யானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி : Yaanum neeyum evvazhi arithum - Sagampari
 

யானும் நீயும் எவ்வழி அறிதும் - சாகம்பரி

தலைப்பு: யானும் நீயும் எவ்வழி அறிதும்… அப்படியென்றால்… நானும் நீயும் எந்த வழியாக ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்?... அதாவது இந்த காதல்தானே நம்மை இணைத்து வைத்தது. இருவருக்கிடையே அறிமுகம் ஏற்படவும்…அன்பு ஏற்படவும்… உறவு ஏற்படவும் ஏதாவது ஒரு ஆரம்பம் வேண்டுமல்லவா? அந்த ஆரம்பம் எது?

சில சமயம் உறவின் முறையில் இருக்கலாம்…

சில சமயம் நட்பின் அடிப்படையில் இருக்கலாம்..

அவர்கள் இருப்பிடத்தை பொறுத்தவரை அண்டைவீடு இருக்கலாம்.... அடுத்த தெருவாக இருக்கலாம்… பக்கத்து ஊராக இருக்கலாம்… அண்டை மாநிலமாக இருக்கலாம், அட, அடுத்த தேசமாகக் கூட இருக்கட்டுமே. ஆனால் அடுத்த உலகமாக இருந்தால்…

அச்சோ… உள்ளூர் காதல் கலவரத்தையே சமாளிக்க முடியவில்லை… இதில் இவர்களை எப்படி சமாளிப்பது?

ம்… புரிந்திருக்குமே? ஆமாம் இரண்டு வெவ்வேறு உலகங்களை சார்ந்தவர்கள் இணையும் கதைதான்…

பட்… ட்ரஸ்ட் மீ! மாறுபட்ட உலகின் வேறுபட்ட எதிக்ஸ்…. எண்ணங்கள்… அறிவியல் சிக்கல்கள்… வேற்றினத்தின் மீதான வெறுப்பு… இத்தனையும் தாண்டி எப்பவும் நம்ம ஓட்டு காதலின் வெற்றிக்குத்தான்!

அப்படியே ப்ளாக் ஹோல், வார்ம் ஹோல், பரலல் யுனிவர்ஸ், டைம் டைலேஸன் போன்ற விண்வெளி விசயங்களை தெரிந்து கொள்வோமா…

ஐன்ஸ்டைன் மற்றும் விண்வெளி இயற்பிலார் ஸ்டிஃபன் ஹாக்கின்ஸின் நிருபிக்கப்பட்ட… நிருபிக்கப்படாத.. தியேரிகளை உதவி கொண்டு ட்ராவல் செய்யலாமா?.

அன்புடன்

சாகம்பரி

 

அத்தியாயம் - 1

மில்கிவே காலக்ஸி! காலக்டிக் க்வாட்ரண்ட்-1.. சஜிடோரஸ் ஆர்ம்… மத்தியில் இருக்கும் பாதி எரிந்த சூரியனை சுற்றி வரும் மின்வரோ கிரகம்! (நம்முடையது ஓரியன் ஆர்மில் இருக்கும் சூரியன். கிட்டதட்ட 48  ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது)

குளிர் சூழ்ந்திருந்த காலை  நேரம்… இன்னும் மின்வரோவின் சூரிய நட்சத்திரம் தன்னுடைய முழு முகத்தையும் வெளி காட்டவில்லை! இரவின் கருமை இன்னும் கொஞ்சம் பரவியிருக்க… மேகங்கள் மிதந்த வானம் மெல்ல நீலம் பூக்க ஆரம்பித்தது!

சாம்பல் நிற மெட்டல் சாலையில் வழுக்கிக் கொண்டு வந்து நின்ற சிறிய ரக வெள்ளை நிற ஷட்டில் ஷிப்பிலிருந்து ஹனிகா இறங்கினாள்!

நேராக ஷட்டிலில் இருந்து ப்ளாட்ஃபாரத்தில் கால் வைத்தவள், துள்ளு நடைபோட்டு தன்னுடைய அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இறுக்கமான லெதர் சட்டை… இடையில் லெதர் பேண்ட்… கொஞ்சம் குதிகால் உயர்ந்த காலணிகள்… அத்தனையும் பழுப்பு நிறத்தில் இருந்தன. யூனிஃபார்ம்!

அங்கே யூனிஃபார்ம் என்பது அவர்கள் பார்க்கும் வேலையின் முக்கியத்துவத்தை சொல்லிவிடும்! ஆண் பெண் அனைவரும் யூனிஃபார்மாக மேல்சட்டை… கால்சட்டை என அணிந்திருந்தாலும்  நிறத்தில் வேறுபாடு இருந்தது!

அடர்ந்த நீல நிறம் சட்டம் ஒழுங்கு தொடர்புடைய துறையினருக்கும்,

வெள்ளை நிறம் மக்கள் சேவை சார்ந்தவர்களுக்கும் – மருத்துவர், போக்குவரத்து ஷட்டில் ஓட்டுனர்கள், மக்களுக்கான ஆலோசகர்கள், உணவுத்துறை சார்ந்தவர்கள் இதில் அடங்குவார்கள்.

இளஞ்சிவப்பு நிறம் சுற்று சூழல் துறையை சார்ந்தவர்களுக்கும்…

ஓகே…  ஓகே… ஹனிகா அணிந்திருந்த பழுப்பு நிறம் எந்த துறை என்று கேட்கிறீர்களா? அது விண்வெளித் துறை சார்ந்தது. ஸ்பேஸ் சென்டரில் வேலை செய்பவர்கள்…. விண்வெளி பாதுகாப்பு படையை சார்ந்தவர்கள்… ஸ்பேஸ் உளவுத்துறையில் இருப்பவர்கள்  அணிவது.

ஹனிகா ஒரு ஸ்கை-போலீஸ்! ஒரு ஸ்பேஸ் சென்டரில் வேலை செய்கிறாள். விண்வெளியை வேவு பார்க்கும் ஒரு பீக்கானின் உதவியுடன் அந்த சென்டரின் ஆளுகைக்குட்பட்ட விண்வெளியில் வரும் ஒலியலைகளை பதிவு செய்வதுதான் அவளுடைய வேலை. பீக்கான் என்றால் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு எலெக்ட்ரானிக் கருவி! அது அதை கடந்து செல்லும் ஒலியலைகளையும் ஒளியலைகளையும் கண்டுபிடித்து   ஸ்பேஸ் சென்டரில் உள்ள டெலெஸ்கோப்பிற்கு அனுப்பி வைக்கும். அங்கிருக்கும் பிரிண்டர் அந்த செய்தியை பதிவு செய்து விடும்.

ஸ்பேஸ் சென்டரில்  தன்னுடைய அறைக்குள் நுழைந்தபோது எதிரில் மைக் வந்தான்.

“மைக் ஏதாவது செய்தி இருக்கிறதா?” என்றாள்.

இரவு உறக்கம் விழித்த கண்களுடன் இருந்த மைக் “ஒன்றும் இல்லை! அதே கடகடா… தடதடா என்ற பிரிண்டிங் சப்தம்தான்…”

“விண்வெளியில் ஏதாவது விண்கற்கள் மோதிக் கொண்டேதான் இருக்கின்றன. அந்த ஓசையும் விண்மீன் கூட்டத்தில நடைபெறும் மோதல்களினால் புது நட்சத்திரம் பிறக்கும் ஓசைகளும்  நம்முடைய காலக்ஸியையும் தாண்டி இங்கு வரும். அந்த ஒலியலைகளை இரவு பகல் பாராமல் பதிவு செய்து கொண்டேதான் இருக்கிறோம். ரொம்பவும் போரடிக்கும் வேலையாக இருக்கிறது.” அலுத்துக் கொண்டாள்.

“சத்தம் போட்டு பேசாதே.  நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய முக்கியமான துறையில் வேலை பார்க்கிறோம். இந்த வேலை கிடைக்க நாம் எத்தனை கடினமான பரிட்சைகளை கடக்க வேண்டியிருந்தது.”

“ம்…  நான் இந்த வேலைக்காக முயற்சிக்கவில்லை. ஸ்பேஸ்-கார்ட் வேலைக்காகத்தான் அத்தனை முயற்சியும் எடுத்தேன். தற்காப்பு பயிற்சி… ஸ்பேஸ்ஷிப் பைலட் பயிற்சி… விண்வெளியில் ஜீரோ ஈர்ப்பு விசையில் நடக்கும் ஸ்கை-வாக் பயிற்சி…  ஜீரோ அட்ரினலின் பயிற்சி  அத்தனையும் கடினமாக செய்தேன். ராங்க் இரண்டு…”

“ஹனி! எடுத்த உடன் உனக்கு ஸ்பேஸ்-கார்ட் வேலை கிடைக்காது. முதலில் ஸ்கை-போலிஸ் போஸ்டிங்தான் கிடைக்கும். நம்முடைய ப்ரொஃபைல் பாயிண்ட் ஏறினால் அடுத்தடுத்த லெவல் செல்லலாம்.”

“என்ன சொன்னாலும்… என் கனவெல்லாம் ஸ்பை-ஷட்டிலில் ஏறி ஸ்பேஸில் பயணித்து… அந்த ஆன்ட்ரமீடா ஏலியன்ஸ்… ஸ்பேஸ் பைரேட்ஸை அடித்து