கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - பிந்து வினோத்
எஸ்.கே - நம் கதையின் கதாநாயகன்!
35 வயதை தாண்டியப் பிறகும் திருமணம் வேண்டாம் என்று இருக்கும் பேச்சலர். அண்ணா, அண்ணி, அவர்களின் குழந்தைகள் தான் அவனின் உலகம்.
அப்படி திருமணமே வேண்டாம் என்றிருக்கும் எஸ்.கே, 'பாஸ்' போல கறாராக தொட்டும் தொடாமல் பேசும் நந்தினியை பார்த்த உடனேயே காதல் வசப் படுகிறான்!
முதலில் மற்றவர்களைப் போல அவனையும் தள்ளியே வைக்கும் நந்தினி, மெல்ல மெல்ல அவனின் காதலை அங்கீகரிக்கிறாள்.
ஊடல், சண்டை, சச்சரவு இல்லாத காதலில் சுவாரஸ்யம் எது?
நந்தினி - எஸ்.கே காதலில் ஸ்ரேயா ஆ்தித்யா கல்யாணத்தின் வழியே கருத்து வேற்றுமையும், ஊடலும் ஏற்படுகிறது.
யாரிந்த ஆதித்யா, ஸ்ரேயா??? எதனால் அவர்களின் திருமணம் எஸ்.கே, நந்தினியை தொந்தரவு செய்கிறது?
தெரிந்துக் கொள்ள கதையை படியுங்கள்!
நம் மனம் கவர்ந்த எஸ்.கே - நந்தினி ஜோடியின் இந்த காதல் டூ கல்யாணம் பற்றி படிக்கலாம் வாங்க!!!!
Prologue
“நந்தினி கிட்ட கல்யாணம் பத்தி பேசினீங்களா அண்ணி? அவ சம்மதிச்சிட்டாளா?”
எஸ்.கே வின் கண்களில் மின்னிய ஆர்வம் அஸ்வினியை தயங்க வைத்தது.
அவளுடைய அந்த தயக்கமே எஸ்.கே விற்கான பதிலை சொல்லாமல் சொன்னது.
நந்தினி சம்மதித்திருந்தால் சந்தோஷம் பொங்க இந்நேரம் அண்ணியே ஸ்வீட்டுடன் அவன் முன் நின்றிருப்பார்களே!
புரிந்துக் கொண்டவனாக,
“அவ ஒத்துக்கலைல! எனக்குத் தெரியும். அவளுக்கு ஹெட் வெயிட் ஜாஸ்தி! க்ர்ர்ரர்ர்ர்..”
எஸ்.கே வின் முகம் போனப் போக்கைப் பார்த்து அஸ்வினிக்கு சிரிப்பு வந்தது. அவனின் தலை முடியை பாசத்துடன் கலைத்தவள்,
“37 வயசுக்கு நீ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க எஸ்.கே.” என்றாள் சிரிப்பு மின்ன.
“ஏன் அண்ணி இவ்வளவு வருஷம் கழிச்சு எனக்கு லவ் வந்துச்சே, அது ஒரு ஆர்ட்னரி பொண்ணு மேல வந்திருக்க கூடாதா? இருந்திருந்து இந்த நான்ட்ஸை தானா எனக்குப் பிடிக்கனும்!!!”
“லூசு மாதிரி பேசாதே! நந்தினி அப்படி சாதாரண பொண்ணு மாதிரி இருந்திருந்தா நீ அவளை கவனிச்சுக் கூட இருந்திருக்க மாட்ட!”
“ஒரு வேளை நான் அப்படி சாதாரணமா இருக்கேனோ. அதான் அவ வேண்டாம்னு சொல்றாளோ?”
“நந்தினி வேண்டாம்னு சொல்லலை எஸ்.கே”
அஸ்வினி முழுதாக சொல்லிக் கூட முடித்திருக்கவில்லை, அவளுடைய கையைப் பற்றி,
“அப்போ ஓகே சொல்லிட்டாளா??? சொல்லிட்டாளா???” என்று அவன் கேட்ட விதத்தில் கைக்கு ப்ராக்ச்சர் வந்து விடுமோ என்று அஸ்வினிக்கு பயமாக இருந்தது.
“கையை விடு எஸ்.கே! ஹப்பப்பா... உன் இம்சையை தாங்க முடியலை... நந்தினி யோசிச்சு சொல்றேன்னு சொன்னா. அவ உன்னை லவ் செய்றான்னு தான் எனக்கு தோணுது. நடந்த விஷயத்தை எல்லாம் தாண்டி... பாவம்ப்பா அவளும்...”
அவனின் உள்ளேயும் வருத்தம் இழையோடியது... உண்மை தான்!!!
ஆனால், அவனால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக போவதாக அவனுக்கு தோன்றியது...
காதல், திருமணம் என்றெல்லாம் யோசிக்க வைத்து இப்படி அவனை அரைப் பைத்தியமாக்கி விட்டாளே...!!!
நான்ட்ஸ்....
அவள் பெயரை நினைத்தாலே இனிப்பாக தான் இருந்தது!
“ஹ்க்கும்... ஹ்க்கும்...! எஸ்.கே... நான் இன்னும் இங்கே தான் இருக்கேன்... அதுக்குள்ளே நந்தினியோட ட்ரீம் லான்ட்க்கு போயிட்டீயா???”
மீண்டும் அவனின் தலை முடியை கலைத்துக் கேட்டாள் அஸ்வினி...
அசடு வழிய சிரித்தான் எஸ்.கே.
“இப்படி எல்லாம் சிரிச்சு நந்தினியை பயமுறுத்தாதே எஸ்.கே! நீ ஆல்ரெடி காதல் பைத்தியம் பிடிச்சு பைத்தியமா சுத்துறேன்னு எனக்கும் தெரியும்... நந்தினியா எப்போ யோசிச்சு முடிக்குறது... அதனால தான அவளை அத்வித்தா பர்த்டே பார்ட்டிக்கு வர சொல்லி இருக்கேன்... அப்போ அவக் கிட்ட மனசு விட்டு பேசு...”
“அண்ணி!!! யூ ஆர் ஸோ ஸ்வீட்!!!!”
அவன் மீண்டும் அவளின் கையை பிடிக்க வர, அஸ்வினி கையை பின்னால் வைத்து மறைத்துக் கொண்டாள்!
“நீ கையெல்லாம் பிடிக்காமலே சொன்னால் போதும்!!!!”
மீண்டும் அசடு வழிந்தவன்,
“பர்த்டே பார்ட்டியில டான்ஸ் இருக்கா அண்ணி...” எனக் கேட்டான் ஒரு ட்ரீமி சிரிப்புடன்..
“டான்ஸா?”
“ஆமா அண்ணி, டான்ஸ் தான்...!!!!”
நந்தினியின் மனதை மாற்றுவது எப்படி என்று தான் அவனுக்கு நன்றாக தெரியுமே...
நந்தினி மேடம் வாங்க வாங்க!!! யுவர் எஸ்.கே இஸ் வெயிட்டிங் ஃபார் யூ...!!!!
Episode 01
சிவா சிவாய போற்றியே நமச்சிவாய போற்றியே
பிறப்பறுக்கும் ஏகனே பொறுத்தருள் அநேகனே
பரம்பொருள் உன் நாமத்தை கரங்குவித்துப் பாடினோம்
இறப்பிலி உன் கால்களை சிரங்குவித்து தேடினோம்
பரந்து விரிந்த அந்த பெரிய அறையின் ஒரு பக்கம் இருந்த சி.டி ப்ளேயரில் பாடல் பாடிக் கொண்டிருந்தது. அதன் பக்கம் இருந்த சிறுமிகள் தங்களுக்குள் சத்தமாக ஏதேதோ கதைப் பேசி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அதே அறையின் இன்னொரு பக்கம் அந்த குழந்தைகளின் அம்மாக்களுக்கு வாழை இலையில் உணவுப் பரிமாறிக் கொண்டிருந்தாள் அஸ்வினி.
அன்று வரலட்சுமி விரதம்!
அமெரிக்காவில் செட்டிலாகி இருக்கும் குடும்பம் என்றாலும், இது போன்ற சிறப்பு நாட்களில் பராம்பரிய முறைகளை பின்பற்றுவது அந்த குடும்பத்தின் வழக்கம்.
- பிந்து வினோத்
- பிந்து
- Bindu Vinod
- Bindu
- Vinod
- வினோத்
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee
- NandsSK