Chillzee KiMo Books - மன்னிப்பாயா??? - கோமதி : Manipaya??? - Gomathi

மன்னிப்பாயா??? - கோமதி : Manipaya??? - Gomathi
 

மன்னிப்பாயா??? - கோமதி

கோமதியின் எழுத்து வடிவில் ஒரு காதல் கதை.

 

தேவி... தேவி... நீ எங்க இருக்க? என்று கத்திகொண்டேயே அந்த பங்களாவின் கிச்சன்குள்  நுழைந்தான் அர்ஜுன்.

 

அய்யோ! இவர்க்கு இப்ப என்னதான் வேணும் என்ற எரிச்சலுடன் திரும்பி பார்த்தாள் தேவி. அர்ஜுனின் காதல் மனைவி.

 

தேவி, எல்லாம் ரெடியா இருக்குல்ல. இன்னும்  அரை மணிநேரத்துல  மாப்பிளை வீட்டுக்காரங்க வந்துடுவாங்கனு போன் பன்னிட்டாங்க என்று பதட்டத்துடன் கூறிய கணவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

 

இதோ பாருங்க எல்லாம் ரெடியா இருக்கு . நீங்க ஒரு பெரிய பிசினஸ்மென். இன்னைக்கு உங்க சிஸ்டர் ரஞ்சனியா பொண்ணு தானாய  பார்க்க வராங்க அதுக்கு என் இவ்ளோ பதட்டம்? நம்ம ரஞ்சனியோட அழகுக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கும் நீங்க கவலைப்படாதீங்க.

 

மாப்பிளை வீட்டுக்காரங்க நம்ம ரஞ்சனியா பார்த்ததும் ஓகே சொல்லப்போறாங்க பாருங்க. என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

 

ஐயோ....என்னோட பதட்டம் மாப்பிள்ளை வீடு பத்தினது இல்ல. ரஞ்சனி பத்தினது தேவி.

 

அவ காரணமேயே இல்லாம  அஞ்சு வருஷம் கல்யாணத்த தள்ளிப்போட்ட. இப்ப கூட அவ முகத்துல சந்தோஷமேயே  இல்ல. நமக்காக இந்த கல்யாணத்துக்கு ஓத்துட்டு இருப்பாளோணு பயமா இருக்கு என்று கவலையுடன் கூறிய கணவனின் வருத்தம் தேவிக்கும் புரிய தான் செய்தது.

 

ஆனால், இதைப்பற்றி பேசுவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று உணர்ந்தவள்....

 

இதோ பாருங்க, கல்யாண முடிஞ்சுட்டா  நம்ம எல்லாரையும் விட்டு போறத  நினைச்சு கூட ரஞ்சனி இப்படி இருக்கலாம். அவசரப்பட்டு, நீங்களா எதும்  யோசிக்காதிங்க. ரஞ்சனிக்கு அப்பா அம்மா இல்லை தான் . 

 

அந்த குறை தெரியக்கூடாதுனு நீங்களும் கவனமா அவள வளர்த்து  இருக்கீங்க.  இன்னைக்கு வரைக்கும் அவளும் என்ன ஒரு அண்ணியா பார்க்காம தோழி போல எல்லா விஷயத்தையும் ஷேர் பண்றா.

 

நம்ம ரஞ்சனி அழகா பார்த்துட்டு யாராவது வேணான்னு சொல்லுவாங்களா? அவளையே சொந்தமா (Flower) பிலோவேர் ஷாப் வச்சு பிசினஸ் செஞ்சுட்டு இருக்க.....அப்புறம் எதுக்கு கவலைப்படணும்.தேவை இல்லாம மனச போட்டு  குழப்பிக்காதீங்க.

 

போங்க போய் ஹால்ல எல்லாம் கரெக்ட் யா இருக்கான்னு பாருங்க. என்று கணவனை அனுப்பி வைத்தாள்.

 

ஆனால், தேவிக்கும் மனதின் ஓரத்தில் ரஞ்சனி மீது சந்தேகம் இருக்க தான் செய்தது.

 

தீடிரென்று, தேவியின் இடுப்பை இரு பிஞ்சு கைகள் வளைத்தது. பொறுமையாக, அந்த கைகளை விலக்கி அந்த கைகளுக்கு சொந்தக்காரியை பார்த்தாள்.

 

அவளின்  செல்ல மகள் அழகான பட்டு பாவாடை சட்டையில் நகைகள் அணிந்து கோபத்துடன் நின்று கொண்டு இருந்தாள்.அவளது பார்வையிலேயே கோபத்தை புரிந்து