Chillzee KiMo Books - காதல் சர்க்கஸ் - சுபஸ்ரீ முரளி : Kadhal Circus - Subhashree Murali

காதல் சர்க்கஸ் - சுபஸ்ரீ முரளி : Kadhal Circus - Subhashree Murali
 

காதல் சர்க்கஸ் - சுபஸ்ரீ முரளி

அனைவருக்கும் வணக்கம்

குழந்தை முதல் முதியவர் வரை அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடியது சர்க்கஸ். இது ஒரு தனி உலகம்.

இங்குதான் நம் கதையின் நாயகன் நாயகி உள்ளனர். அவர்களின் காதல், மகிழ்ச்சி, துயரம் என அனைத்தும் அதனில் அடக்கம்.

படித்து மகிழுங்கள்.

நன்றி

சுபஸ்ரீ முரளி

 

1

சிறிய பதாகை போன்ற ஒன்றில்கிருஷ்ணாஎன எழுதியிருந்தது. அதைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தான் கதிர். அதிக நேரம் பிடித்திருந்தபடியால் கை மரத்துப் போனது மறு கைக்கு மாற்றினான். கடந்த ஒரு மணி நேரமாக ஏர்போட்டில் காத்திருக்கிறான் அந்த கிருஷ்ணாவிற்காக.

கிருஷ்ணா கருப்பா? சிவப்பா? குட்டையா? நெட்டையா? என ஒன்றும் தெரியாது. பேய்க்கு வாக்கப்பட்டால் புளியமரத்தில் தொங்கிதானே ஆக வேண்டும். அப்படிதான் அவனும் காத்திருக்கிறான் கோவை ஏர்போட்டில் கிருஷ்ண தரிசனத்திற்காக.

சித்தப்பு . . இதை புடிஎன டிரைவரிடம் தன் பாரத்தைச் சுமத்திவிட்டான். வேண்டா வெறுப்பாக அந்த பதாகையைப் பெற்றுக் கொண்டு டிராபிக் கான்ஸ்டபிள் போல் டிரைவர் அபிநயம் பிடித்தான்.

கதிர் அணிந்திருந்த ஜேக்கெட்டை ஊடுருவியபடி குளிர் உடலைத் துளைத்தது. தன் இரு உள்ளங்கைகளை உரசி குளிரைத் துரத்த முயற்சி செய்தான். “அட போடா இதுகெல்லா நாங்க ஓடிடுவோமா?” எனக் குளிர் சளைக்காமல் தாக்குதலை நடத்திய வண்ணம் இருந்தது.

கிருஷ்ணன் வந்து பல லீலைகளைப் புரிய இருக்கிறான். அவன் வருவதற்குள் நாம் கதிர் பற்றித் தெரிந்து கொள்வோம்.

கதிர் எம்.பி.ஏ படிக்கையில் தான் ஒரு சஞ்சய் ராமசாமி போலச் சூட் கோட்டு, சன் கிளாஸ் சகிதம் டக் டக்கென நடப்பதும். அவனுக்கு முன்னும் பின்னும் அவனின் பணியாளர்கள் வருவது போலவும் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தான். ஆனால் சஞ்சய் ராமசாமி அல்ல சரக்கு மாஸ்டர் ஆவது கூட அத்தனை எளிதல்ல என பின்பு புரிந்தது.

எப்படியோ படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு அலைந்து திரிந்தான். அம்மா காந்திமதி அப்பா ரங்கசாமி மூத்த சகோதரி கனகா என அழகான குடும்பம். எங்கு நோக்கினும் பணத் தேவை.

இறுதியாக ஊட்டியில் உள்ள டீ எஸ்டேட்டில் வேலை கிடைத்தது. மேனேஜர் வேலைக்கு அமர்த்தப்பட்டான். ஆனால் பல சமயங்களில் சம்பந்தமே இல்லாத வேலையைச் செய்தாக வேண்டும். கேள்வி கேட்டால் வேலை போய்விடும். ஆதலால் வேறுவழியின்றி சொல்வதைச் செய்தான்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஊட்டியின் மலைமுகடு மேகம் என இயற்கை அழகை ரசித்து ருசித்து சொக்கி போனான். ஆனால் போகப் போக மந்தமாகிப் போனது வாழ்க்கை.

துவைத்த துணி காய இரண்டு மூன்று நாட்கள் ஆவதுதான் அவனின் உச்சபட்ச எரிச்சல். சப்பாத்தியைக் கல்லில் திருப்பி போடுவதைப் போல மாற்றி மாற்றி துணியைத் திருப்பி போடுவான்.

இப்பொழுதுதான் சென்னை வெய்யிலின் அருமை பெருமை புரிந்தது. துணி துவைத்துக் காயப் போட்டால் இரண்டு மணி நேரத்தில் இஸ்திரி போட்டது போலக் காய்ந்துவிடும். இங்கு அப்படியா?

கிருஷ்ணா விஜயம் செய்துவிட்டான். வாருங்கள் போகலாம்.

டிரைவர் கையிலுள்ள பதாகையை நோக்கியபடி கிருஷ்ணா வந்தான். கதிர் வேகமாக டிரைவர் அருகே போகவும். கிருஷ்ணன் வரவும் சரியாக இருந்தது.

டிரைவரிடம்கிருஷ்ணா . . நான்தான் . . ” என்றவன் மேலும் பேசுவதற்குள். . .

கிலாட் டூ மீட் யூ கிருஷ்ணா சார்எனக் கதிர் இடையே புன்னகையுடன் பேசினான். பின்பு தன்னை அறிமுகமும் செய்து கொண்டான்.

ஹாய் கதிர்என ஸ்நேக புன்னகையை உதிர்த்தான் கிருஷ்ணா.

லக்கேஜ் ஏற்றப்பட்டு டீ எஸ்டேட்டை நோக்கி கார் புறப்பட்டது. அமைதியாக வண்டி சென்றது.

சுற்றிலும் அழகான மலை முகடுகள். மேகங்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்திப் பல ஓவியங்கள் வரைந்தபடி இருந்தன. பியூட்டி பார்லர் சென்றது போலச் சீராக வளர்ந்திருந்த மரங்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியாக எங்கு காணினும் பச்சை நிறம். இவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் கதிர் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவற்றைக் கண்டு சளித்துப் போய்விட்டது.

கதிர் எதாவது பாட்டு போடுங்ககிருஷ்ணா கேட்டான்.

அந்த தம்பி வெளி நாட்டுல படிச்சிட்டு வந்திருக்கு . . இங்க்லீஸ் பாட்டு இருந்தா மட்டும் போடுஎனக் கதிர் முதலாளி முன்னமே அறிவுரை வழங்கி இருந்தார்.

கதிரிடம் ஆங்கில பாடல் எதுவுமில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் செல்போனில் தேட தொடங்கியவனிடம்

இளையராஜா பாட்டு செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் . . இருக்கா?”

தப்பிச்சேன்டா சாமிஎன நினைத்த கதிர் மியூசிக் சிஸ்டமில் இருந்ததை ஓட விட்டான்.