கிராமத்து காதல் - சசிரேகா
கிராமத்து திருவிழாவிற்காக ஊரே காத்திருக்கும்
ஆனால் நான் உன் வருகை ஒன்றுக்காகவே
திருவிழாவை வரவேற்கிறேன்.
உனக்காக காத்திருந்தேன்.
நீ வரவில்லையென தெரிந்தால் கூட போதும்
அடுத்த நொடியே
ஊர் திருவிழாவையும் நான் நிறுத்தி வைப்பேன்
நீ வராத ஊரில் திருவிழா எதற்கடி?........
அம்மனை வைத்து தேர் இழுப்பார்கள்.
நான் உன்னை என் மனதில் வைத்து
என் காதல் எனும் தேரை இழுக்கிறேன்.
என்றாவது ஒரு நாள் என்
காதலை நீ ஏற்றாலும் ஏற்கவில்லையானாலும்
நீ என் குலதெய்வமடி ......
உன்னை ஒரு நாளும்
நான் கோபித்துக்கொள்ள மாட்டேன்
உன்னை நான் கோபித்தால்
உன் மனதின் வலியை விட
ஆயிரம் மடங்கு
வலியை நான் உணர்வேனடி......
என்னை நீ ஒவ்வொரு முறை
அத்தான் என அழைக்கும் போதெல்லாம்
என் மனது அடையும்
மகிழ்ச்சிக்கு அளவேயில்லை
அத்தானாக உன்னிடம் உருவான என்
உறவு இவ்வுலகில் வேறு யாருக்கும்
கிடைக்காத பொக்கிஷம்
அந்த பொக்கிஷம்
எனக்கு கிடைத்திருக்கிறது
நான் பாக்கியசாலிடி......
நீ கூறும் இந்த அத்தான் என்ற
ஒற்றை வார்த்தையை
பல பேர் பலரிடம்
சொன்னாலும்
அதில் உயிர்ப்பு இருக்குமா
இல்லையா என
எனக்கு தெரியாது
ஆனால்
நீ சொல்லும் போது
எனக்கு புது உயிர்
கிடைக்கறது
புது சுவாசத்தை நான் சுவாசிக்கிறேன்
இந்த உறவை எனக்கு தந்து
எனக்கு இந்த பிறவியை தந்த கடவுளுக்கு
நான் பலகோடி நன்றிகள் சொன்னாலும்
பத்தாதடி......
திருவிழா கூட்டத்தில்
ஆயிரம் பெண்கள் அலைந்தாலும்
உன் அழகான முகத்தை தேடி அலையும்
பல கண்களில்
என் கண்களும் அதில் உண்டு.
மற்றவர்களின் கண்களில் இல்லாத ஒன்று
என் கண்களில் உண்டு