நிஜ வாழ்க்கை காதல் கதைகள் : Nija vaazhkkai kathal kathaigal
 

நிஜ வாழ்க்கை காதல் கதைகள் - Chillzee Originals

காதல் கதைகள் படிப்பது நம் அனைவருக்குமே பிடித்த ஒரு விஷயம்.

கதை எனும் கற்பனை உலகை தாண்டி நிஜ உலகிலும் பல அழகான காதல் கதைகள் இருக்கின்றன.

அப்படி கண்ணில் பட்டு, கருத்தில் பதிந்த பத்து நிஜ வாழ்க்கை காதல் ஜோடிகளின் கதை தொகுப்பு இங்கே.

 

01. நிஜ வாழ்க்கை காதல் கதைகள் – அஜித் – ஷாலினி

ன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்று டூயட் பாடிய அஜித் – ஷாலினி ஜோடியை எல்லோருக்கும் நினைவு இருக்கும். நிழல் உலகில் மட்டுமல்லாமல் நிஜ உலகிலும் ஜோடியான இந்த நட்சத்திர தம்பதியினரின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது.

இவர்களின் கதை நாம் கதைகளில் படிப்பதை விட ரொமான்டிக் ஆனது என்றால் மிகையில்லை.

அஜித் – ஷாலினி:

ன்றைய தமிழ் திரையுலகில் ‘தல’ அஜித்திற்கு என்று தனி இடம் உண்டு. வாரிசுகள் நிறைந்திருக்கும் துறையில் திரைப்பட பின்ணனியே இல்லாமல் வந்து முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு சிலரில் அஜித்தும் ஒருவர்.

அஜித்தின் வெற்றிக்கு உருத்துணையாக இருப்பவர் அவரின் மனைவி ஷாலினி என்பதில் சந்தேகமில்லை.

அஜித் – விடாமுயற்சியால் வெற்றி

ஜித்தின் திரைப்பட ஸ்டார் அந்தஸ்து அத்தனை எளிதாக வந்துவிடவில்லை. அவர் முதலில் நடித்த அமராவதி திரைப்படம் சுமாரான வெற்றியை தான் பெற்றது. ஆனாலும் அஜித் பிரபலமானார்.

புது வாய்புகள் தேடி வரும் நேரத்தில் அஜித்தின் பல நாள் கனவான பைக் ரேஸ் அவருக்கு வில்லனாக வந்து சேர்ந்தது. சென்னை சோழவரத்தில் இருக்கும் ரேஸ்ட்ராக்கில் பைக் ரேஸ் பயிற்சியில் ஈடுப்பட்ட போது ஏற்பட்ட விபத்து அவரை கிட்டத்தட்ட படுக்கையில் தள்ளியது.

அதன் பின் பல பல அறுவை சிகிச்சைகள் என அவர் குணமாக நாட்கள் ஆனது.

அந்த நேரத்தில் அவர் நடித்த பவித்ராவும் சுமாரான வெற்றி படமாகவே அமைந்தது.

ஆனால் அதன் பின் வந்த ஆசை மற்றும் காதல் கோட்டை அவரை வெற்றி பாதையில் அழைத்து சென்றன.

வெற்றி கதாநாயகனாக வலம் வர போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், அஜித் நடித்த கல்லூரி வாசல்காதல் மன்னன்உல்லாசம்தோரணம் என படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தன.

கூடவே நடிகை ஹீராவுடன் காதல் என்ற பரபரப்பான கிசு கிசு வேறு....!

அனைத்தையும் எதிர் கொண்ட அஜித், மனம் தளராமல் தொடர்ந்து நடித்தார். அவரின் முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது.

உன்னை தேடி எனும் திரைப்படம் வெற்றி பெற, வாலி திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

இந்த நேரத்தில் தான் அஜித்தின் நண்பரும் இயக்குனருமான சரண் அஜித்தின் 25ம் படமாக அமர்க்களம் படத்தை இயக்க விரும்பினார்.

ஷாலினி - அதிர்ஷ்ட தேவதை:

ஜித்தை போல அல்லாமல் ஷாலினி குழந்தை நட்சத்திரமாகவே மிகவும் பிரபலமானவர்.

பலநூறு போட்டோக்களின் நடுவே ஷாலினியை தேர்வு செய்து தன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார் இயக்குனர் ஃபாசில்.

குமாரியான பிறகு மிஸ் மெட்ராஸ் போட்டியில் கலந்துக் கொண்ட ஷாலினி மீண்டும் டைரக்டர் ஃபாசில் கண்களில் பட அவரை தன்னுடைய மலையாள படத்திற்கு கதாநாயாகி ஆக்கினார் ஃபாசில்.

அதே படம் தமிழில் விஜய், ஷாலினி நடிப்பில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்ய பட்டு மிக பெரிய வெற்றி பெற்றது.

அதன் பின் மலையாளத்தில் மட்டும் அல்லாமல் தமிழிலும் மிக பிஸியான ஹீரோயினாக மாறி போனார் ஷாலினி.

அஜித்தின் இருபத்தி ஐந்தாம் படத்தில் ஒரு பிரபல கதாநாயகி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் அந்த படத்தில் நடிக்க ஷாலினியை தேர்வு செய்தார் டைரக்டர் சரண்.

முதல் சந்திப்பு: