தங்கமே உன்னைதான் தேடி வந்தேன் நானே - சசிரேகா
முன்னுரை
கள்ளக்கடத்தல் செய்யும் கதாநாயகன் அஜாதசத்ருவின் வாழ்வில் வரும் ஒரு பெண்ணால் அவனும் அவனது தொழிலும் வாழ்க்கையும் எப்படி திசை மாறியது இறுதியில் இருவரும் இணைந்தார்களா என்பதை சொல்லும் கதையிது.
பாகம் 1
இராமேஸ்வரம்
இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் உள்ள ஒரு கூப்பேவில் அஜாத சத்ரு எனும் அசாத் தன் தோழன் நாகாவுடன் இராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்வதற்காக பயணப்பட்டான்.
அதே ரயிலில் பல பேர் பயணப்பட்டார்கள். அதில் அவனை கவர்ந்தது அவனுடைய சீட்டிற்கு எதிர்புறம் இருந்த சீட்டில் இருந்த பெண் மட்டுமே, அவள் ரெயிலில் ஏறியது முதல் தன்னிடமிருந்த செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு முறை அவள் விளையாட்டில் ஜெயிக்கும் போதும் அதிகளவு சந்தோஷப்பட்டாள். அவளின் சந்தோஷத்தை கண்டு அசாத் கூட சந்தோஷப்பட்டான். அவள் தோற்கும் போது கவலையடைந்தாள் அதில் அவனும் கவலைப்பட்டான்.
அவன் தன்னை பார்க்கிறான் என அந்தப் பெண் கவனிக்கவில்லை அவளுடைய கவனம் முழுவதும் விளையாட்டின் மீதே இருந்தது. அந்த கூப்பேவில் அசாத், நாகா மற்றும் அந்த பெண் தவிர யாருமில்லாமல் போக அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அசாத் கூட தன் சிறுவயதில் பலவிதமான வீடியோ கேம்ஸ்களை விளையாடினான் ஆனால் இப்போது அதெல்லாம் நினைத்தால் சிரிப்பு வருமே தவிர வேற எந்த உணர்வும் அவனுக்கு வராது.
சிறுவயதில் சிறகடித்துப் பறந்த அவன் ஒரு கட்டத்தில் தனக்கும் தெரியாமல் கடத்தல் தொழிலில் ஈடுபட்டான். அத்தொழிலில் ராஜாவாக மகுடம் சூடாமலே ஒளி வீசினான்.
அவனது 10-வது வயதில் படிப்பில் பெயில் ஆன குற்றத்திற்காக அவன் தந்தை அடிக்கவும் வீட்டை விட்டு வெளியே வந்தவனின் பார்வை கடத்தல் செய்பவர்களின் மீது விழ அவனும் அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.
அவனுடைய திறமை புத்திசாலித்தனம் எப்படி மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வது போன்ற யுக்திகளால் அவன் அவர்களை விட மேலானவன் ஆனான்.
அவனது ஐடியாக்களால் கடத்தல் செய்பவர்கள் பலர் பயன்பெற்றார்கள். அதற்காக அவனுக்கு தாங்கள் சம்பாதித்த பணத்தில் பர்சன்டேஜ் தருவது வழக்கமாக இருந்தது. அசாத்தும் அந்த பணத்தை அந்த வயதிலேயே தனக்கென ஷேர்மார்க்கெட் பங்குகளில் முதலீடு செய்து முன்னனியில் இருந்தான்.
ஷேர்மார்க்கெட்டில் பணம் போட்டு பணம் எடுப்பது புதிதாக ஷேர்ஸ் வாங்குவது என அனைத்திலும் அவன் நெம்பர் ஒன்னாக திகழ்ந்தான். ஒரு பிரச்சனை வந்தால் மற்றவர்கள் யோசித்து முடிக்கும் முன்பே அதை வேகமாக தீர்க்கும் திறன் அவனிடம் அதிகமாக இருந்தது.
அதனால் அவனுக்கு அவனை விட பெரிய கடத்தல்காரர்களின் நட்பு கிடைத்தது. அசாத்தின் திறமையால் பெரிய கடத்தல்காரர்களும் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறினார்கள்.
எவ்வளவு உயர்வுக்கு சென்ற போதும் அசாத்தை அவர்கள் கைவிட்டதில்லை. மாதா மாதம் அவனுக்கென்று பங்கு தொகை அவனுடைய அக்கவுண்டில் சேர்ந்து கொண்டேயிருக்கும். அவர்களுக்கு என்றாவது ஒரு நாள் பிரச்சனைகள் வந்தால் அதை அவனிடம் சொல்லி அதற்கான தீர்வையும் பெறுவார்கள்.
ஆரம்ப கட்டத்தில் வெறும் ஐடியாக்கள் மூலம் பணம் சம்பாதித்த அசாத் ஒரு நாள் அவனே கடத்தல் செய்தாலென்ன என திட்டம் போட்டான்.
அதன்படி அவன் முதல் முதலாக தங்கத்தை கடத்தல் செய்ய ஆரம்பித்தான். அதுவும் வெற்றியை கொடுக்க அவனுக்கு வெற்றியின் ருசி பிடித்துவிட்டது. அதன் மேல் அவனுக்கு ஏற்பட்ட தாகம் இன்றும் கூட ஓயவில்லை.
அசாத்தின் தந்தை ஒரு பிசினஸ்மேன் என்பதால் அசாத்தின் செய்கைகள் அவருக்கு பிடிக்காமல் போனது, பள்ளிப்படிப்பில் கோட்டை விட்ட மகனை கண்டிக்க கண்டிக்க அவனும் திசைமாறி போவதைக் கண்டவர் அவனுக்காக பணம் செலவழிப்பதை நிறுத்திவிட்டார்.
அதைப்பற்றி அசாத்தும் கவலையடையவில்லை அவன் போக்கில் அவன் கடத்தல்காரனாகவே வளர ஆரம்பித்தான்.
தன்னுடைய இரண்டாவது மகனான அசாத்தின் மீதிருந்த கோபத்தின் வெளிப்பாட்டால் அவருடைய தந்தை தன்னுடைய மற்ற 2 புதல்வர்களின் மீதும் பாசத்தை கொட்டி வளர்த்தார். முதல் பையனை டாக்டராகவும் கடைசி மகனை போலீசாகவும் மாற்றினார்.
நாட்கள் செல்ல செல்ல அசாத்தின் தொழில் விரிவடைய ஆரம்பித்தது. 21 நாடுகளின் அரசாங்கம், கடத்தல்காரர்கள் அனைவருக்கும் அவனைப் பற்றி தெரிந்திருந்தது. போலீசும் அவனை தேட ஆரம்பித்தனர். அவனுடைய ஒரே தொழில் தங்கம் கடத்தல் மட்டுமே வேறு எதையும் அவன் செய்வதில்லை செய்ய வேண்டிய எண்ணமும் அவனுக்கு தோன்றவில்லை.
வெளிநாட்டு போலீசும் அவனை தேடுவதில் முனைப்பாக இருந்தனர். அசாத் இதுவரை செல்லாத நாடுகளே இல்லை, எந்த நாட்டில் தங்கத்திற்கு முன்னுரிமையும் தேவையும் ஏற்படுகிறதோ அந்த நாட்டை சேர்ந்தவர்கள் அதற்காக அசாத்தை மட்டும்தான்