Chillzee KiMo Books - உயிர்ப்பேன்???? அன்பே உனக்காக..... - தனுசஜ்ஜு : Uyirppen??? Anbe unakkaga..... - Danusajju

(Reading time: 1 - 2 hours)
உயிர்ப்பேன்???? அன்பே உனக்காக..... - தனுசஜ்ஜு : Megame thoothaga vaa! - Danusajju
 

உயிர்ப்பேன்???? அன்பே உனக்காக..... - தனுசஜ்ஜு

ஒரு உருக்கமான நட்பில் உருவான காதல். அந்த காதலில் உருவாகும் அண்ணன் தங்கை பாசம். பாசம் உருவாக்கும் போராட்டம். அதை கலைக்கும் நண்பர்களின் துரோகம். துரோகத்தை முறியடிக்கும் அமானுஷ்யம்.

 

மாலை நேரம்,   இதமான காற்று, மேகம் கருத்து மழை பெய்ய தயாராகி கொண்டிருந்தது. அந்த மெட்ரோ சிட்டியில் ஜாகுவார் ஒன்று சீரற்ற வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது. உள்ளே இருந்த ஆனந்த்

கையில் பீர் பாட்டிலுடன் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தான்.

 

            சிவப்பு கலர் புடவையில் அழகான ஒரு பெண் சாலையோரம் நின்றுக் கொண்டு கையசைக்க. ஜாகுவார் அவளை கடந்து இரண்டடி சென்றுவிட்டு மீண்டும் பின்னே வந்து,

 

வாட் ஹாப்பன் பியூட்டி.......

 

மழை வர மாறி இருக்கு கொஞ்சம் என்னை ஸ்ரீநகர் - ல ட்ராப் பண்றிங்களா சார்.

 

ஓ மை பிளசர் டியர். கம் இன் என்று அவன் முன்பக்க கதவை திறந்துவிட,

 

இல்ல சார். நான் பின்னாடி உட்கார்ந்துக்குறேன் சார்.

 

அவளை ஒரு மயக்கும் பார்வை பார்த்துவிட்டு, நோ ஃபிராப்ளம் ......

 

அவள் பின்னிருக்கையில் அமர்ந்துக் கொள்ள, இவ்வளவு நேரம் காத்திருந்த மழை சடசட வென பொழிய ஆரம்பித்தது.

 

ப்பா...... செம மழை நீ தப்பிச்சிட்ட பியூட்டி. நான் உன்ன காப்பாத்திட்டேன் பாரு.....

 

ரொம்ப தேங்க்ஸ் சார்.

 

நோ மென்சன் பேபி.

 

என்ன நீ மழையில நனைஞ்சிருந்தா இன்னும் அழகா இருந்திருப்ப..... ஒரு பெருமூச்சுடன் மிஸ் ஆயிடுச்சு.....

 

என்ன சார்... ஒன்னு புரியல....

 

அவன் சின்ன சிரிப்புடன் ஒன்னுல்ல.

 

ம்ம்..

 

வண்டி காட்டுப் பகுதியில் சென்றுக் கொண்டிருக்க.....

 

சார் என் வீடு இந்த பாதை கிடையாது.

 

இது குறுக்கு வழி பேபி உன்ன பத்ரமா வீட்ல சேத்துட்றே..... சரியா... என்று அவன் வலிந்துக் கொண்டே கூற

 

அவள் சின்ன சிரிப்புடன் சரி என்பது போல் தலையாட்ட...

 

ஆஹா பச்சி சிக்கிருச்சி போலயே.....

 

திடீரென்று ஒரு இடி பெரும் சத்தத்துடன் இடிக்க, கார் கையில் இருந்து தடுமாற..

 

பின்னிருக்கையில் இருந்த பெண்ணின் உருவம். கருநிற முகமாக மாறி சிதைந்து, முகம் முழுவதும் பெரிய பெரிய ஓட்டை அதிலிருந்து இரத்தம் வடிய,  கண்கள் தீப்பிழம்புகளாக மாறி அவனை சுட்டெரிக்க....

 

இந்த கொடூர மாற்றத்தை முன்னிருந்த கண்ணாடியில் ஒரு நொடி பார்த்து அதிர்ந்து , வண்டியினை நிறுத்தினான்....