Chillzee KiMo Books - நீ வருவாய் என… - அமுதினி : Nee varuvaai ena... - Amudhini

நீ வருவாய் என… - அமுதினி : Nee varuvaai ena... - Amudhini
 

நீ வருவாய் என… - அமுதினி

முன்னுரை

வணக்கம் நண்பர்களே! "நீ வருவாய் என..." இது ஒரு அழகான காதல் கதை. காதல் என்பது இரண்டு மனம் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. அது இரண்டு குடும்பங்களின் சந்தோஷம் சம்பந்தப்பட்டது. அதை உணர்ந்து காத்திருந்து தங்கள் காதலை எல்லோருடைய ஆசீர்வாதத்துடனும் நிறைவேற்றி கொள்ளும் போது கிடைக்கும் சுகம் பலமடங்கு. நந்தா-அபி, ஆதி- நந்து இந்த இரு ஜோடிகளின் காதலும் நட்பும் பாசமும் பிரிவும் தான் இந்த கதை.

இதை முதலில் தொடராக வெளியிட்ட சில்சீக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது இதை சில்சீ "KiMo"வில் பிரசுரிப்பதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி,

அமுதினி

 

அத்தியாயம் 1                  

       கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்

சென்னை 2015

பரந்து விரிந்த அந்த கல்லூரியின் ஒரு வகுப்பறை. கல்லூரியின் கடைசி வருடம் கடைசி செமஸ்டர். கல்லூரி மாணவர்களின் கூச்சலும் பேச்சும் சிரிப்பும் என கலகலத்து இருந்தது.  அந்த வகுப்பறையின் ஒரு ஓரத்தில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தபடி நந்து என்கிற நந்தினியும் அபி என்கிற அபிராமியும் அரட்டை அடித்தபடி இருந்தனர்.

அவர்களின் அரட்டைக்குள் நுழைவதற்கு முன்பு அவர்களை பற்றி ஒரு சிறு அறிமுகம். நந்துவும் அபியும் பள்ளியில் இருந்தே தோழிகள். அவர்களின் நட்பு கல்லூரியில் இன்னும் நெருக்கம் ஆனது. இருவரும் நல்ல வசதியான குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.

நந்து வீட்டில் செல்ல பெண். சுதந்திரமானவள். அவளின் வாழ்க்கையில் எல்லாமே அவளின் விருப்ப படியே இதுவரை நடக்கிறது. அவளை விட ஐந்து வயது மூத்த சகோதரன், பெயர் நந்தகோபால், மருத்துவம் படித்து இப்போது ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் பணி செய்கிறான். MS  படிக்க வேண்டும் என்பது அவன் விருப்பம்.

அபி வீட்டில் ஒரே பெண். ஒரே பெண், வசதியான குடும்பம் என்றாலும் அபியின் அம்மா மிகவும் கண்டிப்பானவர். கல்லூரி பிரின்சிபால் ஆக இருந்து பெண்ணை பார்க்க வேண்டும் என்று விருப்ப ஓய்வு பெற்று கொண்டார். அபி அதனாலேயே அப்பா செல்லம். பேஷன் டிசைனிங் படித்தாலும் அவளின் உடைகளில் எப்போதும் அம்மாவின் விருப்பமே முன்னிற்கும்.

இவர்களின் குடும்ப சூழ்நிலைகள் வேறாக இருந்தாலும் அழகில் இருவரும் ஒன்று போல. கல்லூரியின் இளவரசிகள். அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு காதல் கடிதங்கள் வந்ததும் உண்டு. (இவங்க ரெண்டு பேருடைய கண்ணு மூக்கு முழி எல்லாம் நான் வர்ணிக்க போவதில்லை. நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க உங்களுக்கு புடிச்ச மாதிரி :) )

இதோ இப்போதும் காதலை பற்றிய பேச்சு தான் ஓடிக்கொண்டு இருந்தது இருவருக்குள்ளும்.

"அடியே அபி நான் சொல்றதை கேளு. எல்லா விஷயத்துலையும் ஒரே மாதிரி யோசிக்கிற நாம கல்யாண விஷயத்துல மட்டும் எப்பவும் முட்டிக்கிறோமே... காதல் கல்யாணம் பண்ணிக்கோ... லைப் சும்மா ரொமான்டிக்கா போகும்.. சும்மா எப்ப பாரு அம்மா பார்த்த பையன் அப்பா பார்த்த பையன்னு மொக்கை போடாத " - நந்து

"நான் சொல்றதை நீ கேளு. நம்மளுக்கு என்ன அனுபவம் இருக்கு, நம்ம பார்க்கற இந்த லைப் எல்லாம் சந்தோஷம் மட்டும் தரது. ஆனா வெளிய இதையெல்லாம் தாண்டி நிறைய விஷயம் இருக்கு. என்னை பொறுத்த வரைக்கும் காதல் கத்தரிக்காய் எல்லாம் சுத்த வேஸ்ட். கத்தரிக்காய் குழம்பு கூட எனக்கு பிடிக்காது. நம்ம அம்மா அப்பா நமக்கு எல்லாம் சரியா தான் செய்வாங்க. சோ அவங்க சொல்றதை கேளு. " - அபி

"லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனா தான் ஒரு அண்டர்ஸ்டேண்டிங் இருக்கும். தெரியாத ஒருத்தனை எப்படி கட்டிக்கிறது? " -நந்து

"நம்ம அம்மா அப்பா சந்தோசமா இல்லையா? " - அபி

"சந்தோஷம் இருக்கு ஆனா ரொமான்ஸ் இருக்கா?" - நந்து

"அதெல்லாம் இருக்கு. உன்கிட்ட பேச முடியாது. புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்லுவ. இந்த பேச்சை விடு. ஆல்ரெடி எங்க வீட்டுல மாப்ள பார்த்துட்டு இருக்காங்க. செமஸ்டர் முடிஞ்சா உடனே கல்யாணம் தான். உங்க வீட்ல எப்படி? " -அபி

"நோ வே. நான் இன்னும் படிக்கணும். லவ் பண்ணனும். கொறைஞ்சது ஒரு மூணு வருஷம் ஆகும். எப்படியும் நீ என் கல்யாணத்துக்கு புள்ளை குட்டியோட தான் வருவா" - நந்து

"ச்சி, கல்யாணமே ஆகல இதுல புள்ளை குட்டி வேற..உனக்கு வர வர வாய் நீளமாயிடுச்சு... பேச்சை குறை பேச்சை குறை"  - அபி

கலகலத்தபடி தங்கள் பேச்சை தொடர்ந்தனர் இருவரும்.

அபி கூறியதை போலவே அவரின் அம்மா வீட்டில் ஒரு மேசை நிறைய மாப்பிளைகளின் போட்டோக்களை வைத்து அலசி கொண்டிருந்தார். வீடு திரும்பிய கதிரவன் தன் மனைவி அமர்ந்திருந்த கோலத்தை கண்டு ரசித்தவாறே உள்ளே நுழைந்தார்.

"என்ன சுஜி ஏதாவது இண்டெர்வியூ எடுக்க போறியா? " என்றபடி அவரின் அருகே