Chillzee KiMo Books : கிரைம் சீன் - விவேக் : Crime Scene - Vivek

கிரைம் சீன் - விவேக் : Crime Scene - Vivek
 

கிரைம் சீன் - விவேக்

என் தாய் தந்தை ஆசிர்வாதத்துடன்

இப்புத்தகம் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கும் மற்றும்

நேர்மையான காக்கிச்சட்டைகளுக்கும் சமர்ப்பணம்

 

 

சீன் – 1

 

சதீஷ்

 

24-05-2018

 

“ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா??”

 

“ஆமா, ராஜாமங்கலம் போலீஸ் ஸ்டேஷன். என்னாச்சு?”

 

“சார், என் பேரு மணி. ஐயா எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்து வித்தியாசமான நாத்தம் அடிக்குது. வீட்டுக்கு வெளியே இருந்த கூப்பிட்டு பார்த்தேன், யாருமே வெளிய வரல. வீடே ரொம்ப அமைதியா இருக்கு. கதவு திறந்துதான் இருக்கு. ஆனா உள்ளே போக பயமா இருக்கு, அதான் உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி நீங்க வந்து பாத்துட்டீங்கனா”

 

“எந்த ஏரியா சொன்ன????”

 

“வீட்டு நம்பர் 10, செந்தில் நகர் 5வது குறுக்கு தெரு சார்”

 

“வர்ற வரைக்கும் யாரும் உள்ளே போக வேணாம் பாத்துக்கோ சரியா”

 

“சரி சார்”

 

கருப்பையா சப்-இன்ஸ்பெக்டர் பரதனிடம் ரிப்போர்ட் செய்தார்.  பரதன் கருப்பையாவை பார்த்து வருமாறு அனுப்பினார். கருப்பையா யமஹாவை மிதித்தார். தெருவை நெருங்கிய உடன் பல தமிழ்நாட்டு பிரஜைகளை பார்க்கமுடிந்தது, அந்தப் பிரஜைகளின் கண்களில் ஒரு ஆர்வம் இந்த வீட்டில் என்ன தான் பிரச்சினை நடந்திருக்கும் என்று ஆர்வத்துடன் கூட்டத்தில் எட்டி பார்த்துக் கொண்டிருந்தார்கள். கருப்பையா யமஹாவை நிறுத்திவிட்டு, கூட்டத்தின் அருகே சென்றார். கருப்பையாவை பார்த்தவுடன் கூட்டம் தானாக கலைந்தது.

 

“யார்யா இங்க மணி???”

 

“நான் தான் சார்”

 

“என்ன இந்த வீட்டுல இருந்துதான் நாத்தம் அடிக்குதா”

 

“போலீஸ் மூளையே மூளை தான் சார். எப்படி சார் கண்டுபிடிச்சிங்க?”

 

“யோவ், எனக்கும் மூக்கு இருக்குயா”

 

“இந்த வீட்ல யாரு இருக்காங்கன்னு தெரியுமா??”

 

“இந்த வீட்டுல சதீஷ்ன்னு ஒரு பையன் இருக்கான் சார். திருட்டு பையன். போலீஸ் கூட நிறைய தடவை அவனை கூட்டிட்டு போய் இருக்காங்க சார்”

 

“இந்த வீட்டுல அவனைத் தவிர வேற யாராவது இருக்காங்களா?"

 

“இன்னொருத்தன் இருக்கான் சார். பேரு ரவி. அவனும் இவன் கேஸ் தான் சார். ஆனா இப்ப கொஞ்ச நாளா இந்த பக்கம் ஆளக்காணோம் சார்”

 

"அவனோட சொந்த வீடா"

 

"இல்ல சார், ஓனர் அமெரிக்காவில் இருக்காரு. இவனுங்கள பத்தி தெரியாதனால வீடு குடுத்துட்டாரு"

 

கருப்பையா வீட்டுக்குள் செல்லாமல், வீட்டைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்தார். ஒரு மனித