உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்... - பிந்து வினோத் : Un parvaiyil paithiyam aanen... - Bindu Vinod
 

உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்... - பிந்து வினோத்

ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு செட்டிங்கில் எழுதுவது பெரிய சவால் தான்... ஆனால் அந்த சவால் தான் எழுதும் செயல்முறையை எனக்கு இன்னும் எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டிங் ஆக்குவதும் கூட!!! :-)

அப்படி யோசித்து, நான் முன்பு விளையாடிய ஒரு வுமன்ஸ் கிரிக்கெட் லீக் அனுபவத்தை வைத்து எழுதிய ‘கற்பனை’ காதல் கதை தான் இந்தக் கதை!

இது ஒரு ஜாலி கோ ரவுன்ட் கதை :-) ஸ்வரூப் & மதுவின் காதல் கதையை சொல்லும் கதை!

ரொம்ப லாஜிக் எல்லாம் எதிர்பார்க்காதீங்க... :-) ஒரு ஸ்வீட் லவ் ஸ்டோரின்னு நினைச்சுப் படிங்க :-)


 

01. உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்...

ஜான்சி ராணி க்ளப் (JRC) ஜெயிக்க இரண்டு பால்களில் ஏழு ரன்கள் எடுக்க வேண்டும்....

விளையாடிக் கொண்டிருப்பது அந்த அணியின் தலைவி அமிதா....

வேலு நாச்சியார் க்ளப் (VNC) அணியினர் ஃபீல்டில் உத்வேகத்துடன் இருக்கிறார்கள்.

இதோ பந்து.... வாவ் அமிதா அதை அழகாக ஆடி 4 அடித்து விட்டார்....

JRC அணி ரசிகைகளின் கரகோஷம் காதை பிளக்கிறது....

ஒரு பால்.... வெற்றி பெற மூன்று ரன்கள் வேண்டும்....

இன்னும் ஒரு 4 அடித்து ஹீரோயின் ஆவாரா அமிதா????

இதோ கடைசி பந்து.... ஆக்ரோஷத்துடன் அடிக்கிறார் அமிதா....

ஓ...! பாலை கோட்டை விட்டு விட்டார்.... அமிதாவின் காலுக்கும் பேட்டுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் சென்ற பால் ஸ்டம்பை அடித்து தாக்கி விட்டது...

அமிதா க்ளீன் போல்ட்....

VNC அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...

அமிதா நடந்ததை நம்ப முடியாமல் நிற்க, அவளின் அணியின் ஓனர் லக்ஷ்மி பற்களை கடித்துக் கொண்டு தன் ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தாள்....

இந்த வருடமும் அந்த ஜெயாவின் அணியிடம் தோல்வியா??? ச்சே....!

02. உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்...

யோ ஸ்வரூ, இவளுங்க இம்சை தாங்க முடியலைடா...”

போனின் மறுபக்கம் ஒலித்த வினீத்தின் புலம்பலை கேட்டு புன்னகைத்த படி,

"கமான் மச்சி, பொண்ணுங்களை பார்த்து இப்படி பயப்படுற....” என்றான் ஸ்வரூப்...!

“நீ அங்கே இருந்து ஈசியா சொல்வ இங்கே வந்து பாரு அப்போ தான் உனக்கு தெரியும்.... தலைமுறை தலைமுறையா நம்ம குடும்பத்துல மதுரை ஆட்சியான பொம்பளைங்க ஆட்சி தான் நடக்குது.... ஒரே ஒரு தடவையாவது ஆம்பளைங்க டாமினேஷன் வந்து சிதம்பர ஆட்சி வருமான்னு பார்க்குறேன்.... ஹுஹும்.... நடக்கவே மாட்டேங்குது! அபிஷேக் மேல நிறைய நம்பிக்கை வச்சிருந்தேன்.... அவன் நம்ம அப்பாவை எல்லாம் விட ரொம்ப மோசமா இருக்கான்....”

போனில் புலம்பல் நிற்காமல் தொடர்ந்தது...

“அபி அப்படி என்ன செய்றான் வினீத்???”

“வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ.... அவன் வைஃப் சரோக்கு சாமரம் வீச தான் சாருக்கு இப்போலாம் டைம் இருக்கு.... சூப்பர் பிஸி....”

“அபியா அப்படி???”

“ஆமாம்...!!!! இவளுங்களை அடக்க யாராவது புதுசா வந்தா தான் உண்டு....”

“நீ கவலை படாதே மச்சான்... நான் ஆன் தி வே..... பொண்ணுங்க டாமினேஷனை நான் உடைச்சுக் காட்டுறேன்....”

“கேட்கவே ரொம்ப இனிமையா இருக்கு.... நாளைக்கு காலையில உன்னை பிக்கப் செய்ய ஸ்டேஷன் வந்திடுறேன்.... அப்புறமா நாம ப்ளான் செய்து அவங்களை தாக்குவோம்... இங்கே வந்தப்புறம் உனக்கு ரெஸ்ட் கிடைக்குமோ என்னவோ... ட்ரெயின்லேயே நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ....”

“ஓகே டா வினீத்.... பை.... நாளைக்கு நேரா பார்ப்போம்...!”

ஹெட்செட்டை கழற்றிய ஸ்வரூப் 27 வயதான இளைஞன். சொந்த ஊர் நீலகிரியை அடுத்து இருக்கும் மலையூர்.... ஊட்டியை தோற்கடித்து விடும் அளவிற்கு நல்ல சீதோஷண நிலையை கொண்ட ஊர். அவனின் பெற்றோர் சிறு வயதிலேயே லண்டன் சென்று செட்டிலாகி விட்டதால், இவர் பார்ன் அண்ட் ப்ராட் அப் இன் லண்டன்.

இப்போது, சில வருடங்களுக்கு பிறகு பெற்றோரின் சொந்த ஊருக்கு உறவினர்களை சந்திக்க செல்கிறான்.

மேன் வித் அ மிஷன்!

அப்படி என்ன ‘மிஷன்’ என்பதை தான் மேலே தெரிந்துக் கொண்டீர்கள்.

ஸ்வரூப் குடும்பத்தில் எப்போதும் பெண்கள் ராஜ்ஜியம் தான் (அவனின் அம்மாவையும் சேர்த்து தான்)!!! இதை மாற்றி, தான் ஒரு வீராதி வீரர்(!!!) என ப்ரூவ் செய்ய கிளம்பி இருக்கிறார் சார்...

ப்பர் பர்த்தில் இருந்துக் கொண்டு மொபைலை நொண்டிக் கொண்டிருந்தவனின் காதில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது.

சிரிப்பு சத்தத்தை வைத்தே அது இளம் பெண்ணின் சிரிப்பு என்று தெரிந்து விட, ஸ்வரூப் தன்னுடைய மொபைலை நோண்டும் முக்கிய வேலையை விட்டு