இருக்கா இப்படி பேசினா என்ன அர்த்தம்”.
”வேற வழியில்லாம வந்திருக்கா நம்ம மேல பாசம் அவளுக்கு இல்லைம்மா இருந்திருந்தா எப்பவோ வந்திருப்பா” என துரைசிங்கம் கத்த அதற்கு உமையாளோ.
”எங்கடா வரவிட்டீங்க அவளும் முதல் குழந்தைக்கு சீமந்தம் செய்வீங்கன்னு ஆசையாக வந்தா நீங்கதானே திட்டி விரட்டினீங்க”.
”அந்த ஏமாத்துக்காரன் பரமசிவனும் கூடவே வந்தானே அவனைப்பார்க்க பார்க்க உடம்பெல்லாம் எரியுது எப்படியெல்லாம் பேசி கீசி ஏமாத்திட்டான், என் தங்கச்சியை மயக்கி இழுத்துட்டு போயிட்டான். எப்படியாவது அவள் பங்கு சொத்து கிடைக்கும்ங்கற ஆசையிலதான் சீமந்தம் செய்ய வைக்க வந்தான், அவனோட தப்பான எண்ணம் ஆரம்பித்தில இருந்து என் தங்கச்சி வாழ்க்கையை அழிச்சிடுச்சி, இன்னிக்கு இவள் இப்படி விதவையா கையில குழந்தையோட நிக்கறாள்னா அதுக்கு காரணமே இவளோட காதல்தான், நாங்க சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணியிருந்தா இவளுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா” என துரைசிங்கம் கத்த உமையாளோ.
”இதப்பாரு துரைசிங்கம், இது என் பொண்ணு வாழ்க்கை அவளுக்காக நான் பேசிக்கிட்டு இருக்கேன் நீ போ இங்கிருந்து, இது என் புருஷனுக்கும் எனக்குமான.