Chillzee KiMo Books - என் இதய மொழியானவனே - சசிரேகா : En idhaya mozhiyanavane - Sasirekha

என் இதய மொழியானவனே - சசிரேகா : En idhaya mozhiyanavane - Sasirekha
 

என் இதய மொழியானவனே - சசிரேகா

 

 

 

ஊட்டி மலை அடிவாரத்தில் காலை மணி 4

”ஆஹா என்ன ஒரு குளிர்ச்சி, உடம்பெல்லாம் சிலிர்க்குது மே மாச வெயிலுக்கு வெந்துப் போன உடம்புல இந்த குளிர் காற்று பட்டதும் ஏதோ நான் மேகத்தில மிதக்கற மாதிரி இருக்கேனே சுகம், சுகம், இதுவே அற்புத சுகம் ஆஹா ஓஹோ” என அபிநாதன் அலப்பறை செய்தபடி ரோடின் ஓரத்தில் இருந்த சிமெண்ட் திட்டின் மீது ஏறிக் கொண்டு கைகளை இரு பக்கமாக விரித்தபடியே கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனது செயலைக் கண்டு வெறுத்த அவனுடன் வந்த நண்பர்களோ தலையில் அடித்துக் கொண்டார்கள்.

”இன்னும் கொஞ்ச நேரத்தில உறைஞ்சி போய் பனிச்சிலையா மாறிடுவோம் போல இருக்கு, இதுல சுகம் சுகம்னு அலப்பறை பண்ணாதடா கார்ல வந்து ஏறு, எங்களால வெளிய நிக்க முடியலை குளிருது வாடா” என அபிநாதனின் நண்பன் பழனி குளிரில் நடுங்கியபடியே பேச முடியாமல் வாய் குளறி வார்த்தைகளை உளறி கொட்ட அதைக் கேட்ட அசோக்கும்

”ஆமாம்டா ரொம்ப குளிருது வாடா” என பொறுமையிழுந்து கத்தினான்.

அவனின் கத்தலைக் கேட்ட அபியோ மெல்ல அவர்களை திரும்பிப் பார்த்து இளப்பமாகச் சிரித்தான்.

”டேய் என்னடா ஆச்சி உங்களுக்கு, எவ்ளோ இதமா இருக்கு க்ளைமேட் அதை அனுபவிக்காம கத்தறீங்களே”

”எது இதுவா அடப்பாவி கொட்டுற பனியில யார் யார் எங்க இருக்காங்கன்னு கூட தெரியலை, கண்ணே மசமசன்னு இருக்கு கார் வேற தள்ளி நிப்பாட்டியாச்சி, இப்ப காரை வேற தேடனும் போல இருக்கே வாடா போலாம்” என அசோக் கத்த அதற்கு அபியோ

”இருடா இன்னும் கொஞ்ச நேரம் இந்த சுகத்தை அனுபவிச்சிட்டு வரேன்”

”முடியாது காலாங்காத்தால என்னடா விளையாட்டு இது வினையாயிடப் போகுது, அவனவனுக்கு உடம்புல ஓடற ரத்தமே உறைஞ்சிடும் போல இருக்கு வாடா” என பழனி கத்த பொறுமையிழந்த அபியோ சிமெண்ட் திட்டில் இருந்து இறங்கி அவர்களிடம் வந்து கோபமாக நின்றான்

”ஊட்டிக்கு போலாம்னு ஆர்ப்பாட்டமா ரெடியாகி கூப்பிட்டு வந்தீங்க, இப்ப எதையும் அனுபவிக்காம ஓடி ஒளிஞ்சா என்னடா அர்த்தம்” என கத்த

”அதுக்குன்னு நேரம் காலம் இல்லையாடா காலையில 10 மணிக்கு மேல எல்லாத்தையும் அனுபவிக்கலாமே இப்ப எதுக்கு”

இப்பதான் சுத்தமா இதமா இருக்கும்” என அபி சொல்ல அதற்கு

“பேசாம வாடா என்னால முடியலை, விட்டா குளிர் ஜூரம் வந்துடும் போல இருக்கு வந்து தொலைடா” என பழனி கத்த

”அடுத்த மாசம் ஸ்கூல் திறக்குது, இந்த மே மாசம் லீவு ஒரு வாரம் இங்க ஜாலியா என்ஜாய் பண்ணலாம்னு பார்த்தா முடியாது போல இருக்கே, சரியான நோஞ்சான்ங்க கூட நான் டூருக்கு கிளம்பிட்டேன்” என நொந்துக் கொண்ட அபியிடம்

“யாரை பார்த்து நோஞ்சான்ங்கன்னு சொன்ன, நாங்க சுத்த வீரன்ங்கடா பார்க்கறியா, குஸ்திக்கு வர்றியாடா” என பழனி கோபத்தில் உடலை விறைத்தபடியே நின்று கத்த உடனே அபி புன்னகைத்தான்

”இதை இதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன் இப்ப குஸ்தி போட வேணாம், வாங்கடா சும்மா அங்க நிக்கலாம் வாங்க” என கூப்பிட அசோக்கோ அபியின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான்

”ஒண்ணும் வேணாம் இதை விட சூசைட் பாயின்ட்ல இன்னும் நல்லா இருக்குமாம் அங்க வேணா சேர்ந்து நிக்கலாம் இப்ப வாடா” என அவனை அழைத்துக் கொண்டு கார் நின்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள்.

”சே இதுக்குதான் உங்களோட வரக்கூடாதுன்னு நினைச்சேன், இதே எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா என் ஒய்ப்போட ஹனிமூன்னு சொல்லிட்டு ஊட்டிக்கு வந்து இப்படி காலை நேரத்தில டைட்டானிக் பட எபெக்ட்ல கையை விரிச்சிக்கிட்டு நின்னு என்ஜாய் பண்ணியிருக்கலாம்”

”கல்யாணம்தானே செஞ்சிக்க வேண்டியதுதானே யார் வேணாம்னு சொன்னா” என்றான் அசோக்

”கிண்டலா நானா வேணாம்னு சொன்னேன், சின்ன தாத்தா தான் உன் கடமையை செய் கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்னு சொன்னாரு தெரியுமா” என அபி சொல்ல

”நீதான்டா உன் வீட்லயே கடைசியாளு, உன் பெரிய தாத்தாவுக்கு 2 பசங்க அவங்கவங்க வேற வேற வேலைகள்ல சிறப்பா இருக்காங்க, பெரிய தாத்தாவோட பேரன்களே கல்யாணம் ஆகி குழந்தைகளையும் பெத்து அந்த புள்ளைகளும் நம்ம ஸ்கூல்லதான் படிக்கறாங்க, தினமும் நீதானே அந்த புள்ளைங்களை கார்ல கூட்டிட்டு வர்ற”

”ஆமாம் அதனால என்ன இப்ப நம்ம வீட்டு புள்ளைங்களே நம்ம ஸ்கூல்ல படிக்கலைன்னா ஊர் தப்பா பேசாத”

”அடேய் நான் அதைச் சொல்லலைடா அவங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி சீரும்