கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர் அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அந்த ஊர் திருமண மண்டபத்தில் நாதஸ்வரம் மேளம் தாளம் முழங்க ஊர் மக்கள் மற்றும் சுற்றத்தார் தாத்தா, பாட்டி, பெற்றோர்கள், தம்பிகள் மற்றும் 5 அத்தைகள் முன்னிலையில் ஐயர் வேத மந்திரங்கள் ஓத சந்தோஷமாக ஆதிபன் ஆதிராவின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தான்.
ஆனால் ஆதிராவோ மிகுந்த அதிர்ச்சியிலிருந்தாள். அதன் பின் நடந்த அனைத்து திருமண சடங்குகளிலும் ஆதிரா அமைதியாக விருப்பமேயில்லாமல் பொம்மை போல் நடந்து கொண்டாள். அதற்கு நேர்மாறாக ஆதிபன் அனைத்து சடங்குகளிலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டான்.
திருமண மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வந்த மணமக்களை ஆதிபனின் 5 அத்தைகளும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று அமர வைத்து பால் பழம் கொடுத்தனர். மதிய விருந்து மற்றும் இரவு விருந்து முடிந்து ஆதிராவை மற்ற பெண்கள் அலங்கரித்து கொண்டிருந்தனர்.
ஆதிபன் தன் அறைக்கு வந்த போது அவன் அறை மிகவும் அமர்க்களமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்டிலின் மீது புது மெத்தை விரிக்கப்பட்டு 2 தலையணைகள் வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது வாசனை பூக்களை தூவியும் கட்டிலை சுற்றி மலர் சரங்கள் கட்டியிருந்ததால் அறை எங்கும் நறுமனம் கமிழ்ந்தது.
அறையின் ஓரத்தில் ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. கட்டிலுக்கு அருகில் இருந்த டேபிளின் மீது வாசனை ஊதுபத்தி எரிந்து கொண்டும் பழங்களும் இனிப்புகளும் அடங்கிய தட்டுக்கள் மற்றும் ஒரு செம்பு முழுக்க பாலும் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த ஆதிபனோ நொந்துக் கொண்டான்
“எதுக்குதான் முதலிரவு அன்னிக்கு இவ்ளோ பழம் ஸ்வீட்ஸ் வைக்கிறாங்களோ எப்படியும் இன்னிக்கு முதலிரவு நடக்காது அது யாருக்குத் தெரியும், இந்த ஆதிரா வர்றதுக்குள்ள நாம தூங்கிடனும் இல்லைன்னா பத்ரகாளி மாதிரி ஆடுவா, ஏற்கனவே கல்யாணத்துக்கு வந்திருந்த அவங்க அப்பா அவள் கிட்ட பேசாம போய்ட்டார்ன்னு கோபத்தில இருக்கா இதுல நான் வேற அவள் கிட்ட மாட்டனுமா முடியாது
இன்னிக்கு கல்யாணமே நடக்குமா நடக்காதான்ங்கற அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் சண்டைகள்னு ஒருவழியா கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சி திரும்பியும் ஆதிரா கூட சண்டை போட வேணாம் போய் படுத்துக்கலாம் அவள் வந்தா ஏதாவது பண்ணிட்டுப்போற நமக்கென்ன” என வாய்விட்டு சொல்லியபடியே ஆதிபன் சென்று கட்டிலில் படுத்து சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.
மறுபக்கம் ஆதிராவை நன்றாக அலங்காரம் செய்து முடித்த கையோடு ஆதிபனின் அறைக்கு முன் அழைத்து வந்த பெண்கள் அவளை உள்ளே விட்டுவிட்டு கலகலவென சிரித்துக்கொண்டே கதவை இழுத்து மூடிவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டு சென்றுவிட்டார்கள்.
அந்த பேச்சுக்களை கேட்ட ஆதிராவிற்கு கோபத்தில் பற்றிக்கொண்டு வந்தது. உடனே ரூமிற்குள் வந்து கதவை தாளிட்டு விட்டு திரும்பிய ஆதிரா அங்கு ஆதிபனை தேட அவன் நிம்மதியாக கட்டிலில் படுத்து உறங்குவதை பார்த்ததும் அவளுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் அருகில் சென்று எழுப்ப முயற்சித்தாள். அவன் எழாததால் அருகில் டேபிள் மீதிருந்த ஐக்கில் இருந்த நீரை அவன் மீது கொட்டினாள். திடீரென முகத்தில் நீர் பட்டதால் உறக்கம் கலைந்து சற்று திடுக்கிட்டு தடுமாற்றத்துடன் எழுந்த ஆதிபன் ஆதிராவை பார்த்து மிகவும் கோபத்துடன்
”ஏண்டி இப்படி என் மேல தண்ணியை ஊத்தின” என அவன் டி போட்டு கோபமாக பேசவும் ஆதிரா கோபப்பட்டு அவனுடன் சண்டை போட ஆரம்பித்தாள்.
”டி யா நான் ஆதிரா அத்தான் தெரியும்ல” என்றாள் கெத்தாக
”தெரியும் இப்ப உன் பேரை சொல்லத்தான் தண்ணி ஊத்தினியா, தூங்கறேனே கண்ணு தெரியலை படிச்சவதானே நீ, இப்படியா நடந்துக்குவ” என ஆதிபனும் விடாமல் அவளுடன் வாக்குவாதம் செய்தான்.
”என்னையா திட்டறீங்க இந்த கல்யாணத்தில எனக்கு கொஞ்சமும் விருப்பமேயில்லை அத்தான் அது உங்களுக்கும் தெரியும்தானே”
”எனக்கும்தான் விருப்பமில்லை அதுக்காக உன்னைமாதிரி நானும் என்ன உன்மேலயா தண்ணியை கொட்டினேன் பாரு டிரஸ்ஸெல்லாம் ஒரே ஈரம்” என சொல்லிக் கொண்டே அவன் பாட்டுக்கு ஆதிரா இருப்பதையே கவனிக்காமல் அவள் முன்பே உடைகளை மாற்ற முனைய அதை பார்த்த ஆதிரா அலறினாள்.
”சீ உங்களுக்கு அறிவில்லையா அத்தான் ஒரு பொண்ணு முன்னாடி இப்படி டிரஸ் மாத்தறீங்களே சே சே” என அலட்டிக் கொள்ள அவனோ
”சே சேவா ஏண்டி முதன்முதலா என்னை பார்த்தப்ப நான் வெறும் வேஷ்டியோடுதானே இருந்தேன் அன்னிக்கு மட்டும் என் உடம்ப பார்த்து ரசிச்ச இன்னிக்கு என்ன வந்திச்சி” என குத்தலாக பேசினான் ஆதிபன்
”அன்னிக்கு வேற இன்னிக்கு வேற அத்தான் நான் அழகாயிருக்கற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன்” என ஆதிரா சொன்னதும் அவளை வினோதமாக பார்த்த ஆதிபன் அவளின் அருகில் சென்று
”அழகாவா அப்ப எனக்கு என்ன குறைச்சல்” என கேட்க அவள் உடனே