Chillzee KiMo Books - நினைவில் வாழும் நிஜம் - ஜெபமலர் : Ninaivil vazhum nijam - Jebamalar

நினைவில் வாழும் நிஜம் - ஜெபமலர் : Ninaivil vazhum nijam - Jebamalar
 

நினைவில் வாழும் நிஜம் - ஜெபமலர்

கதையை வாசிக்கும் அன்பு உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றி...

இந்த கதையை வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

அத்தியாயம் 01

ம்மா...ஆரிக்க பாருங்கமா, என்னோட பூரிய சாப்பிட்டுடான் என்றாள் ரஷினா

ம்மா...இவ சும்மா சொல்றா .. ஆறு பூரிய சத்தமே இல்லாம சாப்பிட்டுட்டு அட்டகாசமா சீன் போடுறா இந்த மங்கம்மா.. என்று வம்பிழுத்தான் ஆரிக்

ம்மா... இவன ஒழுங்கா பேச சொல்லுங்க.இல்லனா இவன நான் புட்பால் அடிச்சிடுவேன்..

2பேரும் சாப்பிடுற வேலைய மட்டும் பாருங்க.. உங்க பஞ்சாயத்துக்கு நான் வரல என்றபடியே சூடான பூரிய தட்டுக்கு மாற்றினார்கள்.. ஜோதி

 

பாய் சுவீட் மாம் & மை செல்ல ராட்சசி என்றவாறே ரஷினாவின் தலையில் தட்டிவிட்டு கால்பந்தாட்ட மைதானத்திற்கு கிளம்பினான் ஆரிக்...

 

2பூரி எடுத்துட்டு வர இவ்ளோ நேரமா மம்மி என்று கத்த

இதோ வரேன்டீ என்றவாறே வெளியே வந்தவர் மாடிப்படியில் இருந்து உற்சாகமாக இறங்கி வரும் மகனை கண்டதும் அப்படியே நின்று விட்டார்.

ஆறடி உயரத்தில் மாநிறத்தில் கண்களில் வெற்றி பெருமிதத்துடன் இதழோடு நிரந்தரமாய் குடியிருக்கும் புன்னகையோடு கைகளில் கார் சாவியை சுற்றி கொண்டே இறங்கி வருவதை பார்த்ததும் கண்களில் நீர் கட்டி கொண்டது..

 

தன் கனவான ஸ்டார் ஹோட்டலை திறந்து வெற்றி பெற்று விட்டான்.. ஆனால் இந்த நாளை காண்பதற்குமுன் அவன் பட்ட கஷ்டம் தாய்க்கு மட்டுமே தெரியுமல்லவா...

 

ம்மா...உங்கபுள்ள சாப்பிட உட்கார்ந்து 5நிமிஷம் ஆகிட்டு.நீங்க இன்னும் கனவுலேயே இருந்தா எப்படி? சாப்பாடு கொடுப்பீங்களா...இல்ல.. என்றவளிடம்

என் பிள்ளைக்கு பிடிச்ச பொங்கல் சாம்பார் காரவடை செய்து வச்சிருக்கேன். நான் எடுத்துட்டு வரேன். இந்த பூரிய எடுத்து வைத்து நீயே சாப்பிடு என்றவாறே சமயலறை பக்கம் நகர்ந்தார்.

 

பார்த்திங்களா ப்ரோ .. வரவர மாம் ரொம்ப பண்றாங்க.. சரி அதை விடுங்க.. இன்றைக்கு செம ஹன்சம்மா இருக்கீங்களே, கேர்ள் பிரண்ட பார்க்க போரிங்களா என்று கண்சிமிட்டி சிரித்தாள் ரஷினா...

 

 இதழோரம் தெரிந்த புன்னகை கண்களிலும் பரவ அழகாய் சிரித்தான்...

 

அண்ணா நான் பேசிட்டே இருக்கேன். நீங்க ஒரு ஸ்மைலோடு நிறுத்திட்டீங்க.ரொம்ப கஞ்சம்...bad boy bro நீங்க என்றவளிடம் ...

அவனுக்கும் சேர்த்து தான் நீயே பேசுறியே அப்புறம் என்ன என்றவாறே பொங்கலை பரிமாறினார் ஜோதி...

 

அதே சிரிப்புடன் பொங்கலை ரசித்து உண்டவாறே... ரஷி ஹோட்டல் வாங்கியிருக்கிற காரணம் உனக்கு தெரியும்ல ஷோ அது நம்ம ஹோட்டல் என்று நம்ம நாலு பேர தவிர யாருக்கும் தெரிய வேண்டாம். சரியா என்றான்

 

சரி அண்ணா... எப்பவும் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் என்று தமையனின் தோளில் சாய்ந்து கொண்டாள் ரஷினா...

 

ரஷி...நான் இன்றைக்கு ப்ரீ தான் சோ வெளில எங்கயாவது போய்டு வரலாமா என்றான்..

 

ம்மா.. சீக்கிரம் குடை தாங்கம்மா.. நனையாம ரூம்குள்ள போய்டுறேன் என்று கலாய்த்தாள் ரஷினா

 

தம்பி அவா வரல போல.. அம்மாவ சர்ச்க்கு கூட்டிட்டு போறியாப்பா என்றாள் ஜோதி

 

அண்ணா நான் ரெடி பீச் போலாம் என்று துள்ளி குதித்த படியே உள்ளே ஓடினாள் ரஷினா..

 

இப்போ பீச்லா வேண்டாம் ரஷி என்ற ஜோதியிடம்

 

அம்மா... அவளுக்கு பீச் னா அவ்ளோ இஷ்டம்.. அவ என் விரல பிடிச்சுகிட்டு நடந்துகிட்டே கதை பேசும் போது அவளோட முகத்துல இருக்குற சந்தோஷத்துக்கு இணையா எதுமே இல்லமா... அவளுக்கு நான் அண்ணன் மட்டுமில்ல அப்பாவும் நான்