Chillzee KiMo Books - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா : Nodikkorutharam unnai ninaikka vaithaai - Sasirekha

நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா : Nodikkorutharam unnai ninaikka vaithaai - Sasirekha
 

நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா

முன்னுரை

எனது இந்த கதைப்படி காதலி தன் காதலனை தேடி அவன் இருக்கும் இடத்திற்கு வேலைக்கு வருகிறாள். காதலனுக்கு தான் யாரென தெரியாமலே அவனுடைய பிசினஸில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டுபிடித்து அதை அவனை வைத்தே ஒவ்வொன்றாக தீர்க்கிறாள்.

பல பிரச்சனைகளுக்குப் பிறகு காதலன் தன் காதலி யாரென கண்டுபிடித்தானா அவர்கள் இருவரும் எவ்வாறு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக ”நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய்” என்ற தலைப்பில் கதையாக எழுதியுள்ளேன்.

Chillzee Reviews

  

 

 

பாகம் 1

அன்று 1997

ஊட்டி

”டேய் சித்தார்த் ஏன்டா இப்படி கோபப்படற சொன்னா கேளு” என தன் பேரன் சித்தார்த் சக்கரவர்த்தியை அதட்டினார் அவனது பாட்டி சரோஜா. அதற்கு

”கேட்க மாட்டேன் பாட்டி நான் என்ன சொல்றேனோ அதுதான் இங்க நடக்கனும்” என்றான் பத்து வயது சித்தார்த் சக்கரவர்த்தி அதிகாரமாக

அப்பொழுது சித்தார்த்தின் வயது 10 ஆனால் பார்ப்பதற்கு 12 வயது போன்ற தோற்றத்தில் இருந்தான்.

வெள்ளை நிறத்தில் பணக்கார தோரணையில் கம்பீரமாக இருந்தான்.

அவன் உடுத்தியிருந்த உடை மேல்நாட்டு பாணியில் இருந்தது. அதை அவனுடைய அப்பா வெளிநாட்டிலிருந்து அவனுக்காகவே வரவழைக்கப்பட்டது.

”என்னடா ரொம்ப துள்ளற பெரியவங்க பேச்சை கேட்கனும்னு தெரியாதா உனக்கு ஒழுங்கா நாங்க சொல்றத கேளு” என்றார் சித்தார்த்தின் தாத்தா வேதநாயகம்

”நான் இங்கிருந்து போறேன். என்னால இங்க கான்வென்டில படிக்க முடியாது தாத்தா நான் ஊருக்கு போறேன் என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அங்கதான் இருக்காங்க” என்று அடம்பிடித்தான் சித்தார்த்

”எங்கப்போற, நீ ஒண்ணும் ஊருக்கு போகத் தேவையில்லை வீட்லயே இரு” என்றார் தாத்தா

”ஏன் நான் போகக்கூடாது நான் அம்மாகிட்ட போறேன் தாத்தா” என்றான் சித்தார்த்

”தாராளமா போகலாம் ஆனா இப்ப கிடையாது உங்கப்பா உன்னை இங்க விட்டுட்டு போயிருக்காரு நீ சரியா படிக்கனும் பெரிய ஆளா வரணும் அப்புறமாதான் ஊருக்கு உன்னை கூட்டிட்டு போவாரு அதுவரைக்கும் நீ இங்கதான் இருக்கனும்” என்றார் தாத்தா.

”அப்படியில்லை நீ இங்கிருக்கிற கான்வென்டில சேர்ந்து படிச்சாதான் பெரிய ஆளா வருவே இங்கிலீஷ்ல நல்லா பேசலாம் உங்கப்பா மாதிரி நீயும் வெளிநாட்டுக்கு போகலாம்

வெளிநாட்டில் இருக்கிறவங்களோட பிசினஸ் டீலீங் பேசறதுக்கும் அங்க இருக்கிறவங்களோட பழகறதுக்கும் தேவையான நாகரீகம், அவங்களோட மொழி, பழக்கவழக்கம் எல்லாத்தையும் நீ கத்துக்கணும்” என்றார் பாட்டி அதற்கு சித்து

”நான்தான் எல்லாத்தையும் கத்துக்கணுமா ஏன் என் தம்பிங்களும் கத்துக்க கூடாதா

நான் மட்டும் இங்க இருக்கேன் என் தம்பிங்க மட்டும் அம்மா கூட இருக்கனுமா” என்றான் கோபமாக சித்து

”அட அவங்க சின்ன பசங்க நீ அப்படியா இந்த குடும்பத்துக்கே மூத்த வாரிசு நீதான் இந்த குடும்பத்தையே பார்த்துக்கப்போற உங்கப்பா உருவாக்கின கம்பெனி பேக்டரிகளை நீதானே ஆளப்போற அதுக்கு நீ தயாராக வேணாமா சொல்லு” என்ற பாட்டி அவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல அவன் அவரை தள்ளி விட்டான்

”முடியாது பாட்டி நான் உங்க பேச்சை கேட்கமாட்டேன்” என கோபத்துடன் கத்த அதைக் கேட்ட தாத்தாவுக்கு கோபம் வந்தது

”டேய் என்னடா என் பொண்டாட்டியை தள்ளி விடற வர வர உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சி. இரு உன் முதுகுல நாலு அடி போட்டாதான் நீ சரியா வருவ” என்றார் தாத்தா வேதநாயகம்

உடனே பாட்டி சித்தார்த்தை தன்னிடம் இழுத்துக் கொண்டு

”இருங்க எதுக்கு இப்படி கோபப்படறீங்க அவன் சின்ன பையன்தானே அம்மாகூட தம்பிங்க கூட இருக்கனும்னு ஆசைப்படறான் அதுல ஒண்ணும் தப்பில்லையே இதுக்கு போய் நீங்க அவனை அடிக்கறேன்னு சொல்லலாமா” என கேட்க அதற்கு வேதநாயகம் தன் மனைவி சரோஜாவிடம்

”அதுக்காக உன்னை அவன் இப்படி தள்ளிவிடலாமா” என கோபமாக கேட்க அதற்கு சித்து

”ஏன் நான் பாட்டியை தள்ளி விட்டா உங்களுக்கு என்ன வந்தது”

”என்னவா அவள் என் பொண்டாட்டிடா அவளை நீ ஏதாவது செஞ்சா நான் சும்மாயிருக்க மாட்டேன்” என கோபமாக தாத்தா கத்த

தாத்தா கூறியது புரியாமல் சந்தேகத்துடன் அவரைப் பார்த்து

”பொண்டாட்டின்னா என்ன” என சித்து கேட்க

”உங்க அப்பாவுக்கு உங்கம்மா எவ்ளோ முக்கியமோ அதே மாதிரிதான் எனக்கும் என் பொண்டாட்டி

அவளை நான் சாகற வரைக்கும் பத்திரமா பார்த்துக்குவேன்னு சத்தியம் செஞ்சி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கேன்.

அவளுக்கு ஒரு சின்ன கஷ்டத்தை கூட நான் தரமாட்டேன்” என்றார் தாத்தா அதற்கு உடனே பாட்டி தன் கணவரிடம்

”அட என்னங்க நீங்க சின்ன பையன்கிட்ட இதெல்லாமா பேசுவீங்க அவனுக்கு இதெல்லாம் புரியற வயசு கிடையாது அவன் விளையாட்டு பையன்தானே”