டிங் டாங் கோயில் மணி- சசிரேகா
சிவன் கோயில்
இன்று பிரதோஷம் நாள்
தாயின் வற்புறுத்தல் காரணமாகவே அவரது ஒரே செல்ல மகன் என்பதால் அவரின் விருப்பத்தை புறக்கணிக்க முடியாமல் அவருடன் பிரதோஷத்திற்கு சிவன் கோயிலுக்கு வந்த நானோ அங்கிருக்கும் கூட்டத்தைக்கண்டு அதிர்ந்து ஓரமாக சென்று நின்றுக் கொண்டு என்னுடைய செல்போனில் வாட்ஸ்அப் சேட்டிங்கில் பிசியாக இருந்தேன். அதுவும் போரடிக்கவே மெல்ல இயர்போன் மாட்டி பாடலை கேட்க எண்ணினேன். அதற்காக நான் ஒரு பாடலை தேர்ந்தெடுத்தேன்.
டிங் டாங் கோயில் மணி
கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிரொலி
நீ தந்தது காதலின் உயிர்வலி
டிங் டாங் கோயில் மணி
கோயில் மணி நான் கேட்டேன்
உன் பேர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
சொல்லாத காதல் சொல்ல
சொல்லாகி வந்தேன்
நீ பேசு இனி நீ பேசு
சொல் ஏது இனி நான் பேச
கனவுகளே கனவுகளே
பகல் இரவோ நீள்கிறதே
இதயத்திலே உன் நினைவு
இரவு பகல் ஆள்கிறதே
சற்று முன்பு நிலவரம்
எந்தன் நெஞ்சில் கலவரம்…கலவரம்
பாடலில் என்னை நான் மறந்தேன். கற்பனையில் நுழைந்தேன் எனக்கேற்ப கற்பனை உலகத்தை உருவாக்கி அதில் மகிழ்ந்துக் கொண்டிருந்தேன். பாடலின் சில வரிகள் கூட கேட்டிருக்க மாட்டேன் என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் வித்தியாசத்தை உணர்ந்தேன்.
என்னைக் கடந்து சென்றவர்களோ எனது செயலைக்கண்டு தலையில் அடித்துக் கொண்டும் சிலர் முகத்தை சுழித்துவிட்டும் சென்றார்கள் இன்னும் சிலர் என்னிடம் கோயிலில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அறிவுரையும் தந்தார்கள். அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக் கொண்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு எனது தாயின் வரவிற்காக பொறுமையாக காத்திருந்தேன்.
பிரதோஷம் அல்லவா அபிஷேகம் ஆராதனை என எப்படியும் 3 மணி நேரத்திற்கு மேலே ஆகும் என தாய் சொன்னது நினைவில் வரவே நொந்துப்போனேன். 3 மணி நேரம் என்ன செய்வது என திகைத்து நின்றேன்.
என்ன வேண்டுதல் அப்படி என் தாய்க்கு நல்ல படிப்பு படித்தேன் நல்ல வேலையும் கிடைத்துவிட்டது கை நிறைய சம்பளம் வீட்டுத்தேவைக்கு அதிகமாகவே சம்பளம் மிச்சமாகிறது
அமைதியும் சந்தோஷமும் வீட்டில் அலைமோதிக் கொண்டிருக்க இன்னும் கடவுளிடம் வேண்டிக் கொள்வது எதற்காக இன்னும் என்ன தேவை உள்ளது ஏன் இங்கு வரவேண்டும் இந்த கூட்ட நெரிசலில் சிரமத்துடன் 3 மணி நேரம் காத்திருந்து கடவுளை தரிசித்து செல்ல வேண்டும் அப்படி என்னதான் தாயின் மனதில் உள்ளதோ என பலமாக நினைத்தேன்
ஒருவேளை எனது திருமணத்தைப்பற்றி யோசிக்கிறார்களா அல்லது வேலையில் பணிஉயர்விற்காகவா இருக்கலாம் இது இரண்டுமே எனக்கு மிகவும் தேவையானதே ஆனால் வேலையில் பணி உயர்வு வரவேண்டுமானாலும் அது என் கையில் உள்ளது எனது திறமையில் உள்ளது நான் சிறப்பாக வேலை செய்தால் மட்டுமே பணி உயர்வு நிச்சயம் அதிலும் வேலைக்கு சேர்ந்து 2 வருடங்கள்தானே ஆகிறது அதற்குள் எப்படி பணி உயர்வு கிடைக்கும்
அப்போது வேறென்ன ஓ தாயின் மனதில் இருப்பது எனது திருமணம் பற்றிதான் போலும் இப்போது நினைவிற்கு வருகிறது கடந்த 1 வார காலமாக வீட்டில் திருமணப் பேச்சுக்களும் கல்யாண புரோக்கர் வந்து சென்றதும் எனக்காகதானா ஆக எனது தாய் அவளைப் போலவே அன்பு பொழியும் அழகிய மருமகள் வரவேண்டி பிரார்த்தனை செய்ய வந்திருக்கிறாள் நல்லது
அவர்களது வேண்டுதலை நாம் ஏன் கெடுக்க வேண்டும் ஒவ்வொரு மனிதனும் திருமண பந்தத்தால் அல்லவா வாழ்க்கையில் முழுமையடைகிறான் என நினைத்து தாயை தொந்தரவு