வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - Chillzee Originals
இது ஒரு எளிய, இனிய காதல் கதை!
அத்தியாயம் 01.
"Free your mind and everything'll follow.".
லேப்டாப் பவர் பட்டனை அழுத்தி அதற்கு உயிர் கொடுத்தான் ஹரிஷ். மனசுக்குள் உலகத்தில் இருக்கும் அத்தனை தெய்வங்களையும் வணங்கினான்.
ஈமெயிலை ஓபன் செய்தப் போது மனதின் எதிர்பார்ப்பிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் கை நடுங்கியது.
அவனுடைய ஆர்வத்தை புரிந்துக் கொள்ளாமல் பொறுமையாக ஓபன் ஆனது ஈமெயில் ஆப். அன்று வந்திருந்த ஈமெயில்கள் ஒவ்வொன்றாக டவுன்லோட் ஆனது. ஹரிஷின் கண்கள் அவன் எதிர்பார்த்த ஈமெயிலை உடனேயே கண்டுப்பிடித்தது. பொறுமை இல்லாமல் அந்த ஈமெயிலை ஓபன் செய்தான். அவனுடைய கண்கள் ஈமெயிலை ஸ்கான் செய்தது.
Dear Mr. Harish,.
Thank you for sharing your product details. Unfortunately.
ப்ரேக் போட்டு மேலே படிக்காமல் நிறுத்தினான். வேண்டாம் என்று சொல்லும் ஈமெயில். முழுதாக படித்து தான் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. கைகளால் முகத்தை மூடிக் கொண்டான். ஏமாற்றம் மனதை அரித்தது. எந்த கனக்ஷனும், ரெகமன்டேஷனும் இல்லாமல் ஒருவன் வெற்றி பெறுவது அவ்வளவு கடினமா? எதற்காக யாரும் அவனுக்கு அங்கீகாரம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்கிறார்கள்.
‘ப்ரோபசர் மாதேஷ் காலிங்’’ – இனிமையான பெண் குரலில் அறிவித்தது அவனுடைய மொபைல் virtual assistant app சுஷ்மா.
“கனக்ட் செய் சுஷ்மா” – ஹரீஷ் சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.
“குட் மார்னிங் ஹரீஷ்” – ப்ரோபசர்.
“குர் மார்னிங் இல்லை சார். எப்போவும் போல unfortunately மார்னிங்” – ஹரீஷ்.
“எடிசன் ஆயிரம் தடவை---” – மாதேஷை பேச விடாமல் தடுத்து, பேசினான் ஹரீஷ்.
“இதை நீங்க என் கிட்ட பத்தாயிரம் தடவைக்கு மேல சொல்லிட்டீங்க சார்”.
“முயற்சி செய்துட்டே இரு ஹரீஷ். APJ இண்டஸ்ட்ரீஸ்ல என்ன காரணம் சொல்லி இருக்காங்க?”.
“முழுசா படிக்கலை சார். படிச்சுட்டு சொல்றேன்”.
“அரை குறை ஞானம் ஆபத்து ஹரீஷ். முழுசா படி”.
“ஓகே சார்”.
ஹரீஷ் ஈமெயிலை படிக்காமலே ஈமெயில் ஆப்பை மூடி விட்டு அன்றைய வேலையை பார்க்க தொடங்கினான்.
அரை மணி நேரம் சென்றிருக்கும், ‘அம்மா காலிங்’ என்றது சுஷ்மா.
“கனக்ட் செய் சுஷ்மா” – ஹரீஷ்.
“ஹலோ ஹரீஷ்” – மஹாலட்சுமி.
“ஹலோ மஹா. எப்போவும் ஈவ்னிங் மட்டும் ப்ளேட் போடுவீங்க. இன்னைக்கு காலையிலேயே ஸ்டார்ட் ஆயிடுச்சு? விஷ்ணு என்ன செய்தாரு?”.
“உன் அப்பா எதுவும் செய்யலை. செய்றது எல்லாம் நீ தான். ஒரு கல்யாணம் செய்துக்கோயேன் ஹரீஷ்”.
“ம்மா??? ஆபீஸ் நேரத்துல போன் செய்து, இது தேவையா???”.
“வீட்டுல இருக்க நேரத்துல நீ அப்படியே பேசுற மாதிரி சொல்ற?”.
“இங்கே பாருங்கம்மா நான் உருவாக்கி இருக்க என்னோட ப்ராடக்ட்டை வெற்றிகரமா லான்ச் செய்தப்புறம் தான் கல்யாணம். ஆல்ரெடி சொல்லி இருக்கேன்”.
“இதையே நாலு வருஷமா சொல்ற? உன் ப்ராடக்ட் எப்போ லான்ச் ஆகுறது? நான் எப்போ என் மருமகளை பார்க்குறது??? பேசாம உங்க அப்பாவை, வீடு, சொத்து எல்லாத்தையும் வித்து சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு உன் ப்ராடக்ட்டை லான்ச் செய்ய சொல்லவா??? வேற ஒருத்தன் செய்றது நடக்குற மாதிரி தெரியலையே”.
“கிண்டல்??? ஒரு இன்னொவேட்டிவ் மூளை உள்ள பையனோட அம்மா மாதிரியா பேசுறீங்க?”.
“போப்பா! எனக்கு அப்பப்போ உனக்கு மூளைன்னு ஒன்னு இருக்கான்னே சந்தேகமா இருக்கு”.
“மஹா!!! வாய் அதிகமா போச்சு. விஷ்ணு கிட்ட சொல்லி அடக்கி வைக்குறேன்.”.
“அவரை நான் அடக்கி முப்பது வருஷம் ஆச்சு! நீ சாயந்திரம் யோகா கிளாஸ்ல இருந்து என்னை பிக்கப் செய்யனும். அதுக்கு தான் கூப்பிட்டேன்.”.
“எத்தனை மணிக்கு வரணும்?”.
“அஞ்சு மணிக்கு வந்திரு”.
“என் ஆபீஸ் டைம் ஆறு மணிக்கு தான் முடியுது???”.
“ரிமோட் ஆபீஸ் தானே? கீபோர்ட் தட்ட ஒரு ப்ரோக்ராம் வச்சிருப்பீயே. அதை போட்டுட்டு வா. எனக்கும் டெக்னாலஜி தெரியும்ப்பா”.