நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா : Nandri solla unakku varthai illai enakku - Sasirekha
TEN CONTEST 2019 - 20 - Entry # 28
Story Name - Nandri solla unakku varthai illai enakku
Author Name - Sasirekha
Debut writer - No
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு - சசிரேகா
முன்னுரை
நன்றி என்ற சொல்லை பலருக்கு சொல்ல கடமைபட்டிருக்கலாம் ஆனால் தேவைக்கேற்ப மட்டுமே சிலருக்கு நன்றியுரைப்போம் சிலருக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் சொல்லமாட்டோம் ஆனால் நன்றியானது சரியான நேரத்தில் சரியான நபரிடம் சொல்லப்படுமானால் அந்த நன்றியின் மதிப்பும் அதை சொல்பவரின் மதிப்பும் உயரும் என்பதை கருவாக வைத்து இக்கதையை எழுதியுள்ளேன்.
தேனி மாவட்டத்தில் உள்ள சைதன்யனின் வீட்டில்
”அண்ணா இந்த ஜோசியர் நம்ம ரெண்டு பேர் ஜாதகத்தையும் இப்படி உத்து உத்து பார்க்கறாரே நல்லதா சொல்வாரா இல்லை கெட்டதா சொல்வாரா” என சூர்யா தன் அண்ணன் சைதன்யனிடம் கவலையாகக் கேட்க
”இருடா பொறுமையா இரு பார்க்கலாம்”
”பொறுமையாவா அண்ணா இவர் வந்தே ஒரு மணி நேரமாகுது அதுல என்ன படமா ஓடுது, இவ்ளோ நேரமா நம்ம ரெண்டு பேர் ஜாதகத்தையும் மாத்தி மாத்தி பார்க்கறாரே” என சலித்துக் கொள்ள அதற்கு சைதன்யனோ
”உனக்கு எல்லாத்திலயும் அவசரம்தான், அதான் தாத்தா பாட்டி கூட அமைதியா இருக்காங்களே உனக்கென்ன பொறு”
”கொஞ்சம் என் முகத்தை பாருங்கண்ணா, இந்த பாட்டி வேண்டிக்கிச்சின்னு மீசையும் தாடியும் ஷேவ் பண்ணாம தலைமுடி கூட வெட்டாம காட்டு மனுசன் மாதிரியிருக்கேன். இன்னும் இந்த ஜோசியர் எதையாவது பார்த்து பரிகாரம் அது இதுன்னு சொல்லி நம்மள என்ன பாடுபடுத்தப்போறானோ தெரியலையே” என புலம்பினான் சூர்யா
”டேய் ஜோசியத்தை அவ்ளோ சாதாரணமா நினைக்காத, எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இல்லாம இருக்காது, அவங்க நம்ம ஜாதகத்தை பார்த்து பரிகாரம் சொல்றது கூட நம்ம நல்லதுக்குதானே” என்றான் சைதன்யன்
”எது நல்லது 6 மாசம் ஆச்சின்னா பார்பர் ஷாப்புக்கு போய், என் முகத்தை என்னாலயே பார்க்க முடியல இந்த பாட்டி ஒண்ணு வேண்டுதல் அது இதுன்னு நம்மளை இப்படி ஆதிமனுஷனா மாத்திடுச்சேண்ணா” என கலங்க
”சூர்யா பாட்டியை குறை சொல்லாத, அவங்க நம்ம நல்லதுக்குத்தான் எல்லாத்தையும் சொல்வாங்க, நமக்கு 5 வருஷமா பொண்ணு தேடறாங்க கிடைக்கலை சரியான வரன் அமையலை அதனால வேண்டிக்கிட்டாங்க, கல்யாணம் முடிஞ்சதும் ஷேவ் பண்ணிக்கலாம்னு பாட்டி சொல்லிட்டாங்கள்ல பாவம் அவங்க வேண்டுதலை ஏன் தப்பு சொல்ற”
”அதுக்கில்லைண்ணா இப்பவே நம்ம ஊர்ல இருக்கற எல்லா பொண்ணுங்களும் என்னை பார்த்ததும் பயந்து ஓடுதுங்க. உங்களுக்கு பரவாயில்லை நீங்க அப்பாவோட நகைகடையை பார்த்துக்கறீங்க அங்க யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. ஆனா என்னை பாருங்க ரியல் எஸ்டேட் அதோட கன்ஸ்ட்ரக்ஷன் வேலை வேற செய்றேன், புதுசு புதுசா இப்ப தான் பிசினஸ் ஆர்டர் வருது கஸ்டமர்ஸ் கிட்ட பேசப் போனா என்னைப் பார்த்து பயப்படறாங்க அண்ணா, அதுல வேற நான் இன்ஜினியரிங் படிச்சிருக்கேன்னு சொன்னா ஒரு பயலும் நம்பமாட்டேங்கறான். இப்படியே போனா என் நிலைமை என்னாகிறது” என புலம்பவும் அதற்கு சைதன்யன்
”இப்ப உனக்குதான் ஒரு வீடு கட்டற ஆர்டர் வந்திருக்கே என்னாச்சி அதை முடிச்சிட்டியா”
”கடைசிக்கு வந்துட்டேன் மொசைக் எல்லாம் போட்டாச்சி அவங்க என்னிக்கு சரிங்கறாங்களோ பைனல் டச்சப் செஞ்சி கிரகப்பிரவேசத்துக்கு ஏத்தமாதிரி வேலையை முடிச்சி கொடுக்கனும் அதோட அந்த வேலை ஓவர்”
”ஏன்டா இந்த மாசமே பல நல்ல நாளுங்க இருக்கே ஏதாவது ஒரு நாளை முடிவு செஞ்சிட வேண்டியதுதானே”
”மாசக்கடைசியில தொடர்ந்து 3 நாள் வருதுண்ணா அந்த ஓனர்தான் யோசிக்கிறான் நான் என்னிக்காவது வேற வேலையில இருக்கும் போது வந்து கூப்பிட போறான் அன்னிக்கு இருக்கு அந்தாளுக்கு” என திட்டவும் சூர்யாவை அதட்டினான் சைதன்யன்
”ஏன்டா திட்டற, கஸ்டமர்சை திட்டினா உன் தொழில்தான் பாதிக்கும்” என அறிவுரை வழங்கினான் சைதன்யன்
”பாதிச்சாலும் பரவாயில்லைண்ணா ஒரு வருஷமா அந்த வீட்டை நான் கட்டறேன் அது சரியில்லை இது சரியில்லைன்னு ஏகத்துக்கும் குறை கண்டுபிடிச்சி ஒரு வழியா இப்பத்தான் முடிஞ்சிடுச்சி. சின்ன சின்னதா டிங்கரிங் வேலைதான் பாக்கி. அதை கூட செஞ்சிடுவேன் இன்னும் பேமன்ட் தரலை. சீக்கிரமா பேமன்ட் கொடுத்தா நிம்மதியா அடுத்த ப்ராஜக்ட்டுக்கு போயிடுவேன். அந்தாளு செய்ற டார்ச்சர்ல மத்த வேலைகளை நிம்மதியா என்னால செய்ய முடியல”
”சரி விடு எல்லாம் நல்ல படியா முடியும் அங்க பாரு ஜோசியர் ஏதோ பேச போறாரு வா வா அது என்னன்னு கேட்கலாம்” என அவனை அழைத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றான் சைதன்யன்.
”ஆண்டவா ஏற்கனவே பரிகாரம்ங்கற பேர்ல தாடியும் மீசையுமா நானும் எங்கண்ணனும் ஆதிமனுஷன்ங்களா சுத்தறோம் இதுல இவர் வேற எந்த பரிகாரமும் சொல்லாம நீதான் எங்களை காப்பாத்தனும்” என வேண்டிக் கொண்டே அண்ணன் சைதன்யனுடன் அனைவரும் இருந்த இடத்திற்கு சென்றான் சூர்யா.
”இங்க பாருங்க இந்த வருஷமே உங்க ரெண்டு பேரன்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிடும் நாள் நெருங்கிடுச்சி கல்யாணம் பேஷா நடக்கும் பாருங்க” என அவர் கூறவும் வீட்டில்