இதயப்பூ எப்போது மலரும்... - பிந்து வினோத்
மூன்று காதல் கதைகள். மூன்றும் மூன்று விதம்.
கதைகள் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
சுவாரசியமானது காதல்....!
ஆபிஸ் பஸ்ஸில் ஏறி அமர்ந்த உடனே ஒரு எதிர்பார்ப்புடன் மொபைலை எடுத்து பார்த்தாள் அபிராமி. எதிர்பார்த்தது போலவே ‘Good evening dear’ என அவள் கணவன் ஜெயந்திடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது.
முகத்தில் எக்ஸ்ட்ரா மலர்ச்சி + மகிழ்ச்சி பொங்க அவனுக்கு பதில் மெசேஜ் அனுப்பி விட்டு சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
திருமணம் முடிந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் இப்போதும் கூட ஜெயந்த்தை நினைத்தாலே அவளின் மனதில் ஸ்பெஷல் தென்றல் வீச தான் செய்தது.
எதனால் இது, என்று அவளையே கேட்டுக் கொண்டாள்...
இத்தனைக்கும் அவர்களுடையது காதல் திருமணம் எல்லாம் இல்லை. இரு வீட்டு பெரியவர்களும் பார்த்து, பேசி, நிச்சயித்து நடந்த திருமணம்.
திருமணம் முடிந்த உடன் ‘They lived happily ever after’ என்று கார்ட் போடும் அளவிற்கு எல்லாம் அவர்களின் திருமண வாழ்வு இருக்கவில்லை.
நிச்சயமான நாள் தொடங்கி, திருமணம் முடிந்த முதல் சில மாதங்கள் வரை, எல்லா ஜோடிகளையும் போல அவர்களுடைய வாழ்வும் இனிமையாக மட்டுமே தான் இருந்தது. மற்றவர்கள் யாரை பற்றியும் யோசிக்காமல் அவர்கள் இருவருக்காக என செலவு செய்த நாட்கள் அது...
நாட்கள் செல்ல செல்ல ‘ஹனிமூன் பீரியட்’ முடிந்து போக, இருவரும் அவரவர் வேலையில் கவனத்தை திருப்பினார்கள்... இருவருக்குமே அவர்கள் செய்யும் வேலை பிடித்திருந்தது... அது தொடர்பாக தனித் தனி இலட்சியங்களும் இருந்தது...
மெல்ல மெல்ல, என்ன, எப்படி என்று சொல்ல முடியாமல் அவர்களுக்குள் சிறியதாக இடைவெளி ஏற்பட்டிருந்தது.
இருவரும் சண்டை எல்லாம் போடவில்லை... அவர்களுக்கு அதற்கு நேரமும் இல்லை!
காலையில் எழுந்து ‘ஹாய்’ சொல்லி விட்டு அரக்க பறக்க கிளம்பி, ‘பை’ சொல்லி விட்டு அலுவலகம் செல்வார்கள்.
அபிராமி வேலையை முடித்து வர தாமதமாகும் என்றால், ஜெயந்த் வீட்டிலும் லேப்டாப் – மொபைலே கதி என்று இருப்பான்.
அப்போதெல்லாம் சமையல் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே அபிராமிக்கு கடுப்பாக இருக்கும். ஜெயந்த் தட்டில் இருப்பது என்ன என்று கூட பார்க்காமலே உணவை கொரிப்பான்.
இதற்கு ஏன் நேரம் செலவு செய்து சமைப்பது என்று ‘ரெடி டு ஈட்’ உணவுகளை பயன்படுத்துவது வாடிக்கையானது....
எப்போதாவது அம்மாவிடம் பேசுவது.... ஊருக்கு போவது... மற்றபடி, வேலை, orkut*, internet அது தான் அவர்களின் உலகம்...
“என்ன வாழ்க்கைடா இது...” என்று சலிப்புடன் சொல்லியபடி அபிராமியின் அருகே அமர்ந்த ஆனந்தியின் குரல் அபிராமியை பழைய நினைவுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தது.
அவளிடம் நட்பு புன்னகை ஒன்றை பகிர்ந்துக் கொண்ட ஆனந்தி, அத்தோடு முடிந்தது என் கோட்டா என்பதை போல மொபைலை எடுத்து வாட்ஸ்-அப் திறந்து மெசேஜ் செய்ய தொடங்கினாள்.
இது வழக்கமாக நடப்பது தான் என்பதால் அதைக் கண்டுக் கொள்ளாமல் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள் அபிராமி. அங்கே இடது பக்க சீட்டில் அமர்ந்திருந்தவள் facebookல் எதையோ நொண்டிக் கொண்டிருந்தாள்.
அபிராமியின் முகத்தில் புன்னகை தோன்றியது.... மீண்டும் பழைய நாட்களை அசை போட தொடங்கினாள்.
இப்போது யோசித்து பார்த்தால் அந்த நாட்களை நினைத்து சிரிப்பாக தான் இருக்கிறது.... ஆனால் நல்ல வேளை அப்படியே வாழ்க்கை ஓடி விடவில்லை....
போர் அடித்துக் கொண்டிருந்த வாழ்வை இனிமையாக மாற்றியது ஒரு சின்ன ‘லக்கி ப்ரேக்’...
அது ஒரு வெள்ளிக்கிழமை... அபிராமி ஆபிஸை விட்டுக் கிளம்பும்