(Reading time: 1.25 - 2.5 hours)
இரண்டு கடிதங்கள் - சசிரேகா : Irandu kadithangal - Sasirekha
 

இரண்டு கடிதங்கள் - சசிரேகா

சசிரேகாவின் புதிய சிறுகதைகள் தொகுப்பு.

 

தர்ம தரிசனம் - சசிரேகா

விசேஷ நாட்களில் கோயிலுகளுக்கு சென்றால் மக்கள் கூட்டம் அலைமோதும். அதை தவிர்க்க சிலர் கட்டணம் கொடுத்து சிறப்பு தரிசனத்திற்கு சென்று கடவுளை தரிசித்துவருவார்கள். தர்ம தரிசனத்தில் மணிக்கணக்காக வரிசையில் சென்று வருவது சிலருக்கு இயலாத காரியம் சிலர் தர்ம தரிசனத்தில்தான் செல்வார்கள் தன்னுடன் வந்தவர்களுடன் பேசிக் கொண்டே பொழுது ஓட்டுவார்கள் சிலர் தர்ம தரிசனத்திலும் பக்தியாக ஓம் என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டு இருப்பார்கள் சிலர் அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்ப்பார்கள் சிலர் சிறப்பு தரிசனத்திற்கு செல்வோரைக்கண்டு ஆதங்கப்படுவார்கள்

அப்படி ஆதங்கப்படுபவர்களில் சித்ராவும் ஒருவர் தனது கணவருடன் கோயிலுக்கு வந்திருந்தார் தனது மகள் பரிட்சையில் அதிக மதிப்பெண் வாங்கி விட்டதற்காக கடவுளிடம் நன்றி சொல்லிவிட்டு மேலும் மகளின் மேற்படிப்பு பற்றி குடும்பமாக எடுத்த முடிவை கடவுளிடம் சொல்லி அது நல்லபடியாக முடிய வேண்டும் என வேண்டிக்கொண்டும் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக எவ்வித பிரச்சனையும் இன்றிஇருக்க வேண்டும் என்றும் கணவரின் வேலையில் எந்த கஷ்டமும் வரக்கூடாதென்றும் தனது மாமியார் இனிமேலாவது தன்னை கௌரவமாக நடத்த வேண்டும் என்றும் மாமனார் கையில் இருக்கும் குடும்ப நிர்வாகம் தனக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்றும் வரப்போகும் ஆடி மாதம் தள்ளுபடியில் முடிந்தவரை 10 புடவைகளாவது எடுக்க வேண்டும் என்ற தனது சின்ன சின்ன ஆசைகளை கடவுளிடம் சொல்லி வரமாக பெற்றுச் செல்ல சித்ரா வந்திருந்தார்.

ஆனால் கடவுளிடம் செல்வதற்குள் அவர் கோபமாக இருந்தார். கடவுளின் கோயிலுக்குள் இருந்தபோதும் சிறப்பு வழியாக சென்ற மக்களைக்கண்டு தன் கணவரிடம்

”பார்த்தீங்களாங்க கடவுள் எல்லாருக்கும் சமம்தானே இங்கயும் ஏழை பணக்காரன் வித்தியாசம் நடக்குது பாருங்களேன் ஏன் நாம எல்லாரும் மனுஷங்களா இல்லையா நம்மளோட சேர்ந்து வந்து அவங்க தரிசனம் செஞ்சா ஆகாதாம்மா உடனே கடவுளை பார்த்துடனும் இவங்களாலதான் நமக்கு இவ்ளோ தாமதமாகுதே கோயில்ல கூட வேற்றுமையை காட்டறாங்க எனக்கு இது சுத்தமா பிடிக்கலைங்க” என திட்ட அவரோ அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்த்தவர் மனைவியின் கோபத்தைக்கண்டு புன்னகைத்தார்

”அவங்களை ஏன் பார்க்கற மத்தவவங்களைப் பாரு அங்க பாரு ஒருத்தர் பக்தியா பாசுரம் பாடிக்கிட்டு இருக்காரு நீயும் ஏதாவது பாசுரம் பாடு அப்ப இந்த கோபம் தன்னால ஓடிடும்”

”ஓடும் ஓடும் எப்படி ஓடும் நேரம்தான் ஓடுது லைனும் அப்படியே நிக்குது எவ்ளோ நேரம் ஆச்சி ஒரு மணி நேரமாகுது இன்னும் நாம உள்ள போகலை”

”உள்ள போகலைன்னா என்ன கோயில் சுத்தியிருக்கற பிரகாரத்திலதானே இருக்கோம் இங்க இருந்து நீ வேண்டிக்கிட்டா கூட கடவுள்ககு காது கேட்கும் சித்ரா”

”இருந்தாலும்ங்க கடவுளை நேரா பார்த்து வேண்டிக்கற மாதிரி வருமா அதோட இந்த தர்ம தரிசனத்திலயும் பாருங்களேன் ஆளாளுக்கு ஊர் கதை பேசிக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு ஏதோ சிலர்தான் பக்தியா இருக்காங்க அவங்களோட பக்தியை குலைக்கற விதமா மத்தவங்க பேசறாங்க இதனால எல்லாருக்குமே சங்கடம்தானே”

”இதப்பாரு கோயில்ல இருக்கறதே புண்ணியம்னு சொல்வாங்க மத்தவங்களை கவனிக்காத தேவையான புண்ணியம் கிடைக்காதுன்னு பாரு கடவுளை நினை மத்தவங்களை பத்தி யோசிக்காத”

”எனக்கொன்னும் மத்தவங்களை பார்க்கனும்னு அவசியம் இல்லைங்க ஏதோ சுத்தி நடக்கறத பத்தி எனக்கு தோணினதை சொன்னேன்” என சொல்ல அதற்கு அவர் பதில் சொல்லும் முன் வரிசையில் பின்னால் இருந்த ஒருவர் இவர்களைப் பார்த்து

”ஏம்மா எவ்ளோ நேரம்தான் கதை பேசுவியாம் இது கோயிலா இல்லை வீடா லைன் போகுது நி பாட்டுக்கு நிக்கறியே போம்மா முன்னாடி அப்புறம் கதை பேசிக்கலாம்” என அதட்ட சித்ராவிற்கு கோபமே வந்தது அவசரமாக லைனில் முன்னேறி சென்று நின்றாள்.

அவளது கணவரும் அவரிடம் வந்து

”பார்த்தியா என்னாச்சின்னு அடுத்தவங்களை நீ குறை சொன்ன உன்னை இன்னொருத்தன் குறை சொல்லிட்டான் தேவையா இது உனக்கு பேசாம கடவுளை நினைச்சி பாசுரம் பாடு” என சொல்ல அவரும் மெதுவாக தனக்கும் தன் கணவருக்கும் கேட்கும்படி கடவுளின் பாசுரம் படித்தார்.

சில வரிகள் கூட பாடியிருக்க மாட்டார் அவர்களிடம் ஒரு தம்பதி வந்தனர்

”தப்பா நினைக்காதீங்க திடீர்ன்னு எங்களுக்கு அவசர வேலை வந்துடுச்சி” என சொல்ல சித்ராவோ

”அதுக்கு என்ன செய்யனும் லைன்ல இடம் தரனுமா அது முடியாதுங்க பின்னாடி நிக்கறவங்க திட்டுவாங்க” என சொல்ல அவர்களோ