சூப்பர் ஜோக்ஸ் 02 - அனுஷா : Super Jokes 02 - Anusha
 

சூப்பர் ஜோக்ஸ் 02 - அனுஷா

வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்!

உங்களுடைய கவலை, வருத்தம், தனிமை, போர் என எதில் இருந்தும் தப்பிக்க இந்த சூப்பர் ஜோக்ஸ் கலக்ஷனைப் படியுங்கள்.

 

 

அது மச்சம் இல்லய்யா!!!!

ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.

கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி தான்.

ROTFL


இவர் மாவீரர்!!!!

மனைவி:

ஏங்க! உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலத்தான் அடிச்சுக்கோணும்.....!

கணவன்:

செருப்பு இந்தா இருக்கு.....! புத்திக்கு எங்கே போவ!!??

ROTFL


அது சரி!!!!

"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தா ன்னு சொல்றீங்க....

அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"

"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ இந்தச் சாமி தடுக்காம பார்த்துக் கிட்டுதானே இருந்துச்சு!"

ROTFL


நானா பொறுப்பு?

‘‘பரேஷன் பண்ணி எப்படியாவது எங்க அப்பாவைக் காப்பாத்திடுவீங்கன்னு நினைச்சேன்... ஏமாத்திட்டீங்களே டாக்டர்...’’

‘‘நல்ல கதையா இருக்கே... நீங்களே வீணா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா பொறுப்பு?’’

 

ROTFL


இது தாங்க விதி

ஆபிஸ் போற அன்னைக்குலாம் 9 மணி வரைக்கும் தூக்கம் வரும்

சண்டே மட்டும் ஏழு மணிக்கு மேல வராது

- இது தாங்க விதி

 

ROTFL


ரூல்ஸ்ன்னா ரூல்ஸ் தான்

நீச்சல் செல்ல தயாரான ஒரு பெண்ணை தடுத்து நிறுத்திய அதிகாரி,

“இங்கே நீச்சல் அடிக்க கூடாது மேடம்...” என்றார்.

எரிச்சலடைந்த அந்த பெண்,

“நான் டிரஸ் சேன்ஜ் செய்றதுக்கு முன்னாடியே இதை சொல்லி இருக்கலாமே!” என்று கோபத்துடன் கேட்டாள்.

“அதுக்கு எல்லாம் தடை இல்லை மேடம்... நீச்சல் அடிக்க மட்டும் தான் தடை...!”

 

ROTFL


என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

மனைவி : நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

கணவன் : அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!

ROTFL


கணவன் என்பவர், எது மாதிரி தெரியுமா?

ஒரு குடும்பத்துல கணவன் என்பவர் நம்ம வீட்டுல இருக்க ஸ்ப்லிட் ஏ.சி மாதிரி!

வெளியே எவ்வளவு சவுண்ட் கொடுத்தாலும், வீட்டுக்குள்ளே அமைதியா இருக்குற மாதிரி தான் வடிவமைக்கவே பட்டவர்!

ROTFL


மனைவி கணவன் கவனத்தை கவர...!

'மேரேஜோ'பீடியா செய்தி #156791345

மனைவி அவங்க கணவன் கவனத்தை கவரனும் என்றால், சோகமாகவும், கஷ்டப்படுவது போலவும் இருக்கனும்!

அதே ஒரு கணவன் தன்னோட மனைவியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றால், குஷியாகவும், சந்தோஷமாகவும் இருக்கனும்.

இதெல்லாம் டிசைன்லேயே அப்படி தான்!

ROTFL


மனைவின்னாலே கூல்...!

ரு கணவன் மனைவி இடையேயான சின்ன கருத்து வேறுபாடு ஊதி ஊதி பெரிதாகிக் கொண்டிருந்தது...