இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா : Ilaiya manathu inaiyum pozhuthu - Sasirekha
TEN CONTEST 2019 - 20 - Entry # 27
Story Name - Ilaiya manathu inaiyum pozhuthu
Author Name - Sasirekha
Debut writer - No
இளைய மனது இணையும் பொழுது - சசிரேகா
முன்னுரை
யதார்த்தமான வாழ்வு வாழும் நாயகனது வாழ்க்கையில் திடீரென புயல் போல பிரச்சனை வந்ததால் அவனது வாழ்க்கையின் பாதையே திசைமாறியது அவனை சரியான பாதைக்கு கொண்டு வர முயற்சி செய்யும் நாயகியின் கதைதான் இது
தூத்துக்குடி டவுன்
தூத்துக்குடி டவுனிலிருந்து கடலோரமாக சென்றால் சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் இருக்கும் ஊரில் உள்ள தர்மாவின் வீட்டில் தர்மாவின் பெற்றோரிடம் கல்யாண புரோக்கர் மாணிக்கம் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தான்.
”ஐயா நீங்க சொல்றதும் சரிதான். பொண்ணு வீட்ல சம்மதிக்கனும்ல உங்க ரெண்டு பையன்களும் எப்படிப்பட்டவங்கன்னு இந்த ஊருக்கே தெரியும்.
இந்த ஊர்லயே பொண்ணு கொடுக்க மாட்டேங்கறாங்க. வெளியூர்ல இருக்கிற பொண்ணு வீட்டுக்கு வரன் இருக்குன்னு தகவல் சொன்னாலும் அவங்க வந்து இங்க விசாரிச்சாலே இந்த ஊர்ல இருக்கறவங்க உங்க பையன்களைப் பத்தி எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கிறானுங்க.
என் மேல கோபப்படறத விட்டுட்டு முடிஞ்சா இந்த ஊர்ல இருக்கறவங்க வாயை மூடுங்க இல்லை உங்க ரெண்டு பையன்களையும் திருத்துங்க வேற வழியில்லை” என்றான் மாணிக்கம்.
”இப்படி சொன்னா எப்படி எங்களுக்கு என்ன பணம் இல்லையா சொத்து இல்லையா என் பையன்களை கட்டிக்கிட்டா வர்ற பொண்ணுங்க மகாராணி மாதிரியில்லை இருப்பாங்க அதை சொல்லியிருக்கலாமே பொண்ணை பெத்தவங்க க்யூல நிப்பானுங்களே” என்றார் முத்துக்குமரன்
”உங்களுக்கு என்னதான் நிறைய சொத்துபத்து இருந்தாலும் பொண்ணை பெத்தவங்க பொண்ணோட சந்தோஷத்தையும் நிம்மதியையும் இல்ல பார்ப்பாங்க” என்றார் மாணிக்கம்
”ஏன் எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா சந்தோஷமா இருக்க மாட்டாங்களா இந்த வீடு என்ன ஜெயிலா நாங்க என்ன கொடுமைக்காரங்களா எல்லாம் நாங்க வர்ற மருமகள்களை உள்ளங்கையில வெச்சி பார்த்துக்குவோம்னு சொல்லுங்க புரோக்கரே” என்றார் செண்பகம்
”அம்மா நீங்க சொல்றது சரிதான் என்னதான் நீங்க உள்ளங்கையில வெச்சி தாங்கினாலும் தன்னை கட்டிக்கிட்டவன் எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சா எந்த பொண்ணுதான் கல்யாணத்துக்கு சம்மதிப்பா” என்றார் மாணிக்கம்
”அப்படின்னா நீங்க என்ன சொல்ல வர்றீங்க எங்க பையன்கள் என்ன கெட்டவங்களா மோசமானவங்களா” என கோபப்பட்டார் செண்பகம்
”அம்மா நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனும்னு இல்லை எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி பேசறது சரியில்லைம்மா” என்றார் மாணிக்கம்
”என் பையனை பத்தி உனக்கென்ன தெரியும்” என கோபமாக தர்மாவை பற்றி சொன்னார் முத்துக்குமரன்.
”என் பையன் தர்மா டிரைவிங் லைசென்ஸ் வேணுமேன்னு கஷ்டப்பட்டு ப்ளஸ்டூ படிச்சாப்ல. அவனோட 16வது வயசுலயே என்னோட பரம்பரைத் தொழிலான உப்பளத்துக்கு வரமாட்டேன்னு என்கூட சண்டைய போட்டுட்டு இந்த ஊர்ல மீன் வியாபரம் செய்றதுல திறமையான எட்வர்ட்கிட்ட வேலையாளா சேர்ந்துகிட்டான்.
எட்வர்ட்டோட நம்பிக்கையை சம்பாதிச்சி கொஞ்சம் கொஞ்சமா கடல்ல போய் மீன்பிடிக்க கத்துக்கிட்டு கடல்ல இருந்து கொண்டு வர்ற மீன்களை எப்படி சந்தையில் அதிக விலைக்கு விக்கிறது மிச்சமாகிற மீன்களை எப்படி பதப்படுத்திறதுன்னு கத்துக்கிட்டான்.
அவனோட முதலாளி கொடுத்த சம்பளத்தையும் மீனை வித்த பணத்தையும் வெச்சி ஒரு போட்டை வாடகைக்கு எடுத்து அவனோடு கூட 4 பேரையும் சோ்த்துக்கிட்டு கடலுக்கு போய் மீன் பிடிக்க ஆரம்பிச்சான்.
இது மாதிரி ஒரு 5 வருசம் மீன்பிடித் தொழில்ல இருக்கிற நெளிவு சுளிவு கஷ்டங்கள் எல்லாத்தையும் கத்துகிட்டு அவனோட முதலாளி எட்வர்ட்கிட்டேயே பார்டனரா சோ்ந்து வெளிநாடுகளுக்கு மீனை பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சான்.
எட்வர்ட்டும் ரொம்ப நல்லவரு தர்மாவோட உழைப்பையும் நாணயத்தையும் மெச்சி அவரும் தன்னுடைய வேலைக்காரன்னு பார்க்காம தொழில் நுணுக்கங்களை கத்துக்கொடுத்து தனியா சொந்தமா தொழில் செய்ன்னு அனுப்பிட்டாரு.
அதற்கு அப்புறமா தர்மாவே தனியாளா இருந்து பக்கத்து ஊர்லயிருந்து மீன்களை விலைக்கு வாங்கி மீன் ஊறுகாய் போட்டு அதையும் ஏற்றுமதி செய்றான்.
பத்தாததுக்கு மீன்களை வாங்கறதுக்கும் ஹார்பருக்கு கொண்டு போறதுக்குன்னு 10 லாரிகள் வைச்சி சொந்தமா லாரி டிரான்ஸ்போர்ட் வெச்சி நடத்தறான்.
சொந்தமா 5 போட்டை வாங்கி ஆளுங்களை வேலைக்கு வச்சி கடல்ல மீன்களை பிடிச்சி கொண்டு வந்து பதப்படுத்தி தன்னுடைய பேரிலேயே லைசென்ஸை வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்றான்.
அன்னிக்கு ஆரம்பிச்சி இன்னிக்கு இந்தளவுக்கு சொந்தமா அவன் பேர்லயே 5 போட், 10 லாரிகள் வச்சி லாரி டிரான்ஸ்போர்ட், மீன் ஊறுகாய் தொழிற்சாலை,