TEN CONTEST 2019 - 20 - Entry # 31
Story Name - Unnai kaanaathu urugum nodi neram
Author Name - Sasirekha
Debut writer - No
உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா
முன்னுரை
அநாதைக் குழந்தைகளாக கைவிடப்பட்ட நாயகியும் அவளது தோழி மற்றும் நண்பனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அநாதை குழந்தைகளை தத்து எடுப்பது பெரிய விசயம் அதை விட அநாதை ஆசிரமங்களை தத்து எடுப்பது மகத்தான விசயம் அதை நாயகி தன் லட்சியமாக நினைத்து செயல்படுத்த முயற்சி செய்து பல கஷ்டங்களை கடந்து வெல்வதையே கருவாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளேன் நன்றி.
திருப்பூர்
நிவேதாவும் நிருபமாவும் திருப்பூர் ரயில்வே நிலையத்தில் கவலையாக நின்றுக் கொண்டிருந்தனர் அதில் நிவேதாவோ
”நிரு எப்ப உன் ஆளு வருவான் எனக்கு இங்க நிக்கற நேரமெல்லாம் திக் திக்குன்னு இருக்கு”
”பொறு வருவான் இரு” என்றாள் அவளும் பதட்டமாக
”நாமளே அவனைத் தேடி சென்னையில இருந்து இந்த ஊருக்கு வந்தோம் நம்மளை கூட்டிட்டுப் போக கூட அவன் வரலைன்னா எப்படி எனக்கு பயமா இருக்கு”
”சங்கரனுக்கு இந்த ஊர்ல இருக்கற கார்மென்ட்ஸ்ல கண்டிப்பா வேலை கிடைச்சிடும்னு நம்பிக்கையா இருக்காரு சங்கரன் வரலைன்னா பேசாம அவர் வீட்டுக்கு போய் பார்க்கலாம்னு இருக்கிறேன்”
”அவசரப்படாத முதல்ல போன் பண்ணிப் பாரு நிரு”
”போன் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது நிவேதா”
”நவீனுக்கு தெரிஞ்சா என்னாகும்னு நினைக்கறப்பவே” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் உடல் நடுங்கிப் போனாள் நிவேதா.
”சாரிடி இப்படி ஒரு இக்கட்டான நிலைமை வரும்னு நான் நினைக்கலை”
“நாம வந்து 2 மணி நேரம் ஆச்சு உன்னை இங்க கூட்டிட்டு வந்தது நான்தான்னு உன் அண்ணன் நவீனுக்கு தெரிஞ்சது நான் செத்தேன்“
”பயப்படாத அவருக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் என் மேல இருக்கற கோபத்தை உன் மேல காட்ட மாட்டாரு”
”இல்லை எனக்கு என்னமோ சரியா படலை உன்னோட காதல் விசயத்தில நவீன் ரொம்ப கோபமா இருக்காரு, எங்க நீ ஏமாந்துடுவியோன்னு நினைச்சி பயப்படறாரு அதே போலதான் இப்பவும் நடக்குது சங்கரனை தேடி நீயே வந்துட்ட ஆனா சங்கரன் இன்னும் வரலை பாரேன் இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை வா சென்னைக்குப் போகலாம்”
”முடியாது நான் வந்துட்டேன் திரும்பி போனா எனக்கு நிச்சயமான பையனோட கல்யாணம் செஞ்சி வைச்சிடுவாரு என் அண்ணன்“
”உன் அண்ணன் பாவம்டி உன் மேல உசுரையே வைச்சிருக்காரு அவரை எப்படி நீ ஏமாத்தலாம்“
”நான் காதலிச்சது தெரிஞ்சும் என் விருப்பத்தை கேட்காம என் அண்ணன் எனக்காக கல்யாண முடிவை எடுத்தா நான் எப்படி பொறுப்பாவேன் அதோட சங்கரன் யாரு அண்ணாவோட ப்ரெண்ட்தானே”
”சரி சரி வேணும்னா நான் உன் அண்ணாகிட்ட இன்னொரு முறை பேசிப் பார்க்கவா“
”ஏற்கனவே 2 முறை பேசிட்டியே மறந்துட்டியா”
”மறக்கலை ஆனாலும் அவருக்கு நாம செய்றது துரோகம்”
”அமைதியாயிரு நிவேதா நானே கவலையில இருக்கேன்”
”கொஞ்சம் நவீன் இடத்தில இருந்து யோசிச்சிப் பாரேன், நாம எல்லாரும் எப்படி இருந்தோம்னு, நம்ம மூணு பேரை வேணாம்னு அநாதை ஆசிரமத்தில போட்டுட்டாங்க அநாதை இல்லத்தில வளர்ந்தோம் யாரும் யாருக்கும் உறவு இல்லைங்கறப்ப நவீன் உன்னை தன் தங்கச்சியா ஏத்துக்கிட்டு உன் மேல பாசத்தை கொட்டினாரு சின்ன குழந்தையில இருந்து உன்னை நல்லா பார்த்துக்கிட்டாரு உனக்கு உண்மையிலயே குடும்பம் இருந்து ஒரு அண்ணன் இருந்திருந்தா கூட நவீன் போல அன்பை காட்டியிருக்க மாட்டாங்க நிரு” என நிவேதா சொல்லவும் நிருபமாவிற்கு மனம் கலங்கிப் போனது.
அவள் ஓய்ந்து போய் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துக் கொள்ள அவளுக்கு துணையாக நிவேதாவும் அமர்ந்துக் கொண்டாள்
”சாரிடி உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் நினைக்கலை நாம 3 பேரும் எங்க பிறந்தோம் யாருக்கு பிறந்தோம்னு கூட தெரியாது நாம 3 பேருமே அந்த அனாதை இல்லத்திலதானே ஒண்ணு சேர்ந்தோம் அதுலயும் நவீன் உன்னை தங்கச்சியாவே நினைச்சாரு அதுக்காக உனக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரு மறந்துட்டியா”
”மறக்கலை ஆனா, ஒரு விசயம் சொல்லு நிவேதா அநாதைகளாவே பிறக்கற நமக்கு உறவுகள் இருக்க கூடாதா என்ன, நானும் ஒருத்தரை காதலிக்க கூடாதா நான் காதலிச்சவருக்கு ஒரு குடும்பம் இருக்கு தாத்தா, பாட்டி, அப்பா, பெரியப்பான்னு நிறைய பேர் இருக்காங்க, ஒண்ணு சொல்லவா சங்கரனோட அழகைப் பார்த்தோ அவன் படிப்பைப் பார்த்தோ பணத்தை பார்த்தோ நான் அவனை காதலிக்கலை, அவன்கிட்ட இருக்கற அழகான குடும்பத்தை பார்த்து காதலிச்சேன், அவனுக்கும் எனக்கும் கல்யாணம் ஆனா அந்த குடும்பத்தில