அத்தியாயம் 1
போகலாமாங்க, என்றவாறே தன் முன் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சரிதா பேசாம பார்ட்டியை வீட்ல கொண்டாடிடுவோமா என்று கண்ணடித்தவனை பார்த்து முறைத்தாள் சரிதா.
வர வர நீங்க ரொம்ப மோசமாகிட்டீங்க, சீக்கிரம் கிளம்புங்க என்று சொல்லி கொண்டே இன்னும் கணவன் ரகுநாதன் பக்கத்தில் நெருங்கி நின்று கொண்டாள் சரிதா.
நீ இப்படி நின்னால் நாம போன மாதிரி என்று சொல்லியவன் அவள் பட்டுக் கன்னத்தில் செல்ல முத்தமிட்டு விட்டு தன் சட்டை பட்டனை மாட்டினான். அம்மூ, நீ வர வர அழகாகிட்டே போறடி என்றான்.
பாசத்தோடு பார்த்தா எப்போதும் அழகா தான் தெரிவேன். கல்யாணம் ஆகி பத்து மாதம் கழித்து தான் என் புருஷனுக்கு என் மேல பாசமே வந்திருக்கு போல என்று அலுத்துக் கொண்டாள்.
அப்படி இல்லை அம்மூ என்று ரகு ஏதோ சொல்ல வர அதற்குள் பொறுமை இல்லாமல் அலறியது சரிதாவின் அலைபேசி.
அழைப்பை பார்த்தவள் சிரித்து கொண்டே அழைப்பை ஏற்று லவுட் ஸ்பீக்கரில் போட்டு விட்டு சொல்லு சரோ என்றாள்.
ஹாய் சரி குட்டி, உன் புருஷன் கிட்ட கொஞ்சிகிட்டு இருந்த உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ என்றாள் சந்திரா.
ஏய்.. வாலு ஒழுங்கா அத்தானு சொல்லு... இல்லை கட் பண்ணிடுவேன் என்று செல்லமாக மிரட்ட
ஓகே சரிதா செல்லம்... செம மூட் ல இருக்க போல, என்ன விஷயம். பீச் பார்க் தியேட்டர்னு சுத்த கிளம்பிட்டீங்களா என்று கேட்க,
ஹாய் சந்திரா என்றான் ரகு.
அத்தான், சந்திரானு கூப்பிட்டால் நான் கெட்டவளாகிடுவேன். மரியாதையா சரோனு கூப்பிடுங்க என்று சொல்ல,
ஓகே மச்சினி, இப்போ கூப்பிட்டு இருக்க,ஆபிஸ் டைம் ல வொர்க்கை மட்டும் தான் பார்க்கனும்னு சொல்லுவ ஏதாவது முக்கியமான விஷயமா என்க...
ஆமா அத்தான். அடுத்த வாரம் அம்மா அப்பாவுக்கு டுவென்டி பிப்த் அனிவர்சரி, ஷோ ஒரு பங்ஷன் அரேன்ஜ் பண்ணனும், ஆனால் அது அவங்களுக்கு தெரிய கூடாது என்று சொல்லவும் சரி சரோ நல்லா பண்ணிடுவோம். ப்ளான் நீ போட்டுட்டு என்ன செய்யனும்னு ஆர்டர் போடு செய்து முடிக்கேன். உனக்காக இது கூட செய்ய மாட்டேனா என்றான் ரகு.
சரி... நீங்க வெளில கிளம்புறிங்களா என்றாள்.
ஆமா, சரோ அத்தான் ஆபிஸ்ல ஒரு பார்ட்டி, பேமிலியா போகனுமாம் அதான் கிளம்புறோம் என்றாள் சரிதா.
ஜாய்ன் பண்ணி நாலே மாதத்தில உன் புருஷன் பெரிய ஆளாகிட்டாரு போல, ஜமாய் என்றவள் சிறிது நேரம் பேசி விட்டு வைத்தாள்.
அதற்குள் ரகு தயாராகி நின்றான். இருவரும் கேப் வருவதற்காக காத்திருந்தார்கள்.
(வாங்க,.... அதற்குள் இவர்களை பற்றி சின்ன இன்ட்ரூ கொடுத்து விடுகிறேன்.)
சரிதா, சந்திரா இருவரும் டுவின்ஸ்.. இவர்கள் அப்பா ஆசிரியர். அம்மா ஹவுஸ் வொய்ப்.
சரிதா.. மிகவும் அமைதி டைப். நன்றாக பழகியவர்களிடம் மட்டுமே பேசுவாள். மற்றபடி எல்லாரையும் பொறுத்த வரை அமைதி பேர் வழி. தகப்பன் பேச்சுக்கு மாற்று கருத்து கூறவே மாட்டாள். என்ஜினியரிங் முடித்து விட்டு அப்பா சொன்ன ரகுவை திருமணம் செய்து