TEN CONTEST 2019 - 20 - Entry # 30
Story Name - Ullathal unnai nerungugiren
Author Name - Sasirekha
Debut writer - No
உள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா
முன்னுரை
பெரியவர்கள் சரியான பாதையில் குடும்பத்தை வழிநடத்த வேண்டும் அவ்வாறு இல்லாமல் போனால் என்னவெல்லாம் பாதிப்பு நடக்கும் என்பதையும் ஒரு பெண்ணிற்கு என்ன தேவை அவள் என்ன எதிர்பார்க்கிறாள் அவளின் விருப்பு வெறுப்பு அறியாமல் பெரியவர்கள் எடுக்கும் முடிவால் என்ன விபரீதம் நடக்கும் என்பதையும் பணத்தை விட அன்பினால் அனைத்தையும் சரிசெய்யலாம் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கலாம் என்பதை சொல்லும் கதையிது.
மதுரை நீதிமன்ற வளாகம்
காலை பொழுது மணி 9.00
நீதிமன்றத்திற்கு வெளியே மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 3 கிராம மக்களும் அங்கு குழுமியிருந்தனர். அவர்கள் தங்களுக்குள் கோபாவேசமாக பேசும் சத்தம் அந்த இடத்தையே கலவரப்படுத்தியது.
”இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சே ஆகனும் எத்தனை நாளா இது ஓடுது இதே நம்ம கிராமத்தில பஞ்சாயத்து வைச்சிருந்தா அன்னிக்கே தீர்ப்பு முடிஞ்சிருக்கும், அதைவிட்டுட்டு கோர்ட்டு கேசுன்னு ஒரு மாசம் காக்க வைச்சிட்டாங்களேப்பா” என கிராம மக்களில் ஒருவர் மற்றொருவரிடம் சொல்ல அதை கேட்டவர் சொன்னவரிடம்
”என்னப்பா இப்படி சொல்லிட்ட சாதாரண பிராதா இருந்தா பஞ்சாயத்து வரைக்கும் போயிருக்கும் இது 3 கிராமத்துக்கும் சேர்த்து ஒரே பிரச்சனையாச்சே இதுல கத்திக் குத்து வேற நடந்திருக்கு அப்ப எப்படி பஞ்சாயத்துல முடிக்க முடியும் இப்படி கோர்ட்டு வரைக்கும்தான் வரும்” என்றான் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன்.
”என்ன இருந்தாலும் அவனை சும்மா விட்டுவைச்சிருக்க கூடாது. நம்ம கிராமத்து பொண்ணையே நாம போனா போட்டும்னு கட்டிக்கொடுத்தா ஒழுங்கா பார்த்துக்காம கொடுமைப்படுத்தி விரட்டிப்புட்டாய்ங்களேப்பா இது சரியில்லை கண்டிப்பா அவனுக்கு தண்டனை கொடுத்துதான் ஆகனும்” என்றான் இன்னொரு கிராமத்தைச் சேர்ந்தவன். அதற்கு அவனருகில் இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்தவன்.
”தப்பு யார்மேலன்னு தெரியாம நீயா தீர்ப்பு சொல்லத்தப்பு பொறு நீதிபதி வரட்டும் விசாரிக்கட்டும் அப்ப தெரியும் யார் மேல தப்புன்னு” என சொல்லி முடித்தார்.
”எவ்ளோ தைரியம் இருந்தா நம்ம கிராமத்துக்கே வந்து நம்ம பெரியவர் வீட்டு பையனையே வெட்டியிருப்பான். அம்புட்டு தைரியம் அவனுக்கு எப்படி வந்திச்சி. அவன் ஊருக்காக பொண்ணை மிரட்டி கல்யாணம் செஞ்சிக்கிட்டு விரட்டிவிட்டான். அந்த பொண்ணை காப்பாத்த வந்த நம்ம ஊருக்காரனை வேற வெட்டியிருக்கானே சரியான முரடன் அவனுக்கு தீர்ப்பு ஒண்ணு கேடா என்கிட்ட விடச்சொல்லு நானே அவனை வெட்டிபோடறேன்.” என 3வது கிராமத்தை சேர்ந்தவன் மற்றொருவனிடம் கூற அதற்கு அவனும்
”எங்க நம்மகிட்ட அவன் மாட்டினா செத்துடுவான்னுதான் 1 மாசம் ஜெயில்லயே போட்டு வைச்சிருக்காங்க இன்னிக்கு தெரிஞ்சிடும்டி அவனுக்கு எப்படியாபட்ட தண்டனை தர்றாங்கன்னு பார்க்கலாம் ஒத்து வராட்டி வெளிய வரட்டும் இங்கனியே அவனை அரிவாளால வெட்டிப்புடறேன்” என வீரமாக பேசினான்.
ஒரு மாதங்கழித்து 3 கிராம பிரச்சனைகளுக்கு இன்று ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்படுவதால் அந்த இடமே அல்லோல கல்லோலப்பட்டது. கோர்ட்டுக்கு வருவோரும் போவோரும் இந்த கிராம மக்களை கண்டு சிறிது பீதி அடைந்திருந்தனர்.
இன்னும் நீதிபதி சிவலிங்கம் வரவில்லை அவரின் வரவிற்காக அனைவரும் காத்திருந்தனர். மதுரை மாவட்டத்தை சுற்றி பல சிறு ஊர்களும் சிறு சிறு கிராமங்களும் நிறைய உள்ளது. அதில் 3 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே அங்கு குழுமியிருந்தனர். மற்ற மக்கள் அவர்களுடைய சொந்த வழக்கிற்காக காத்திருந்தனர்.
3 கிராமத்திற்கும் சேர்த்து ஒரே வழக்கு அதனால் 3 வழக்கறிஞர்களை நியமித்திருந்தனர். ஒரு மூத்த வழக்கறிஞர் ஒரு கிராமத்தின் பெரியவரான கைலாசநாதன் சார்பாகவும் இன்னொரு நடுத்தர வயதுடைய வழக்கறிஞர் மற்றொரு கிராமத்தின் நாட்டாமையான கயிலைநாதன் சார்பாகவும் கடைசி இளைய பெண் வழக்கறிஞர் மற்றொரு கிராமத்தின் பெரும் பணக்காரரான உமாபதிக்கு சார்பாகவும் வழக்கு எடுத்து இன்று அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர்.
”சார் நீங்க எதுக்கும் பயப்படாதீங்க நம்ம பக்கம் வழக்கு சாதகமா இருக்கு எப்படியும் உங்க பேரன் நிச்சயம் வெளிய வந்துடுவான் என்னை நம்புங்க” என்றார் கைலாசநாதனிடம் வக்கீல் நம்பிக்கையாக
”அவன் உங்க பேத்தி மேல தப்பா நடந்திருக்ககூடாது சார் என்னதான் ஊர் பிரச்சனை நிலப்பிரச்சனையிருந்தாலும் ஒரு பொண்ணை கொடுமைப்படுத்தியிருக்க கூடாது. இது ஒண்ணே போதும் அவன் கிட்டயிருந்து உங்க பேத்தியை காப்பாத்திடலாம் கவலைப்படாதீங்க” என்றார் வக்கீல் கயிலைநாதனிடம்
”இது கொலை கேஸா முடியாம ஏதோ வெட்டு குத்துல முடிஞ்சிருக்கு இருந்தாலும் தப்பு தப்புதான் அதெப்படி அவன் அவனோட கிராமத்தை விட்டு அடுத்த கிராமத்தில வந்து ஆளை வெட்டியிருப்பான் தப்புதான் அதுக்கு சரியான