Chillzee KiMo Books - முதன் முதலில் பார்த்தேன் - அமுதினி : Muthan muthalil paarthen - Amudhini

முதன் முதலில் பார்த்தேன் - அமுதினி : Muthan muthalil paarthen - Amudhini
 

முதன் முதலில் பார்த்தேன் - அமுதினி

குடும்பம், உறவுகள் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் ஒருவன். குடும்பமும் உறவுகளும் மட்டுமே ஜீவநாதமாக இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த ஒருத்தி. இவர்கள் இருவரையும் இணைக்கும் காலம், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உண்டாகும் மோதலும் காதலும் தான் இந்த 'முதன் முதலில் பார்த்தேன்".

 

முதன் முதலில் பார்த்தேன்

 

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

என்னை மறந்து எந்தன் நிழல் போகுதே

 

சென்னை , ஈசிஆரில் இருக்கும் ஒரு பெரிய பங்களா.

"நான் சரியா இன்னும்  பதினைந்து நிமிஷத்துல அங்க இருப்பேன். அதுக்குள்ள என் டேபிள் மேல அந்த பைல் இருக்கணும். அது உங்க பொறுப்பு மிஸ் ஆனந்தி" ஆங்கிலத்தில் யாருக்கோ கட்டளையை பிறப்பித்த வண்ணம் டைனிங் டேபிளை நோக்கி வந்தான் ப்ரித்வி. அவன் குரலை உயர்த்தமாட்டான். ஆனால் அந்த குரலில் ஒரு கடுமை இருக்கும். அது கேட்பவரை எதிர்கேள்வி கேட்கவிடாது.

"டிபன் ரெடியா?" நிற்கும் வேலையாளிடம் கேட்டபடியே அமர்ந்தான்.

ஒரு பதட்டத்துடனேயே இட்லியை பரிமாறி சட்னி சாம்பார் வைத்தார் வேலை செய்பவர். ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தவன் அடுத்த பத்தாவது நிமிடம் "ப்ரித்வி குரூப் ஆப் கம்பெனிஸ் " என்ற பெயர் பலகையை தாங்கிய அந்த பத்து அடுக்கு கட்டிடத்தின் முன் காரில் வந்து இறங்கினான். உள்ளே நுழைந்ததும் அவனுடன் இணைந்து நடந்த அவனின் உதவியாளர் ரவியிடம் அன்று நடக்க வேண்டிய சந்திப்புகள், முடிக்க வேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டபடி நடக்க, அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து அவன் பின்னே ஓடினான் ரவி. அந்த லிப்ட்டில் இருந்து அவன் வெளியே வரவும் எல்லோரும் எழுந்து காலை வணக்கம் வைக்க, ஒரு சிறு தலை அசைப்போடு அதை ஏற்று கொண்டபடி நடந்தவன் ஆனந்தியின் அருகே வந்த போது  "என்ன ஆனந்தி  பைலை என் டேபிளில் வெச்சுட்டீங்களா?" என்று நின்று கேட்க, "எ ...எஸ் சார்" என்று பதற்றத்துடன் சொன்னவளிடம் "ஓகே நான் செக் பண்ணிட்டு கூப்பிடறேன்" என்று சொல்லி விலகி செல்ல, அதற்குள் வியர்த்திருந்த முகத்தை தன்னுடைய துப்பட்டாவால்  துடைத்து கொண்டு அமர்ந்தாள்  ஆனந்தி. உள்ளே வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவன், தன்னுடைய லேப்டாப்பை ஆன் செய்து விட்டு அங்கு வைத்திருந்த பைலை கையில் எடுக்க, அதை பிடுங்கினான் ரவி.

"என்னடா உன் பிரச்சனை?" கையில் இருந்த பைலை பிடுங்கிய எரிச்சலில் ரவியை முறைத்தான் பிருத்வி.

"இங்க பாரு இந்த கம்பெனில இருக்கறவங்க வேணா நீ முறைக்கிறதுக்கு பயப்படலாம். ஆனா நான் பயப்பட மாட்டேன். அது உனக்கும் தெரியும் அப்பறம் ஏன் தேவை இல்லாமல் இதெல்லாம் ட்ரை பண்ற?" என்றபடி அவனின் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் ரவி.

"எனக்கு நெறைய வேலை இருக்கு ரவி. டோன்ட் வேஸ்ட் மை டைம் " என்றபடி ரவியின் கையில் இருந்த பைலை பிடுங்கி படிக்க துடங்கினான்.

"டேய்...என்னடா...எப்போ பாரு வேலை. இந்த வீக் நம்ம காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லாம் மூணாறு ட்ரிப் போறோம்னு சொன்னேன்ல. நீ வர்ற . இங்க ஆபீஸ்ல  பனிரெண்டு மணி நேரம் இருக்க, வீட்டுக்கு போனா சாப்டுட்டு மறுபடியும் வேலை பாக்கற. நீ தூங்கறியா இல்லையானு கூட தெரியல. அய்யாவு ரொம்ப பீல் பன்றாரு தெரியுமா? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ ப்ரித்வி. எதுக்கு இவ்ளோ ஸ்ட்ரெஸ் ? "  உண்மையான வருத்ததுடன் ரவி சொல்ல, "நான் அய்யாவு கிட்ட பேசிக்கிறேன். நீ இப்போ  கிளம்பு. அப்பறம் அந்த கேசவன் கிட்ட பேசு. இன்னும் ஸ்டாக் டெலிவெரி ஆகலைனு சொல்லு." என்றவன் அவன் வேலையை பார்க்க, "டேய் உனக்கு எமோஷன்ஸ்ஸெ இல்லையாடா. எப்போ பாரு மெஷின் மாதிரி....என்னமோ பண்ணு " என்றபடி ரவி அந்த அறையை விட்டு வெளியேறினான்.

இரவு மணி பத்து. தனது அறையில் இருந்து வெளியே வந்தான். அவன் கீழே வந்து நிற்கவும் கார் அவன் முன் வந்து நின்றது. உள்ளே ஏறி அமர்ந்தவன் தலையை பின்னால் சாய்த்து கண்களை மூடி அமர்ந்தான்.

விலையுர்ந்த அந்த வெளிநாட்டு கார் அந்த சாலையில் வழுக்கி கொண்டு சென்றது.

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்

மெல்லிய சத்தத்தில் காரில் ஒலித்தது அந்த பாடல். மெல்ல நிமிர்ந்து டிரைவர்