Chillzee KiMo Books - யாருக்கு பைத்தியம்? - சசிரேகா : Yaarukku paithiyam - Sasirekha

(Reading time: 45 - 90 minutes)
யாருக்கு பைத்தியம்? - சசிரேகா : Yaarukku paithiyam - Sasirekha
 

யாருக்கு பைத்தியம்? - சசிரேகா

This is prequel to "Thodar tharkolaigalin marmam" novel

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

 

விழுப்புரம்

”வைஷூ அந்த ஃபைலை தரோவா மனப்பாடம் பண்ணிக்க எங்க எதை பத்தி நான் கேட்டாலும் நீ பதில் சொல்லனும் சரியா இங்கயே நில்லு நான் போய் டெட்பாடியை பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு ஆதிபனும் கொலை நடந்த இடத்திற்குச் சென்றான்.

ஒரு சந்திற்குள் பைத்தியக்காரன் ஒருவன் கொலையுண்டு கிடந்தான். அவனை சுற்றிலும் மார்க் போட்டு தடயங்கள் சேகரித்துக் கொண்டிருந்தனர் தடவியல் நிபுணர்கள் குழு. வைஷூ அந்த கேசின் டீடெயில்ஸ் அடங்கிய ஃபைலை படித்துக் கொண்டிருந்தாள். ஆதிபன் கொலையான அந்த பைத்தியக்காரனிடம் சென்று ஆராய்ந்தான். அவனுடன் துணையாக அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மாணிக்கம் இருந்தார்

”மாணிக்கம்” என ஆதிபன் அழைக்க அவரும்

”சொல்லுங்க சார்”

“இந்தாளு பைத்தியம்னு நீங்க எப்படி சொல்றீங்க”

“சார் 2 வருஷமா இந்தாளு பைத்தியமா ரோடு ரோடா சுத்திக்கிட்டு வர்றவங்க போறவங்களை பயமுறுத்திக்கிட்டு கிடைச்சதை சாப்பிட்டுக்கிட்டு இருந்தான் சார்”

“ஓ அப்படியா இவ்ளோ விசயம் எப்படி உங்களுக்கு தெரியும்”

“சார் இந்த பைத்தியத்தால பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டாங்க அதுல சில பேர் இந்தாளு மேல கம்ப்ளெயின்ட் கொடுத்தாங்க அதனால எனக்குத் தெரியும்”

“சரி அந்த கம்ப்ளெயின்ட் காப்பி எங்க”

“உங்க கிட்ட கொடுத்த ஃபைல்ல இருக்கு சார், உங்காளு பார்த்துக்கிட்டு இருக்காங்களே சார்” என மாணிக்கம் சிரித்தப்படியே சொல்லவும் அதைக் கேட்டு ஆதிபன் சிரித்தவாறே அவரைப் பார்த்து

”என் ஆளா”

“ஆமாம் சார் உங்க கூட வந்திச்சே”

“ஓ என் கூட வந்தா அவங்க என் ஆளா அவளும் ஒரு கிரைம் ப்ரான்ஞ் சேர்ந்தவதான்”

”ஓ அப்படிங்களா நான் உங்க லவ்வர்ன்னு நினைச்சேன்”

“ஏன்யா யாராவது லவ்வரை இந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு வருவாங்களா”

“இல்லை சார் அவங்க பட்டுப்புடவையில இருந்தாங்களா அதான் நான் அப்படி நினைச்சேன்” என சால்ல ஆதிபனும் அப்போதுதான் அவளைத் திரும்பிப் பார்த்தான்

”கோயில் கேஸ் முடிந்த கையோடு இந்த ஊருக்கு வந்திருக்கா வேலையில அவ்ளோ ஈடுபாடு அதான் பட்டுப்புடவையில இருக்கா ஓகேவா”

“சாரி சார்” என அவர் வழியவும் ஆதிபன் வைஷூவைப் பார்த்து வழிந்தான். அவளை அழைத்தான்

”வைஷூ”

”சார்”

“இங்க வா” என கூப்பிட அவளும் அவன் அருகில் வந்து நின்றாள்

”சொல்லுங்க சார்”

“என்ன இது இந்த ட்ரெஸ்ல வந்திருக்க பார்க்கறவங்க எல்லோரும் நீ என் ஆளுன்னு சொல்றாங்க” என சொல்ல சற்று சங்கடப்பட்டு சிரித்த வைஷூ

”சாரி சார் டைம் கிடைக்கலை உடனே இந்த ஊருக்கு வந்துட்டோம் இப்பவே மணி 5, சோ அதான்”

“சரி சரி விடு ஓட்டல்ல ரூம் புக் பண்ணியிருக்கேன் நீ அங்க போய் தங்கு ட்ரெஸ் மாத்திக்க”

“பட் சார் என்கிட்ட வேற ட்ரஸ் இல்லையே”

“கடையில வாங்கிக்க ஓகேவா”

“ஓகே சார் போறப்ப வாங்கிக்கறேன்”

“உன் இஷ்டம் சரி கேஸ் ஃபைல் பார்த்தியா”

“எஸ் சார்”

”ஃபைல் என்ன சொல்லுது”

“சார் இறந்து கிடக்கறவரு பேரு ஊரு எதுவும் இல்ல, 2 வருஷமா பைத்தியமா இந்த ஏரியால சுத்தி சுத்தி வந்திருக்காரு. அவர் தொல்லை தாங்க முடியாம அவர் மேல பொதுமக்கள் கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்காங்க மத்தபடி வேற எந்த தகவலும் இல்லை சார்” என சொல்ல ஆதிபன் திரும்பி மாணிக்கத்திடம்

”சரி இந்த ஏரியால வேற ஏதாவது மர்டர் நடந்திருக்கா”

“இல்லை சார் இந்த ஏரியா, பணக்காரங்க, தொழிலதிபர்கள் இருக்கற ஏரியா சார்”

“அப்படியா இங்க எப்படி இந்த பைத்தியக்காரன் வந்தான்”

“அதான் சார் தெரியலை, அடிக்கடி இங்க வருவான்னு கூர்க்கா சொல்றான்”

“ம் சரி பணக்காரங்கன்னா வீட்டை விட்டு வெளிய வர்றப்பவே கார்லதானே