Chillzee KiMo Books - தூங்காத விழிகள் நான்கு...! - பத்மினி செல்வராஜ் : Thungatha vizhigal nangu! - Padmini Selvaraj

(Reading time: 12.75 - 25.25 hours)
தூங்காத விழிகள் நான்கு...! - பத்மினி செல்வராஜ் : Thungatha vizhigal nangu! - Padmini Selvaraj
 

தூங்காத விழிகள் நான்கு...! - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்..இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த பயணத்தை தொடங்க இருக்கிறேன்..

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!


********

 

அத்தியாயம்-1

து ஒரு அந்தி சாயும் அழகிய பொன் மாலை நேரம்...

தான் வளர வைத்த பசுமை மிக்க மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி பல அடுக்கு மாடி கட்டிடங்களாக கட்டிகொண்ட அந்த மனித மூடர்கள் மீதிருந்த கோபத்தால்,  அனைவரையும் சுட்டெறித்துக் கொண்டிருந்த அந்த ஆதவன் தன் கோபத்தை கை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி கொண்டிந்தான்...

அதன் விளைவாக, அதுவரை சுட்டெறித்துக் கொண்டிருந்த மக்களை இப்பொழுது கொஞ்சம் மன்னித்து அவர்கள் மனதை தன் இளமஞ்சள் கதிர்கள் வீசி குளிர வைத்துக் கொண்டிருந்தான்...

பொன் மாலை நேரத்து மஞ்சள் வெய்யில் பட்டு அந்த பூங்காவில் இருந்த இளந்தளிர் செடிகளும், மனதை கவரும் அழகு செடிகளும் சிலிர்த்து கொண்டு சிரித்தவாறு போவோர் வருவோர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தன...

மாலையில் மட்டும் மலரும் சில அந்தி பூக்கள் அப்பொழுதுதான் தங்கள் இதழ்களை மெல்ல திறக்க ஆரம்பித்து இருந்தன...

அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து காபி போட்டு காலை உணவை தயாரித்து படுக்கையில் கவிழ்ந்து படுத்து தூங்கும் தங்கள் வாரிசுகளை கெஞ்சி கொஞ்சி மிரட்டி எழுப்பி அரை தூக்கத்திலயே அவர்களை தயார் பண்ணி காலை உணவை வாயில் திணித்து பள்ளி வேன் வந்ததும் அள்ளிகொண்டு சென்று வேனில் திணித்து பின் இல்லத்தலைவனை கவனித்து அலுவலகத்துக்கு அனுப்பி அலுக்கு துணிகளை துவைத்து வீட்டை ஒழுங்கு படுத்தி மதிய சமையலை முடித்து மாலை சிற்றுண்டியையும் தயாரித்து வைத்து விட்டு அப்பாடா என்று  கொஞ்சமாக மூச்சு விடும் இல்லத்தரசிகள் தினமும் தங்களுக்கென்று ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்ட புத்தாண்டு உறுதிமொழியால் தங்களை வலுக்கட்டாய படுத்தி அந்த பூங்காவிற்கு வந்திருந்தனர் போல..

அவர்கள் முகத்தில் அன்றைய நாள் முழுவதுமே ஓயாமல் வேலை செய்த களைப்பு தெரிந்தாலும் அதை பின்னுக்கு தள்ளி மெல்ல நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர்...

சில பகுதிகளில் ஐம்பது வயதுக்கு மேலான தங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னுமே இல்லத்தலைவன் என்ற கெத்தை விடாமல்,  விட மனம் இல்லாமல் சில அப்பாக்களும், பல நரைத்த தாத்தாக்களும்  தங்கள் நடையை முடித்து அமர்ந்து கொண்டு தங்கள் பழங்கால கதைகளை பேசி கொண்டிருந்தனர்..

ஓரமான கொஞ்சம் மறைவான பகுதியில் ஒன்றிரண்டு காதல் ஜோடிகள் நெருங்கி அமர்ந்து கொண்டு அவர்கள் உலகத்துக்குள் சஞ்சரித்து கொண்டிருந்தனர்...

அந்த பூங்காவில் பலவிதமான வேறுபட்ட மக்கள் வந்து சென்று கொண்டிருந்தாலும் அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு ஓரமாக இருந்த சிமெண்ட் பெஞ்சில் தனியாக அமர்ந்து இருந்தாள் அவள்...

அந்த மஞ்சள் வெய்யில் அவள் மேனியில் பட்டு பிரதிபலிக்க, ஒப்பனை எதுவும் இல்லாமலயே அழகோவியமாக அமர்ந்து இருந்தாள் அவள்..

உடல் அங்கு இருந்தாலும் அவள் மனம் அங்கு இல்லை போல.. எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்..முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் வெளுத்து இருந்த முகத்தில் அந்த வெற்று பார்வை இன்னுமே அவளை வெறுமையாக்கி காட்டியது..

சற்று தொலைவில் சிறுவர்கள் விளையாடுவதற்காக சிறு விளையாட்டு மைதானம் போல அமைத்து இருந்தனர்...அந்த விளையாட்டு மைதனாத்தில் சின்னஞ்சிறார்கள் ஓடியாடி விளையாண்டு கொண்டிருந்தார்கள்...

சில குட்டீஸ் மெலிதான எடையற்ற பந்தை தங்கள் காலால் உதைத்து அது நகர்ந்து செல்லும் அழகை கண்டு கை கொட்டி சிரித்தனர்.. சில வாண்டுகள் அவர்கள் கையளவு இருக்கும் ப்ளாஸ்டிக் ஆல் ஆன கிரிக்கெட் மட்டையை வைத்து கொண்டு சுழற்றி கொண்டிருந்தனர்...

இன்னும் சிலதுகளோ அந்த பூங்காவில் பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள் பின்னால் துரத்தி கொண்டு ஓடின...

அவர்களையே இமை தட்டி ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் அந்த அவள்...கண்களில் ரசனையான பார்வை இருந்தாலும் முகத்தில் ஏனோ அது பிரதிபலிக்கவில்லை.. அதே வெளுத்த முகமும் இதழில் ஒரு கசந்த புன்னகையுமாய் அந்த வாண்டுகளையே பார்த்து ரசித்து கொண்டிருந்தாள்...

அதுவும் ஒரு குட்டி ரோஜா அப்பொழுது தான் நடை பழகி இருக்கவேண்டும்.. அதற்குள் மற்றவர்களை போல ஓடி ஆட ஆசைபட்டு வேகமாக எட்டி வைக்க முயன்று கொண்டிருந்தாள்...

அதை கண்டதும் அந்த பெண்ணவளின் கண்கள் ஆச்சர்யத்தில் மிளிர்ந்தன...உடனே அவள் கை ஒன்று அவள் வயிற்றுக்கு சென்று அடி வயிறை தடவி பார்த்தது..

இந்த மாதிரி ஒரு குட்டி தேவதையை சுமக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே என்று  உள்ளுக்குள் வேதனை வந்து அப்பி கொண்டது... அடுத்த நொடி அவள்