வண்டிகளின் ஹாரன் சத்தங்களுடன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் தெரு, சுற்றி இரு புறமும் பெரிய பெரிய மரங்கள், ஆங்காங்கே சிறு சிறு கடைகள், சற்றே தள்ளி ஓரளவு பெரிய கோவில் மற்றும் கல்யாண மண்டபம். இவைகளுக்கு இடையே அமைந்துள்ளது அந்த அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி. பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி என்பதால் கூச்சல்கள், ஆராவாரம் இல்லாமல் அமைதியாய் இருக்கும் என்று நாம் எண்ணினால் அது தவறு. வௌவாள்கள் எழுப்பும் சத்தம் போல் எப்பொழுதும் அங்கே கூச்சல்களுக்கு குறைவில்லை.
அப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் படித்து வருபவர்கள் தான் நம் கதையின் நாயகிகள் “ப்ரியாவும் நர்மதாவும்”. அவ்விருவரும் காதலர்களே தோற்று போகும் அளவுக்கு அன்யோனமான தோழிகளாக இருந்தனர். இருவரும் எவ்வாறு இப்படி இணைபிரியா தோழிகளாயினர் என்பது காலப்போக்கில் அவர்களே மறந்து போயினர், அவர்கள் தோழிகள் கூட்டமும் நினைவில் வைத்திருக்கவில்லை. அவர்கள் நட்பு பற்றி அந்த பள்ளிக்கு மட்டுமல்லாது அவர்களுடன் பயணித்த, பயணிக்கும் அனைவர்க்கும் தெரியும். எப்படி என்பதை சற்று விரிவே பார்போம்..
அந்த வகுப்பில் மொத்தம் இருபது மாணவிகள். அவர்களில் நர்மதாவும், ப்ரியாவும் சேர்த்து மொத்தம் ஏழு பேர் ஒரு கூட்டாக இருந்தனர்.. ஆசிரியர்களே அவர்களுக்கு ‘அடங்காத ஜென்மங்கள்’ என்று பெயர் வைக்கும் அளவுக்கு அவர்கள் குறும்புத்தனங்கள் இருக்கும். ஒரு சில ஆசிரியர்கள் இது அவர்கள் வயதுக்கே உரித்தானது என்று கண்டும் கானாது இருந்து விடுவர். ஆனால் பெரும்பாலானோர் இவர்கள் செய்யும் சேட்டைகளை பொறுக்க முடியாமல் திட்டிக் கொண்டு தான் இருப்பர். அனால் அவர்களோ எதை பற்றியும் கவலைக்கொள்ளாமல் தங்கள் குறும்புத்தனங்களை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தனர். இவர்கள் ஏழு பேர்களும் சாப்பிடும் பொழுது, வெளியில் செல்லும் பொழுது, வகுப்பில் இருக்கும் பொழுதும் சரி பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் பொழுது சரி, எப்பொழுதும் ஒன்றாகவே இருப்பார்கள். ப்ரியாவும் நர்மதாவும் அக்கூட்டத்தில் ஒருவராய் இருந்தாலும் அவர்கள் மட்டும் தனியே தெரிவர். அவர்கள் தோழிகளும் இவ்விருவர் நட்பை மதித்ததால் அவர்கள் தனியே தெரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை.
பேருந்தில் பயணிக்கும் பொழுது ப்ரியாவும் நர்மதாவும் ஒரே இருக்கை கிடைத்தால் மட்டுமே உட்காருவர். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் இருவரும் ஒன்றாய் நின்று வருவரே தவிர பிரிந்து உட்கார்ந்தது கிடையாது. தோழிகள் கூட்டமாகச் சாப்பிடும் பொழுது இவர்கள் மட்டும் ஒருவருக்கொருவர் மாறி ஊட்டிக் கொள்ளவர். பாத்ரூம் செல்லும் போது கூட இருவரும் சேர்ந்தே செல்வர். இவர்கள் நட்பை பார்க்கும் அனைவர்க்கும் இந்த கேள்வி எழத்தான் செய்யும், அப்படி என்ன இவர்களுக்குள் இருக்கிறதென்று. ஒரு புறம் இவர்கள் நட்பை பார்த்து ஆச்சரியப்பட்டாலும், மறுபுறம் இவர்களின் நட்பைப் பார்த்து பொறமையும் கொண்டனர் அவ்வகுப்பிளுள்ள ஒருசிலர். அதற்காக சின்னச்சின்ன சதி செயல்களை செய்தும் பார்த்தனர். ஆனால் யாராலும் இவர்கள் நட்பை பிரிக்க முடியவில்லை. அதனால் மேலும் பொறாமைக்கொண்டு அவர்கள் அப்பள்ளி முழுவதிலும் இவர்கள் இருவரும் பெண் ஓரின சேர்க்கையாளர்கள் என்று சொல்லப்படும் ‘லெஸ்பியன்ஸ்’ என்று வதந்திகளை பரப்பி விட ஆரம்பித்தனர். அதன் பிறகு அனைவரும் மறைமுகமாகவும் இவர்களுக்கு முன் நேரகாவும் இவர்களைப் பற்றியும் இவர்கள் நட்பைப் பற்றியும் தப்பாக பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் ப்ரியா, நர்மதா மற்றும் அவர்கள் தோழிகள் கூட்டம் யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
எப்போதும் போல் அவர்கள் தங்கள் போக்கில் நல்ல தோழிகளாகவே இருந்தனர். காலப்போக்கில் அவர்களை பற்றி தப்பாய் பேசியவர்களே அவர்களின் நட்பை புரிந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள், நல்ல நட்புக்கு எடுத்துக்காட்டாய் இவர்கள் பெயரை கூறும் அளவுக்கு நட்பால் வளர்ந்து விட்டனர் இப்படி பல இடையூறுகளை கடந்து அழகிய தென்றலாய் சென்று கொண்டு இருந்த அவர்கள் நட்பின் இடையில் திடீரென்று சிறிய புயல் வீச தொடங்கி பின்னாளில் அதுவே பூகம்பமாக வெடித்து சிதறும் அளவுக்கு