Chillzee KiMo Books - தொடர் தற்கொலைகளின் மர்மம்? - சசிரேகா : Thodar tharkolaigalin marmam - Sasirekha

(Reading time: 1 - 2 hours)
தொடர் தற்கொலைகளின் மர்மம்? - சசிரேகா : Thodar tharkolaigalin marmam - Sasirekha
 

தொடர் தற்கொலைகளின் மர்மம்? - சசிரேகா

Also read the prequel - "Yaarukku paithiyam"

சசிரேகாவின் புதிய குறுநாவல்.

 

 

மதுரை

ஆதிபன் தனது வீட்டில் காலை டிபனை செய்துக் கொண்டிருந்தான். யூ-ட்யூப்பில் யாரோ ஒருவர் சமைத்ததைப் பார்த்து பார்த்து தானும் சமைத்துக் கொண்டிருந்தான்.

”சே இப்படி சமைக்கறதுக்கு ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணியிருந்தாலாவது வேளாவேளைக்கு சாப்பாடு கிடைச்சிருக்கும். எவ்ளோ நேரமா இதை செய்றேன் இன்னும் வேலை முடிஞ்ச பாடில்லை. இது கூட  போராடறதுக்கு நான் ஏதாவது க்ரைம் கேஸையாவது பார்த்திருக்கலாம்.” என நினைத்துக் கொண்டே கடாயில் ராஜ்மா கிரேவியை கிளறிக் கொண்டிருந்தான். ஏற்கனவே தான் செய்து வைத்த சப்பாத்தி காய்ந்து விடாமல் இருக்க அதை ஹாட்பாக்சில் பத்திரமாக வைத்திருந்தான். அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டு

”யாரு” என உரக்கமாக கத்த

”சார் நான் வைஷ்ணவி வந்திருக்கேன்”

”இவளா இப்ப ஏன் வந்தா அய்யோ! நான் வேற வெறும் லுங்கியில இருக்கேனே ஆமா அவள் என்ன எனக்காகவா வந்தா ஏதாவது கேஸ் ஃபைலோட வந்திருப்பா” என நினைத்தவன்

”கதவு திறந்திருக்கு உள்ள வா” என சத்தமாகச் சொல்லி முடித்தான். சில நொடிகளில் கிச்சனுக்குள் நுழைந்த வைஷூ அங்கு லுங்கியுடன் இருந்த ஆதிபனைக் கண்டு

”ஓ சாரி சாரி நான் எதையும் பார்க்கலை” என முகத்தை திருப்பிக் கொள்ள அவளை கோபமாக முறைத்தான்

”அடிப்பாவி பார்க்க முடியாத நிலைமையிலயா நான் இருக்கேன், உன்னை போல நல்ல வெள்ளையாதானே இருக்கேன் ஏதோ ஏலியனை பார்க்கற மாதிரி இப்படி அலர்ற”

“சாரி சார் அது நீங்க வெறும் லுங்கியில” என தயக்கத்துடன் பேச அவனோ

“என்ன நான் விளம்பர மாடல் மாதிரியிருக்கேனா” என கேட்கவும் களுக்கென சிரித்தாள் வைஷூ

”என்ன சிரிப்பு இது, இந்த சிரிப்புக்கு அர்த்தம் நான் நல்லாயிருக்கேன்னு அர்த்தமா இல்லை நீ கிண்டல் பண்ணி சிரிக்கிறியா”

“நான் அதுக்காக சிரிக்கலை, என்ன சமைக்கறீங்கன்னு பார்க்கறேன்”

“ம் இதுவா சப்பாத்திக்கு ராஜ்மா செய்றேன்“ என சொல்ல வைஷூ அந்த இடத்தைப் பார்த்தாள்.

சமையல்கட்டு போர்க்களம் போல காட்சியளித்தது. ஆங்காங்கு மாவு திட்டுக்கள், காய்கறி, வெங்காயத் தோல்கள் என பார்க்கவே கேவலமாக இருக்கவும் வைஷூ ஆதிபனிடம்

”சார் என்ன சார் இது, கிச்சனையே இப்படி நீங்க அலங்கோலமாக்கி வைச்சிருக்கீங்க”

“நான் என்ன செய்றது, நான் கரெக்டாதான் செய்ய ஆரம்பிச்சேன். ஆனா இந்த குழம்புதான் என் பேச்சைக் கேட்கலை”

“சரியா போச்சி ஆமா காரம் உப்பு சரியா இருக்கான்னு பார்த்தீங்களா”

“இன்னும் இல்லை ஆனா குழம்பு ரெடியான பின்னாடிதானே பார்க்கனும்” என சொல்லவும் வைஷூ சிரித்துக் கொண்டே குழம்பிடம் வந்தாள். சிறிது எடுத்து சாப்பிட்டவள்

”ம் உப்பு ரொம்ப குறைவா இருக்கு, காரம் ரொம்ப அதிகமா இருக்கு சார், நீங்க போய் ரெடியாகுங்க நான் இதை செஞ்சி கொண்டு வரேன்”

“உனக்கு ராஜ்மா செய்ய வருமா” என ஆச்சர்யமாகக் கேட்டவனிடம்

”எனக்கு எல்லா சமையலும் செய்ய வரும்”

“அப்ப பிரியாணி”

“வரும்”

“சரி அப்ப இதை முடிச்சிட்டு பிரிட்ஜ்ல மட்டன் வாங்கி வைச்சேன், அப்படியே பிரியாணி பண்ணிடு”

“சார் ஆனா நான் புது கேஸ் கொண்டு வந்திருக்கேன்”

“வைஷூ நேத்துதானே ஒரு மர்டர் பார்த்தோம், திரும்பவுமா நானே நல்லா சாப்பிடற மூட்ல இருக்கேன். இன்னிக்கு நான் லீவு என்னால எந்த டெட்பாடியையும் பார்க்க முடியாது சாரி” என்றான் ஆதிபன்

”சார் டெட்பாடியில்லை ஏற்கனவே நடந்த மர்டர்களை பத்திதான் பார்க்கனும்” என சொல்லிக் கொண்டு சரியான அளவு உப்பு போட்டு ராஜ்மாவைக் கலக்கிக் கொண்டிருக்க அவளை தூரத்தில் நின்று சைட் அடித்தான் ஆதிபன்.

”ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்ல சமையல் செய்றா, குட் ஆமா எதுக்கு இப்ப டீசர்ட்டுல வந்தா பாவி நல்லாயிருக்கற பையனை கெடுக்கறதே இந்த பொண்ணுங்கதான், ம் சமைக்க தெரிஞ்ச பொண்ணு எனக்கு பொண்டாட்டியா வாச்சா தினமும் ராஜ்மாவும் பிரியாணியுமா சாப்பிட்டு குடும்பத்தை நடத்துவேன். ஒத்துக்குவாளா கேட்டுப்