கற்றுக் கொடு கண்ணாலே... - Chillzee Originals
காதலை கற்றுத் தந்து படிக்க முடியுமா??
இந்த நாவலின் கதாநாயகியுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்!
இது ஒரு எளிய, இனிய காதல் கதை!
அத்தியாயம் – 01
ஜஸ்டீன் பீபர் குரல் இனிமையாக பாடிக் கொண்டிருந்தது.
Don't you give up, nah, nah, nah
I won't give up, nah, nah, nah
Let me love you
Let me love you
smuleல் பாடி கொடுமைப் படுத்துபவர்களுடன் போட்டிக்கு போபவனை போல இனியவனும் ஜஸ்டீன் பீபருடன் சேர்ந்து பாடிக் (கத்திக்) கொண்டிருந்தான்.
“இனியா, சவுண்டை கம்மி செய். பக்கத்து வீட்டுல இருக்கவங்க எல்லாம் கம்ப்ளெயின்ட் செய்யப் போறாங்க”
“என்னம்மா நீங்க!. எப்போ பாரு பக்கத்து வீட்டுக்காரங்களையும் எதிர் வீட்டுகாரங்களையும் பத்தியே கவலைப் படுறீங்க”
“சரி, சரி புலம்பாதே. நீ ரெடியா கிளம்பலாமா? டிரைவர் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு.”
“நான் ரெடிம்மா. இந்த டீ ஷர்ட் எப்படிம்மா இருக்கு லாஸ்ட் வீக் வாங்கினேன்”
“போன மாசமும் இதே மாதிரி ப்ளூ கலர்ல ஒன்னு வாங்கினீயேடா? அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?”
“அது நேவி ப்ளூம்மா. இது சபையர் ப்ளூ”
“என் கண்ணுக்கு இரண்டும் ஒரே ப்ளூவா தான் தெரியுது”
“ஊருக்கு போயிட்டு வந்த உடனே ஒரு நல்ல கண் டாக்டர் கிட்ட உங்களை கூட்டிட்டு போய் கண்ணாடி வாங்கி மாட்டி தரேன்”
“உனக்கு ப்ளூ கலர் பிடிக்கும்னு உண்மையை சொல்லு. அதை விட்டுட்டு எனக்கு எதுக்கு கண்ணாடி வாங்கி தரேன்னு சொல்லி ஏமாத்துற?”
“ஜெயா, அவன் ரெடியா? போலாமா?”
“அப்பா கூப்பிடுறார். லேட்டா போனா திட்டுவார். வா போகலாம்”
அம்மா ஜெயஸ்ரீ முன்னே போக, இனியவன் ப்ளூடூத் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஐபோனில் அதை pair செய்துக் கொண்டு பின்னே நடந்தான்.
“பெட்டி எல்லாம் காருல வச்சாச்சாங்க?”
“எல்லாம் வச்சாச்சு? கிளம்புறது தான் பாக்கி. நீங்க காருல உட்காருங்க. நான் கதவை எல்லாம் பூட்டிட்டு வரேன்.”
அப்பா அருணாச்சலம் நகர்ந்த உடனே அம்மாவின் காதை கடித்தான் இனியவன்.
“என்னம்மா அப்பா டை எல்லாம் அடிச்சு, பயங்கர மேக்கப்ல இருக்கார்?”
“அவரு ஊருக்கு போறோமேடா அதனாலயா இருக்கும்”
“ஒரு வேளை அவரோட ஸ்கூல் டைம் லவ்வர் அங்கே தான் இன்னும் இருக்காங்களோ என்னவோ”
“இருக்கலாம். அப்படி யாராவது இருந்தா நமக்கும் ஆட்டோகிராப் படத்தை நேருல பார்த்த மாதிரி இருக்கும்”
இது தான் அவனுக்கு பிடித்த அம்மா!!! எடக்கு மடக்காக பேசினாலும் வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு வராமல் அவனுடைய ஸ்டைலிலேயே பேசி கலாய்க்கும் அம்மா!
“ஆனாலும் அப்பா டை அடிச்சு முடியை கருப்பா ஆக்கினவுடனே நாலு வயசு கம்மியா தான் தெரியுறார். நீங்க லக்கிம்மா”
“ஆமாடா அது தான் குறைச்சல். ஏதாவது சொல்லிடுவேன். வாயை மூடிட்டு காருல ஏறி உட்காரு”
“நீங்களும் வாங்க”
“இரு உன் அப்பா வரட்டும்”
“அவர் வந்து உட்கார்ந்தா தான் நீங்களும் உட்காருவீங்களா? உங்க டூ மச் ரொமான்ஸ்க்கு அளவே இல்லாம போச்சு”
“அப்பா வரார். அவர் முன்னாடி இப்படி எதையாவது உளறி கொட்டி வைக்காத”
“ஜெயா, நீ ஏன் இங்கே நிக்குற? உன்னை காருல உட்கார சொன்னேன்ல? சீக்கிரம் உட்காரு”
ஜெயா இனியவனுக்கு பக்கத்தில் பின் சீட்டில் உட்கார, அருணாச்சலம் டிரைவருக்கு துணையாக முன் சீட்டில் உட்கார்ந்தார்.
“கிளம்பலாம் சங்கர். இப்போ கிளம்பினா நைட் பதினோரு மணி போல போய் சேரலாம். நடுவுல சாப்பிட எல்லாம் நிறுத்தினா பன்னெண்டு ஒரு மணி கூட ஆகும்”
இனியவன் சீட்டை ரெக்லைன் செய்து சாய்ந்துக் கொண்டான். மொபைல்