Chillzee KiMo Books - சிறு கதை தொகுப்பு - விஜயகுமாரன் : Siru Kathai Thoguppu - Vijayakumaran

சிறு கதை தொகுப்பு - விஜயகுமாரன் : Siru Kathai Thoguppu - Vijayakumaran
 

சிறு கதை தொகுப்பு - விஜயகுமாரன்

விஜயக்குமாரன் பகிர்ந்திருக்கும் நான்கு சிறு கதைகள்.

 

 

உன்னை காணவில்லையே நேற்றோடு

“ஆயுதப்படை பிரிவில் இருந்து லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு புதுசா மாற்ற இருக்கிறவங்க லிஸ்டில் உள்ள அந்த ஐந்து பேரை இங்க வரச் சொல்லுங்க” எஸ் பி உமா அலுவலக உதவியாளரிடம் கூறினார்.

“எஸ் மேடம்” என்று வெளியேறிய உதவியாளர் சற்று நேரத்தில் ஐந்து காவலர்களுடன் உள்ளே வந்தார். அவர்கள் உள்ளே வந்தவுடன் “நீங்கள் போகலாம்” என்று உதவியாளரை வெளியே அனுப்பினார்.

எஸ் பி முன் காவலர்கள் விரைப்பாக நின்றார்கள். “நீங்க அஞ்சு பேர் தான் நாளைக்கு லோக்கல் ஸ்டேஷனுக்கு போகிறவர்களா?” என்று கேட்டார். அதற்கு “எஸ் மேடம்” என்று பதிலளித்தார்கள்.

“ஆயுதப் படைப் பிரிவு என்பது வேறு சட்டம் ஒழுங்கு லோக்கல் போலீஸ் வேலை என்பது வேறு. இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இதுநாள் வரையும் ஆயுதப்படை பிரிவில் நல்லபடியா பயிற்சி முடிந்து எப்ப லோக்கல் ஸ்டேஷனுக்கு போறீங்க. குற்றப்பிரிவு விசாரணையில் எப்படி ட்ரெய்னிங் எடுத்து இருக்கீங்க என்று உங்களுடைய தகுதியை சோதிக்க இன்னைக்கு ஒரு டெஸ்ட் இருக்கு.அதை முடிச்சுட்டு நாளைக்கு நல்லபடியா லோக்கல் ஸ்டேஷனுக்கு போங்க” என்றார்.

அதற்கு பின் அவருடைய டேபிள் டிராயரில் இருந்து சில பேப்பர்களை வெளியே எடுத்தார். ஒவ்வொருவரிடமும் ஒரு பேப்பரை கொடுத்தார். அதில் ஒரு பெயரும் முகவரியும் இருந்தது.

“இந்த பேப்பரில் இருக்கும் நபரையும் அவருடைய வேலை, குடும்ப பின்னணி இதைப் பற்றிய முழு விவரம் இன்று மாலையே வேணும். முடிந்தால் அவரையும் குடும்பத்தையும் அவருக்கு தெரியாமலேயே போட்டோ எடுத்துக் கொண்டு வாருங்கள். இது ஒரு சீக்ரெட் ஆப்ரேஷன் நம்ம ஆறு பேரை தவிர வேறு யாருக்கும் தெரியக் கூடாது. மாலை 6 மணிக்கெல்லாம் முடித்துக்கொண்டு வாருங்கள் ஓகே” என்றார்.

“ போகும்போது யூனிபார்மில் போகவேண்டாம். போலீஸ் என்பதை வெளியே காட்டிக் கொள்ள வேண்டாம். இது ரொம்ப சீக்ரெட்” இதை அழுத்தம் திருத்தமாய் கூறினார் எஸ் பி.

“எஸ் மேடம்” என்று ஒரே குரலில் கூறி சல்யூட் அடித்து வெளியேறினர். இரண்டு நாள் ஆகிவிட்டது எப்படியும் இன்று கவிதாவை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று யோசனையில் ஆழ்ந்தார்.

மாலை ஆறு மணிக்கு சரியாக ஐந்துபேரும் வந்திருந்து எஸ் பி யின் அறை முன் காத்திருந்தனர். அவர்கள் வந்திருப்பதை உதவியாளர் உள்ளே வந்து கூறியவுடன் அவர்களை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பும்படி கூறினார்.

முதலாவது காவலர் உள்ளே வந்து சல்யூட் அடித்தவுடன் “சொல்லுங்க நீங்க யார் வீட்டுக்கு போனீங்க”.

“மேடம் நான் சக்திவேல் என்பவருடைய வீட்டுக்கு போயிருந்தேன் வயது 25 .அவருடைய தகப்பனார் பெயர் கிருஷ்ணராஜ் அம்மா பெயர் பார்வதி ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சக்திவேல் சொந்தமாக காய்கறி கடை வீட்டின் முன் பகுதியிலேயே வைத்திருக்கிறார். வீடு சொந்த வீடு அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் நல்ல பையன் என்று சொல்கிறார்கள். எந்த ஒரு தப்பு தவறும் செய்யாதவர் என்று பெயரெடுத்தவர். நான்கு தினங்களுக்கு முன்பு தான் அவர் தாய் மாமா மகளை நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். இன்னும் 15 நாட்களில் திருமணம். நான் போயிருந்தபோது அவனுடைய அப்பா அம்மா பத்திரிக்கை கொடுக்க வெளியூர் போயிருந்தனர். அதனால் சக்திவேல் அவருடைய தம்பி தங்கை அவர்களை மட்டும் படம் எடுத்திருக்கிறேன் என்று சில போட்டோக்களை தன்னுடைய ஸ்மார்ட்போனில் காண்பித்தார் காவலர். அதில் சக்திவேல் காய்கறி கடையில் அமர்ந்திருந்தது போலிருந்த படத்தை பார்க்கும் போது உண்மையிலேயே சக்திவேல் தப்பானவன் ஆக தோன்றவில்லை. “இந்த போட்டோக்களை என்னுடைய வாட்ஸப் நம்பருக்கு ஃபார்வேர்டு செய்யுங்கள்” என்ற எஸ் பி “ஃபார்வேர்டு செய்தபின் இந்த விவரங்களை அழித்துவிடுங்கள் நீங்கள் போகலாம்” என்று அனுப்பி வைத்தார்.

இரண்டாவது காவலர் வந்து சல்யூட் அடித்தது “மேடம் நான் ராம்குமார் வீட்டிற்கு போயிருந்தேன். அவனுக்கு வயது 25. அப்பா இல்லை அம்மா சிவகாமி மட்டும் உள்ளார். திருமணமான 2 அக்கா இருக்கிறார்கள். ராம்குமார் இப்போது லோடு ஆட்டோ ஓட்டும் டிரைவராக இருக்கிறார். ஆட்டோ வேறு