Chillzee KiMo Books - எதிர் எதிரே நீயும் நானும் - பிரேமா சுப்பையா : Ethir ethire neeyum naanum - Prama Subbiah

(Reading time: 10.25 - 20.25 hours)
எதிர் எதிரே நீயும் நானும் - பிரேமா சுப்பையா : Ethir ethire neeyum naanum - Prama Subbiah
 

எதிர் எதிரே நீயும் நானும் - பிரேமா சுப்பையா

பிரேமா சுப்பையாவின் புதிய நாவல்.

 

 

அத்தியாயம்  1.

மினு மினுக்கும் வண்ண மயமான விளக்கின் வெளிச்சம் மேடையில் இருப்போரை பிரகாசமாக தெரிவிக்க, இதோ இதோ அவள் பெயர் அழைக்கப்படும் தருணத்தை மனதில் ஒருவித குதூகலத்துடன் எதிர்நோக்கி இருக்கிறாள் அவள். “தி பெஸ்ட் கிரியேட்டிவ் ஆப் தி இயர்”………. அண்ட் தி அவார்ட் கோஸ் டு  என்று தொடங்கியது மட்டும் தான் அவள் நினைவில் நின்றது. அதற்கு மேல் அவளது படைப்பாற்றலில் வெளிவந்த அந்த விளம்பரம் அந்த விருதுக்கு தேர்வானது, அவள் பெயர் மற்றும் அவள் நிறுவனத்தின் பெயர் உச்சரிக்கப்பட்டது, தான் எழுந்து மேடைக்கு சென்றது..மார்க்கெட்டிங் ஜாம்பவான்களிடமிருந்து வாழ்த்து மற்றும் ஆசிகளை பெற்றது, தனது நிறுவன இயக்குநர்களிடமிருந்து புகழாரத்தை பெற்றது அனைத்துமே ஏதோ கனவு போல் இருந்தது அவளுக்கு.

 

இந்த வயதில் இது மிகப்பெரிய சாதனை என்று பலர் பாராட்டினாலும் அவள் மனம் என்னவோ, தான் நிர்ணயத்திருக்கும் இலக்கை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று அடித்து சொல்லியது.

 

இத்தகைய தருணத்தில் கூட ஆர்பரிக்கவில்லை அவள் மனது. அவளது வெற்றியை அவள் சக்திக்கே அர்பணித்தாள்!!

அவனின்றி இது தன்னால் இயன்றிருக்க கூடுமா ..? “நிச்சயமாக இல்லை” என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

அவளின் இத்தகைய குணம் திடீரென்று அவளிடம் வந்துவிடவில்லை இதற்கு முழு காரணம் அவளின் ராம் தான்.  அவரை நினைக்கும் போதே இவளுக்கு மனம் வருந்துகிறது.

எத்தனை முறை அழைத்திருப்பாள் ?..ஒருவரும் வரவில்லையே ..! இருக்கட்டும் இதற்கெல்லாம் சேர்த்து வைத்து இருக்கிறது அவர்களுக்கு என்று மனதில் வன்மத்தை வளர்த்து கொண்டாள் அவள்.

ஆம் இவள் சரியான வன்மக்காரி தான்...!

சனிக்கிழமை விருது வாங்கிவிட்டு ... அங்கு அலுவல் ரீதியாக சந்திக்க வேண்டிய சிலரை சந்தித்து விட்டு ....திங்கட்கிழமை வந்துவிட்டாள் ..சென்னைக்கு

 இன்னும் கூட நம்ப முடியவில்லை அந்த நொடிகளை .... ஆனால் அவள் கைகளில் கிடைத்திருக்கும் விருது ...!!! “உண்மை பெண்ணே ...உண்மை ..இது நிஜம் தான் ...”என்று நகைக்கிறது அவளை பார்த்து ...

அன்று முதல் அவள் தான் அலுவலகத்தின் நட்சத்திரம் ...பாராட்டி சீராட்டி ...என்று அவளை படுத்தி எடுத்துவிட்டனர் ...

இது எப்போதும் நடக்க கூடியது தான் ..அவள் அலுவலகத்தில் இருப்பவர்கள்,  யாரவது  எதையாவது சாதித்தாலும் சரி ...எதையாவது சொதப்பினாலும் சரி ...அவர்களை ஒருவாரம்   ஓட்டியே... நொந்து போக வைக்கும் பெருந்தன்மை வாய்ந்தவர்கள்

அன்று வெள்ளிக்கிழமை ..சக்தியை பார்த்து ..என்ன வாக்கு வாதம் நடத்த வேண்டுமோ நடத்திவிட்டு அலுவலகம் வந்துவிட்டாள்...

அடிக்கடி சந்தித்தால் அன்பு போய்விடுமாம் ...இவளின் அலப்பறையை தாங்கமுடியாமல் தவித்தான் சக்தி!!

இன்று எந்த வேலையும்  ஓடவில்லை அவளுக்கு.

 அவளின் சாதனையை பாராட்டி நிறுவனம் இன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தது. அன்று முழுவதுமே அவளை பாராட்டி, கேலி செய்து...வம்பிழுத்து என்று அவளை மட்டுமே தாளித்து எடுக்க எப்போதடா நிறுவனம் விட்டு செல்வோம் என்றானது அவளுக்கு...

 

இன்று இரவு தனது ஊருக்கு செல்ல முன் பதிவு செய்தாகிவிட்டது இருந்தும் அவளுள் மீண்டுமாய்

எழுந்தது அக்கேள்வி  "நான் போகணுமா...? அவங்க எனக்கு பண்ணதுக்கு நான் ஏதாச்சும் திருப்பி செய்ய வேண்டாமா..?" சக்தி அவள் முன் வந்து நின்று மிரட்டுவது போல் தோன்ற ..மனதுள் அந்த சக்தியோடு மல்லுக்கட்டல் "போ சக்தி...நீ எப்பவுமே அவங்க சப்போர்ட் தான்,..உன் பேச்சும் டூ விடப்போறேன் பார்த்துக்கோ"

"ஹா ஹா ஹா" என்று சக்தி சிரிப்பது போல் ஒரு பிரம்மை.