கண்டேன் என் காதலை... - பத்மினி செல்வராஜ் : Kanden En Kadhalai... - Padmini Selvaraj 

கண்டேன் என் காதலை... - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

அனைவருக்கும் வணக்கம்..

இதுவரை என் கதைகளை படித்து ஆதரவும் உற்சாகமும் அளித்து வரும் சில்சீ நட்பூக்களுக்கு நன்றி..

தொடர் கதையோடு நாவல் எழுதும் வகையில் அடுத்ததாக கண்டேன் என் காதலை என்ற எனது இரண்டாவது நாவலுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..

கதையை பற்றி??

காதலின் மகிமையை உணர்த்த, அந்த சிங்கார வேலன் ஆடும் திருவிளையாடலே இந்த கதை..

இரண்டு காதல் ஜோடிகளுக்கு இடையில் குழப்பத்தை கொண்டு வந்து அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு அந்த வேலன் ஆடும் ஆட்டம் தான் கதையின் போக்கு.. இந்த ஆட்டமும் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்...

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!!

 

அத்தியாயம்-1

காலையில் எழுந்ததில் இருந்தே ஒரு நொடியும் அயராமல் சுறுசுறுப்பாக தன்வேலையை செய்து வந்த அந்த ஆதவன் களைப்புற்று இழைப்பாற  எண்ணி தன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்....

அவன் களைப்புற்றதால் அவனை சார்ந்து வாழும் அனைத்து ஜீவராசிகளும் களைத்து போய் அவர்களும் தத்தம் உறைவிடத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்...

அந்த ஆதவனின் பொன்னிற கதிர்கள் பூமியில் பட்டு சிதற, மஞ்சள் போர்வையை விரித்து போட்டதை போல அந்த நொடி எல்லாம் மஞ்சளால் தகதகத்து மின்னியது...

அதை கூட நின்று ரசிக்க நேரமில்லாமல் எல்லாரும் காலில் சக்கரத்தை  கட்டினதை போல பறந்து கொண்டிருந்தனர்...

அந்தி சாயும் அந்த நேரத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த தனியார் நிறுவனம்...

Abi Software and Solutions என்று எழுத்துக்கள் பொறிக்கபட்டிருந்த அந்த பெயர் பலகையும் அந்த மஞ்சள் வெய்யிலில் தகதகத்து மின்னியது...

 ஏழு வருடங்களுக்கு முன்னால் தனி ஒருவனால் ஆரம்பிக்கப்பட்டு கிடுகிடுவென வளர்ந்து இன்று பத்தாயிரம் பேருக்கு மேலாக வேலை செய்யும் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள  மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளாது...

சென்னையில் முக்கிய IT ஹப் ஆன TIDEL Park ல் ஐந்தடுக்கு தளத்தை கொண்டு அமைந்து இருந்தது அந்த கட்டிடம்....

முன்பு ஒரு தளத்தில் மட்டும் ஆரம்பித்த Abi Software and Solutions  நிறுவனம் அந்த நிறுவனத்தின் உரிமையாளனின் இரவு பகல் பாராத கடின உழைப்பால் கிடுகிடுவென உயர்ந்து இன்று ஐந்து தளங்களையும் தனதாக்கி கொண்டது..

நேரம் மாலை 7 ஐ கடந்ததும் அதன் பரபரப்பு மெதுவாக அடங்குகிறது...

அதுவரை சுறுசுறுப்பாக வேலை பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வேலை நேரம் முடிய, அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த மடி கணினியை நிறுத்தினர்... 

அதை  மூடி தங்கள் லேப்டாப் பேக் ல் வைத்து மூடி அதை எடுத்து தங்கள் பின்னால் மாட்டி கொண்டு பாட புத்தக மூட்டையை சுமந்து பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை போல முதுகில் அதை சுமந்து கொண்டு அருகில் இருந்தவர்களுக்கு பை சொல்லி விடை பெற்று கிளம்பி சென்றனர்...

ஒவ்வொருவராக வெளியேறி இருக்க, இறுதியில் அந்த நிறுவனமே வெறிச்சோடி இருந்தது...

ஆனால் அந்த நிறுவனத்துக்கு உரிமையாளனோ வீட்டுக்கு கிளம்பும் எண்ணமே இல்லாமல் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

இதே மாதிரிதான் கடந்த நான்கு  மணி நேரமாக நடந்து கொண்டிருக்கிறான் அவன் பிரச்சனைக்கு விடையை தேடி. கால்கள் தான் வலி எடுத்ததே தவிர, விடை ஒன்றும் கிடைக்கவில்லை...

அவன் முன்னே இருந்த  மேசையில் அந்த நிறுவனத்தின் கால் ஆண்டு முடிவுகள் வெளி வந்திருந்தது...வழக்கத்தையும் விட  இந்த முறை அதிகம் லாபம் வந்திருந்தது.

கம்பெனி ஊழியர்களுக்கெல்லாம் பயங்கர சந்தோஷம். ஆனால் அவனுக்கோ அதை கொண்டாடும் மனநிலையில் இல்லை. அவன் எண்ணம் எல்லாம் எப்படி இந்த பிரச்சனையை தீர்ப்பது என்றே சுற்றி வந்தது.

தனி ஆளாக ஆரம்பித்து அந்த கம்பெனியை இவ்வளவு தூரம் கொண்டு வந்தவன், தொழிலில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு கண்டவன், தன் சொந்த வாழ்வில் ஒரு  பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் குழம்புகிறான்....

“சே, எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. இவ்வளவு நாள் காத்திருந்தவங்க இன்னும் ஒரு மாதம் காத்திருந்திருக்க கூடாதா??” என்று தன் அன்னையை மனதுக்குள் திட்டி கொண்டிருந்தான்....

அந்த நேரம் அவன் அலைபேசி ஒலிக்க, எரிச்சலுடன் அதை எடுத்து பார்க்க,

“Amma Calling…” என்று  ஒளிர்ந்தது அதன் திரையில்...

“speak of the devil, devi is here..”  என்பதை போல தன் அன்னையை திட்டி கொண்டிருக்க, அவரே அவனை அழைத்திருக்க, தன் கோபத்தையும் மீறி அவன் உதட்டில் தானாக புன்னகை அரும்பியது....

அதே உதட்டில் மின்னும் புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்று தன் அலைபேசியை  காதில் வைத்தான்....

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க மா..... “ என்றான் தன் ஆத்திரத்தையெல்லாம் மறைத்து கொண்டு.....

“என்னத்தை சொல்றது?? நீ தான் டா சொல்லணும்... ஆபிஸ் ல இருந்து கிளம்பிட்டியா?? இல்ல இன்னும் அங்கதான் குப்பை கொட்டிகிட்டிருக்கியா?? “ என்றார் சற்று கோபமாக அவன் அன்னை பாக்கியம்....

“ஹ்ம்ம்ம் கிளம்பிகிட்டே இருக்கேன் மா.... சரி இப்ப எதுக்கு கால் பண்ணினிங்க ..