தெரியுமா உங்களுக்கு? - Chillzee Originals
தெரியுமா உங்களுக்கு???
உலகத்திலேயே பெண்ணின் பெயருள்ள ஒரே நாடு எது?
ஒரு விமான நிறுவனம் ஃபிளைட் அட்டென்டன்ட்டாக பெண்களை மட்டும் தேர்வு செய்யும் காரணம் என்ன?
ஆண்களுக்கு ஷாப்பிங் போர் அடிப்பது ஏன்?
வாழைப்பழங்கள் ஏன் வளைந்திருக்கிறது?
ரூட்டின் வாழ்க்கையில் இருந்து எஸ்கேப் ஆக, படியுங்கள், தெரிந்துக் கொள்ளுங்கள், ஸ்மைல் செய்யுங்கள்!
பெண்களின் உடைகளில் இடதுபுறத்திலும், ஆண்களின் உடையில் வலதுபுறத்திலும் பட்டன்கள் இருக்க காரணம் என்ன?
பட்டன் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவை மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன. அதனால் பணக்காரர்களால் மட்டுமே அணியப்பட்டன.
பெரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் கொண்டவர்கள் என்பதால், இடதுபுறத்தில் உள்ள துளைகள் வழியாக வலதுபுறத்தில் பட்டன்களை அழுத்துவது எளிது.
அந்தக் காலத்தில் பணக்கார பெண்களுக்கு பணிப்பெண்கள் தான் உடை அணிவித்து விடுவார்கள். அதனால் பணிப்பெண்ணின் வலதுபுறத்தில் பட்டன்கள் வைத்தார்கள்!
இன்றும் அந்த முறை மாறாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது!
?
ஆங்கில எழுத்து X ஏன் முத்தங்களைக் குறிக்கிறது?
இடைக்காலத்தில், பலருக்கும் படிக்கவோ எழுதவோ தெரியாது. அந்தக் காலத்தில் ஆவணங்கள் பெரும்பாலும் ஆங்கில எழுத்து X பயன்படுத்தி கையொப்பமிடப்பட்டன.
அந்த X ஐ முத்தமிடுவது ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியாக பார்க்கப் பட்டது.
அதனால் தான் இன்றும் X என்பது முத்தத்தை குறிப்பிடுவதாகவே பார்க்கப் படுகிறது.
?
ஏன் டென்னிஸில் ஸ்கோர் சீரோ வாக இருப்பதை லவ் என்று அழைக்கிறார்கள்?
டென்னிஸ் பிரபலமடைந்த பிரான்சில், ஸ்கோர் போர்டில் சீரோ என்பது முட்டை போல தோற்றமளித்தது. அதனால் அங்கே அதை ‘l’oeuf’ என்று அழைத்தார்கள். இதற்கு பிரஞ்சு மொழியில் முட்டை என்று அர்த்தம்.
அமெரிக்காவில் டென்னிஸ் அறிமுகப் படுத்தப்பட்ட போது, அமெரிக்கர்கள் அதை தவறாக ‘லவ்’ என்று உச்சரித்தார்கள்.
இன்று வரை அதுவே தொடர்கிறது!
?
மேற்கத்திய நாடுகளின் விருந்துகளில் கண்ணாடி டம்பளர்களில் இருப்பதை குடிப்பதற்கு முன் ஒருவருக்கு ஒருவர் தன் டம்ப்ளரை இடித்துக் கொள்வதின் காரணம் என்ன?
முந்தைய காலங்களில் எதிரியை கொள்வதற்கு விஷம் கலந்த திரவத்தை கொடுப்பது சாதாரணமான ஒன்று.
அதனால், விருந்து நடக்கும் போது, தன் பானம் பாதுகாப்பானது என்று விருந்தினருக்கு நிரூபிக்க, விருந்தை அளிப்பவர் அந்த பானத்தை மற்றவர் முன் தன் டம்ப்ளரில் ஊற்றுவது வழக்கமாக இருந்தது.
பின் அனைவரும் ஒரே நேரத்தில் அதைக் குடிப்பார்கள்.
விருந்திற்கு வந்திருப்பவர் விருந்து அளிப்பவரை நம்பினால், தன் டம்ப்ளரை மற்றவரின் டம்பளருடன் இடித்து ஓசை எழுப்பி அதை வெளிக் காட்டுவார்.
இதே பழக்கம் இன்றும் தொடர்கிறது!!!!
?
மக்கள் கவனத்தில் இருப்பவற்றை ‘வெளிச்சத்தில்’ இருப்பதாக எதனால் சொல்கிறோம்?
1825 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய விளக்கு, மிகவும் அதிகமான ஒளியை உருவாக்கியது. அதனால் கலங்கரை விளக்கம், மேடை நாடகம் போன்றவற்றில் பயன்படுத்தப்