Chillzee KiMo Books - பார்வையை திருத்து! - ரவை : Paaravaiyai thiruthu! - RaVai

பார்வையை திருத்து! - ரவை : Paaravaiyai thiruthu! - RaVai
 

பார்வையை திருத்து! - ரவை

ரவை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு - 5

 

குறையொன்றுமில்லை!

" இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! புதிய ஆண்டு உங்களிருவருக்கும் உடல்நலத்தோடு, குழந்தைப் பேறு கிடைக்கவும் வழி செய்யட்டும்!"

"புத்திர பிராப்திரஸ்து!"

 இப்படி எல்லா வாழ்த்துக்களுமே, அவர்களுக்கு குழந்தை இன்னமும் பிறக்காத உண்மையை, சுட்டிக்காட்டுவதாகவே இருந்தன.

 "நீலா! வருத்தப்படாதே! கடவுள் ஒருநாள் கண் திறப்பான்!"

என்று சாரதாம்மா, மருமகளுக்கு ஆறுதல் கூறினாள்.

 " அம்மா! வருத்தமா! எனக்கா? எதுக்கு? எனக்கென்ன குறை? பெற்ற தாயைவிட பாசமா பார்த்துக்க நீங்க இருக்கீங்க, வேற யாருக்குமே கிடைக்கமுடியாத அன்பான கணவனா, உங்க மகன் திலீப் என்னை தன் கண்ணுக்குள்ளே வைச்சு பார்த்துக்கிறார், நான் அவருக்கு குழந்தை, அவர் எனக்கு குழந்தை, எங்க ரெண்டு பேருக்குமே நீங்க குழந்தை! நமக்குள்ளே கொஞ்சி மகிழவே, காலம் போதாது.........."

 முகத்தில் முழு மலர்ச்சியுடன், நீலா அருகில் வந்து, தன்னை அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சியபோதிலும், சாரதாம்மாவின் மனதின் ஒரு மூலையில் நெருடல் இருக்கத்தான் செய்தது.

 நீலா-திலீப் திருமணம் காதல் திருமணம் அல்ல; பெற்றோர் பார்த்து நிச்சயித்தது! கல்யாணத்துக்கு முன்பு, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதுகூடக் கிடையாது.

 பத்து வருஷம் ஓடிவிட்டன. இடைக்காலத்தில், என்னென்னவோ நடந்துவிட்டன.

 திலீப், ஒரு தமிழ் பேராசிரியர்! ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைவான், கதை எழுதுவான், இலக்கிய பேருரை நிகழ்த்துவான்!

 நீலா ஆங்கில விரிவுரையாளர்!

அவளுடைய பொழுதுபோக்கு, திலீப் எழுதும் கதைகளை படித்து ரசித்து பாராட்டுவது, ஓவியங்களை பார்த்து வியந்து ஓவியன் திலீபை கட்டியணைத்து கொஞ்சுவது, அவனுடன் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்று அவன் உரையைக் கேட்டு மகிழ்ந்து கைதட்டி பாராட்டுவது, மற்றவர் பேசியதை விமரிசனம் செய்வது, தமிழ் இலக்கியங்களை ஆங்கில இலக்கியங்களோடு ஒப்பிட்டு திலீபுடன் கருத்துப் பரிமாறுவது,......!

 வீட்டுவேலைகளையும் கூடவே தானே செய்வாள், சாரதாம்மாவின் தேவைகளையும் கவனித்துக்கொள்வாள்!

 திலீப், நீலாவுக்கு, சமையல் உட்பட, எல்லா வேலைகளிலும் உதவி செய்வான். மூவருமாக சேர்ந்து, தொலைக்காட்சியில், பக்தி, ராசிபலன், செய்திகள், நகைச்சுவை, சீரியல், பாட்டு, நடனம், பக்திபிரசங்கம், எல்லாவற்றையும் ரசிப்பார்கள்.

 பொறாமைப் படக்கூடிய அளவுக்கு சந்தோஷமாக இருந்த வாழ்க்கையில், யார் கண்பட்டதோ, நீலாவின் பெற்றோரால், மனக்கசப்பு உள்ளே புகுந்து, நிலவியிருந்த மகிழ்ச்சியை குலைத்தது!

 "மாப்பிளே! குடும்பத்தோட, நம்ம குலதெய்வம் சுவாமிமலை, வைத்தீஸ்வரன்கோவில், பக்கத்திலே உள்ள திவ்யஸ்தலங்களை தரிசனம் பண்ண ஏற்பாடு பண்ணியிருக்கேன், உங்களுக்கும், நீலாவுக்கும் விடுமுறை நாட்கள்தானே, உங்க அம்மாவுடன் நீங்க ரெண்டுபேரும் எங்களோட பயணத்திலே சேர்ந்துக்குங்க, சரியா?"

" மாமா! எங்கம்மாவை கட்டாயம் அனுப்பிவைக்கிறேன், அம்மாவும் ரொம்பநாளா கோவில்,குளம் போகணும்னு சொல்லிண்டிருக்கா,.....ஆனா, நீலாவும் நானும் பெரிய இலக்கிய மாநாடுஒண்ணு ஏற்பாடு பண்ணிண்டிருக்கோம், எங்களுக்கு மூச்சுவிட நேரமில்லை, சென்னையிலே இருந்தே ஆகணும், அமைச்சர்கள் கலந்துக்கறாங்க, பெரிய விழா, உங்களுக்கும் அழைப்பு அனுப்பறோம், நீங்களும் கட்டாயம் கலந்துக்கணும், அதனாலே, தப்பா நினைச்சுக்காதீங்க, நாங்க ரெண்டுபேரும் சேர்ந்துக்க முடியாது..........."

" அதில்லே மாப்பிளே! நம்ம குடும்பத்திலே நல்லது நடக்கணும்னு வேண்டுதலோடு ஏற்பாடு பண்ணியிருக்கேன், நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன், அதனாலே, நீங்க ரெண்டுபேரும் அவசியமா வரணும்........."

" மாமா! நீங்க சொல்றது ரொம்ப சந்தோஷமாயிருக்கு, எங்களுக்கு நல்லது, கெட்டது சொல்லி வழிநடத்தற பெரியவங்க, எங்கப்பா இல்லாத காரணத்தாலே, நீங்கதான் இப்ப இருக்கீங்க, .......என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தீங்கன்னா, எங்களுக்கு சௌகரியமான தேதிகள் தெரிவிச்சிருப்போம்..........."

" மாப்பிளே! மூணே நாள்தான்! வெள்ளிக்கிழமை விடியற்காலை காரிலே கிளம்பி,